பேச்சு:மரியகிரி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

notability வார்ப்புருவை இட்டவருக்கு, கூகுளில் தேடினால் notabilty எவ்வாறு உள்ளது என்பது தெரிய வரும். delete வார்ப்புருவை இட்டவருக்கு, எதற்காக இக்கட்டுரையை நீக்க வேண்டும் எனக் கோருகிறீர்கள்?--Kanags \உரையாடுக 21:06, 11 மே 2014 (UTC)[பதிலளி]

Kanags, புனித விண்ணேற்பு அன்னை ஆலயம் மரியாகிரி என்று கூகுளில் தேடினால் 7 முடிவுகள் கிடைக்கின்றன. இவை அனைத்தும் விக்கிப்பீடியா தொடர்புடையவை. தமிழ் (அல்லது தமிழைப் போன்ற மொழிகள்) சூழலைப் பொருத்தவரை, கூகுள் முடிவுகளை வைத்து மட்டும் நாம் குறிப்பிடத்தக்கமையை நிறுவுவதில்லை. ஆனாலும், விக்கிப்பீடியாவுக்கு வெளியே எங்கேயும் இப்பெயர் தமிழ் இணையத்தில் பதிவாகவில்லை என்பது இதன் குறிப்பிடத்தக்கமை குறித்து கேள்வி எழுப்புகிறது. ஆங்கிலத்தில் இது குறித்து தேடிய போது, இது Our Lady of Assumption என்ற பெயரில் அமைந்துள்ள முகநூல் பக்கத்துக்கும் வலைப்பதிவுக்கும் இட்டுச் செல்கின்றன. இதன் குறிப்பிடத்தக்கமையைச் சுட்டும் வேறு தரவுகள் ஏதும் கிடைக்கவில்லை. மரியாகிரி என்ற இவ்வூரில் இரண்டு கல்லூரிகள் உள்ளன என்பதைத் தவிர இணையத்தில் பெரிதாக தகவல் சிக்கவில்லை. ஆங்கில விக்கிப்பீடியாவில் மரியாகிரி குறித்த கட்டுரை ஏதும் இல்லை. ஏராளமான கோயில்கள் நிறைந்துள்ள நம் உலகில், பொதுவாக கோயில்களின் குறிப்பிடத்தக்கமை வரையறை குறித்து உரையாடுவதும் நன்று. இது குறித்த பரிந்துரைகளை வரவேற்கிறேன்.
கவனிக்க: செயரத்தினா--இரவி (பேச்சு) 03:49, 12 மே 2014 (UTC)[பதிலளி]
த.வி.யில் உள்ள மற்ற கட்டுரைகளைப் போலவே கோவில்கள் பற்றிய கட்டுரைகளும் அமைய வேண்டும் என்பதுதான் பொது வரையறையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். போதிய தகவல்கள் தரப்பட வேண்டும். அவற்றிற்கான ஆதாரங்களும் கொடுக்கவேண்டும். அப்படி இக்கட்டுரை இருப்பதாகத் தெரியவில்லை. மரியாகிரி கல்லூரி பற்றிய ஆ.வி. கட்டுரையில் மலங்கரை மறைமாவட்ட இணையத்தள இணைப்பு ஆதாரமாகக் கொடுக்கப்படுகிறது. அதைத் துருவிப் பார்த்தால் உள்ளே மரியாகிரி அந்த மறைமாவட்டத்தின் ஒரு பங்கு என்று குறிக்கப்படுகிறது. அங்குள்ள நிறுவனங்களும் தரப்படுகின்றன. இருந்தாலும் மரியாகிரி பற்றிய தனிக் கட்டுரை எங்கும் இணையத்தளத்தில் இருந்ததுபோல் தெரியவில்லை. இந்நிலையில் இக்கட்டுரையை நீக்கத் தடை இல்லை என்றே நினைக்கிறேன். என்றாலும் ஒரு சில மாதங்கள் கெடு கொடுத்தால் நலமாகலாம். - பவுல்
நன்றி, பவுல். உங்களிடம் கருத்து கோரலாம் என்று நினைத்து இப்பக்கத்துக்கு வந்தால், நீங்கள் அதற்கு முன்பாகவே கருத்து கூறிவிட்டீர்கள் :)--இரவி (பேச்சு) 04:48, 12 மே 2014 (UTC)[பதிலளி]
மரியகிரி என்ற தலைப்புக்கு மாற்றி, தமிழ்நாட்டின் ஓர் ஊர் என்ற வகையில் இக்கட்டுரையை மேம்படுத்தலாம் என நினைக்கிறேன். அப்படி இல்லை, நீங்கள் நினைத்தபடி நீக்குவது தான் என முடிவெடுத்தால் நீக்குங்கள். நான் புதிய கட்டுரை தொடங்குகிறேன்.--Kanags \உரையாடுக 08:31, 12 மே 2014 (UTC)[பதிலளி]
Kanags, முன்முடிவுகளுடன் உரையாடல்களை அணுக வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். மரியாகிரி என்ற தலைப்பில் ஓர் ஊர் குறித்த கட்டுரைக்கான அடிப்படை தகவல் உள்ளடங்க ஒரு கட்டுரையைத் துவங்கி, அதில் இக்கட்டுரையில் உள்ள கலைக்களஞ்சிப் பொருத்தமான தகவலை இணைப்பதில் எனக்கு மறுப்பில்லை.--இரவி (பேச்சு) 10:30, 12 மே 2014 (UTC)[பதிலளி]
மரியகிரி என்பதே கூகுள் தேடலில் நிறைய வருகிறது. ஏன் புதிதாகத் துவங்க வேண்டும்? இருக்கும் கட்டுரையையே மாற்றி அமைக்கலாமே. முன்முடிவுகள் என எதைச் சொல்கிறீர்கள்? நீங்கள் இதனை நீக்குவதெனவே முடிவெடுத்து விட்டீர்கள் போலும். நீங்கள் நீக்குங்கள். ஆனால் இக்கட்டுரையை மீள்வித்து மரியகிரி என்ற தலைப்பில் மேம்படுத்துவேன். அதற்கு எனக்கு உரிமை உண்டு.--Kanags \உரையாடுக 10:35, 12 மே 2014 (UTC)[பதிலளி]
Kanags, நீங்கள் இதே கட்டுரையை மரியாகிரி (இல்லை மரியகிரியா?) என்ற தலைப்புக்கு நகர்த்தி தேவைப்படும் மாற்றங்களையும் கூடுதல் தகவலையும் சேருங்கள். அதன் ஒரு துணைத்தலைப்பாக இந்தக் கோயில் பற்றிய தகவலைத் தக்க வைக்கலாம். உங்கள் மாற்றுப் பரிந்துரையை ஏற்றுத் தானே பேசிக் கொண்டிருக்கிறேன். ஏன் இதை நீக்கியே தீர வேண்டும் என்று நான் முன்முடிவு கொண்டு பேசுவதாக கருதுகிறீர்கள்? நன்றி.--இரவி (பேச்சு) 11:03, 12 மே 2014 (UTC)[பதிலளி]
  • ஒரு கட்டுரையாக மாற்றுவதே நல்லது என்பது எனது கருத்தும் கூட. "மரியாகிரி", "மரியகிரி" இரண்டுமே வழக்கத்தில் உள்ளன. எனவே "மரியகிரி" என்பதை முதன்மைப் பதிவாகவும் "மரியாகிரி"யை வழிமாற்றலாகவும் கொள்ளலாம்.--பவுல்-Paul (பேச்சு) 17:43, 12 மே 2014 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மரியகிரி&oldid=1659552" இலிருந்து மீள்விக்கப்பட்டது