பேச்சு:மயூரலலிதம்
Appearance
//கைகளை ரேசிதமாக வைத்து பிரமரியாகவும்//
புரியவில்லை. இயன்றவரையிலும் துறை சார் கலைச்சொற்களைத் தமிழ்ப்படுத்தி எழுதினால் நன்றாக இருக்கும். மயூரலலிதம் என்பதை மயிலாட்டம் என்று சொல்ல முடியுமா? --இரவி (பேச்சு) 07:50, 1 சூலை 2013 (UTC)
- இது மட்டுமல்ல, பல கரணங்கள் ஆடும் முறைப் பற்றி கூறியிருப்பது எனக்கும் புரியவில்லைதான். ஆனால் அவற்றினைப் பற்றி போதிய அறிவு இல்லாமல் மாற்றுவது குழப்பத்தினையும், நம்பகத்தன்மையில் குறைபாடும் ஏற்படுத்தும் என மாற்றம் செய்யாமல் அப்படியே இட்டுவிட்டேன். முகநூலில் பகிர்ந்த அடியாரும், இவை எடுக்கப்பெற்ற நூலின் மூலத்தினை அறியவில்லை. அதனால் மேலும் எளிமை செய்ய இயலாமல் போய்விட்டது. மன்னிக்கவும். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 08:15, 1 சூலை 2013 (UTC)
- அனைவரும் அனைத்துத் துறையிலும் வல்லுனராக இருக்க முடியாது. அப்படி இருப்பவர்கள் தான் விக்கிப்பீடியாவில் எழுதலாம் என்றும் இல்லை. பல துறை தகவலை விக்கிப்பீடியாவில் சேர்க்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயே நாம் செயல்படுகிறோம். இருந்தாலும் எழுதியவர், படிப்பவர் இருவருக்கும் ஒரு கட்டுரை புரியவில்லை என்றால், அதற்கு ஆதாரமாக குறிப்பிடப்படுவதன் உண்மைத் தன்மையையும் உறுதி பார்க்க இயலாது. இது விக்கிப்பீடியாவின் தரத்தை உறுதி செய்ய உதவாது. எனவே, அருள்கூர்ந்து உங்களால் படித்து உறுதி செய்து கொள்ள முடியாத கட்டுரைகளை எழுத வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி--இரவி (பேச்சு) 05:27, 2 சூலை 2013 (UTC)
- இனி அவ்வாரே செய்கிறேன். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 06:54, 2 சூலை 2013 (UTC)