பேச்சு:பேராக்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேராக் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

கட்டுரையில் பல சுவையான செய்திகள் உள்ளன. குறிப்பாக தமிழ் சபாநாயகர்கள் பற்றிய செய்தி சுவையான இருந்தது. --Natkeeran 18:18, 1 மார்ச் 2011 (UTC)

எழுத்துப் பிழை[தொகு]

பேராக் என்று எழுதுவது தவறு. வல்லினம் மொழியீறு ஆகாது.. பேரா அல்லது பேராக்கு என்று எழுதலாம்.. Thanighaivel (பேச்சு) 14:01, 9 சூன் 2021 (UTC)[பதிலளி]

வழிமாற்று வைத்திருக்கிறேன். உள்ளூரில் ஊடகங்களில் பேராக்கு என்ற பெயரைப் பிரபலப்படுத்துங்கள்.--Kanags \உரையாடுக 22:10, 9 சூன் 2021 (UTC)[பதிலளி]
தமிழில் எழுதும்பொழுது வல்லின ஒற்றில் முடியுமாறு எழுதுதல்கூடாது. இதனைத் திருத்த வேண்டுகின்றேன். பேரா என்றோ பேராக்கு என்றோ மாற்ற வேண்டுகின்றேன்.--செல்வா (பேச்சு) 21:48, 22 சூன் 2021 (UTC)[பதிலளி]

வணக்கம், நான் குறிப்பிட்ட இரண்டு சொற்களும் பயன்பாட்டில் உள்ளது.. பேரா, ஆதிக பயன்பாட்டில் உள்ளது.. அதைவிட அதிகமாக, பிழையான பேராக் என்ற சொல் பயன்பாட்டில் உள்ளது.. தவறுகளைத் திருத்திக் கொள்ளலாமே.. Thanighaivel (பேச்சு) 00:35, 10 சூன் 2021 (UTC)[பதிலளி]

 ஆதரவு - --செல்வா (பேச்சு) 21:48, 22 சூன் 2021 (UTC)[பதிலளி]

@Kanags:, @Ksmuthukrishnan:, @Thanighaivel:, ஆங்கில விக்கிப்பீடியாவில் தமிழில் பேரா என்று எழுதியிருக்கின்றார்கள், பார்க்கவும். சீனமொழியிலே பீலீ என்று தந்திருக்கின்றார்கள் (霹雳) ஆகவே பேரா என்றெழுதுவது சரியாக இருக்கும். பேராக்- என்பது போல 'க்' வரவேண்டுமானால் பேராக்கு என்றெழுதலாம். மலாய் மொழியில் அது 'ஃ' போல ஒலிக்கலாம் போல் தெரிகின்றது. மலாய் மொழி ஒலிப்பாக (Malay pronunciation) [peraʔ] என்று தந்துள்ளார்கள். அருள்கூர்ந்து பேரா என்றோ பேராக்கு என்றோ தலைப்பை மாற்ற வேண்டுகின்றேன். அடிப்படையில் தணிகைவேல் கூறிய கருத்து சரியென்றே கருதுகின்றேன். --செல்வா (பேச்சு) 15:25, 23 சூன் 2021 (UTC)[பதிலளி]

மலேசியாவில், சிலர் சரியான முறையில் பேரா என்றும் ஆள்கின்றனர். மலேசியத் தமிழ்க்கல்வி பற்றி எழுதும் 'மேனாள் முகமை அமைப்பாளர்' மலேசியாவில் தமிழ்க்கல்வி வரலாறும் வளர்ச்சியும் என்னும் பதிவில் கீழ்க்காணுமாறு குறிப்பிட்டுள்ளார்: "1898 ஆம் ஆண்டு சிரம்பான் ஜாவா லேன் தமிழ்ப்பள்ளி துவங்கப்பட்டது. 1900 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் ஆட்சியில் பேரா மாநிலத்தில் பாகான் செராய் அரசினர் தமிழ்ப்பள்ளி தொடங்கப்பட்டது." [1]. பலர் தவறுதலான முறையில் "பேராக்" என்றும் ஆள்கின்றனர். சிலராக இருந்தாலும், சரியான முறையை நாம் பின்பற்றலாம் என்று கருதுகின்றேன். --செல்வா (பேச்சு) 20:04, 23 சூன் 2021 (UTC)[பதிலளி]
@செல்வா: மலாய் மொழியில் பேராஹ் என்றுதான் ஒலிக்கப்படுகிறது. இது தமிழில் பேராக் என்பதற்கே கிட்டவாக உள்ளது. Penang >> பினாங்கு என்பது போல பேராக்கு என மாற்றலாம்.--Kanags \உரையாடுக 21:48, 23 சூன் 2021 (UTC)[பதிலளி]
பேராக்கு என்று மாற்றலாம். மிக்க நன்றி @Kanags:. --செல்வா (பேச்சு) 02:01, 24 சூன் 2021 (UTC)[பதிலளி]

மலாய் மொழியில் இறுதியில் வரும் புள்ளியிட்ட ககரம் ஒலிக்கப்படுவதில்லை. எனவே பேரா என்றெழுதவதே முறை. Penang என்பதைப் பிழையாகத்தான் பினாங்கு என்றெழுதியிருக்கிறார்கள். அதன் சரியான ஒலிப்பு பெனாங் என்பதாகும்.--பாஹிம் (பேச்சு) 03:25, 24 சூன் 2021 (UTC)[பதிலளி]

@Kanags:மேலே பாகிம் (@Fahimrazick:) சொல்வதுபோல பேரா என்றெழுதுவது சரியாக இருக்குமென்று நினைக்கின்றேன். மலேசியாவிலும் சிலர் பேரா என்றெழுதுகின்றனர். ஆகவே பேரா என்றே மாற்றலாம் என்று கருதுகின்றேன். கருத்துக்கு நன்றி பாகிம். --செல்வா (பேச்சு) 12:04, 24 சூன் 2021 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பேராக்&oldid=3178160" இலிருந்து மீள்விக்கப்பட்டது