பேச்சு:பிரதிபா பாட்டில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அவரது பெயரை தேவநாகரி எழுத்துக்களில் பார்க்கையில் பிரதிபா பாட்டில் (டகர ஒற்று இரட்டிக்கப்பட்டது தமிழ் மரபிற்காக) என்று இருக்க வேண்டும். எவருக்கும் மாற்றுக் கருத்து இல்லையென்றால் மாற்றி விடலாமே. -- Sundar \பேச்சு 06:24, 23 ஜூலை 2007 (UTC)

ஆட்சேபனை இல்லை.--Kanags 08:18, 23 ஜூலை 2007 (UTC)
பாட்டீல் என்றே பிபிசிதமிழில் உச்சரிக்கப்படுகின்றது என்பதனையும் கவனிக்க--கலாநிதி 16:28, 23 ஜூலை 2007 (UTC)
கருத்துக்களிற்கு நன்றி கலாநிதி ஆயினும் பிபிசி இந்திய மொழிகளில் தமிழிலேயே முதலில் ஆரம்பிக்கப்பட்டது பின்னர் தான் ஏனைய மொழிகளில் சேவை ஆரம்பிக்கப்பட்டது. சுந்தர் ஹிந்தி மொழியறிவுள்ளவராதலினால் அவர் சொல்வது போல கட்டுரையை நகர்திவிடலாம் ஆயினும் ஆட்சேபனை இருக்கும் என்றால் நான் இதில் தலையிட விரும்பவில்லை. --Umapathy 17:51, 23 ஜூலை 2007 (UTC)

ப்ரதி'பா பா``டில் என்றுதான் தேவநாகரி எழுத்துக்கள் குறிப்பிடுகின்றன. பாட்டில் என்றால் bottle என்றும் உணர்த்த வாய்ப்புள்ளது. பாட்டீல், பட்டீல் என்பன தமிழில் அப்பெயரை வழங்கும் முறை. பாட்டில் என்று குறிப்பிட வேண்டும் என்னும் கட்டாயம் இல்லை. அப்படிக் குறித்தாலும் எனக்கு ஏதும் மறுப்பு இல்லை. பிரதிபா பாட்டில் அல்லது பிரதிபா பாட்டீல் என்பது சரியாக இருக்கும் என நினைக்கிறேன். --செல்வா 18:04, 23 ஜூலை 2007 (UTC)

பாட்டில் என்பது குழப்பத்தை விளைவிக்கக் கூடும் என்பதையும், பிபிசி முதலிய கூடுதல் ஆர்வர்களைக் கொண்ட ஊடகங்கள் பாட்டீல் என்று குறிப்பிடுவதையும் ஏற்கிறேன். பாட்டீல் என்பதில் எனக்கு உடன்பாடே. (இதே போல் சென்னைத் தொலைக்காட்சி நிலைய செய்திகளில் சோபனா ரவி மட்டும் கஷ்மீர் என்று "சரியாக" (?) பலுக்கி வந்தும் பொது வழக்கில் காஷ்மீர் என்பது நிலைத்தது நினைவில் உள்ளது. ஒருவேளை தற்காலத் தமிழில் பிற மொழிச் சொற்கள் எவ்வாறு ஏற்கப்பட வேண்டும் என்பதற்கு ஒரு இலக்கணம் (நன்னூல் போன்ற prescriptive grammar ஆக இல்லாமல் தொல்காப்பியம் போன்று descriptive grammar ஆக) வரைய வேண்டும் போலிருக்கிறது. ) -- Sundar \பேச்சு 08:00, 24 ஜூலை 2007 (UTC)

zahir - ஜாகிர், kajol - - கஜோல் என்று மாறுபடும் தமிழ் பலுக்கல்கள் நிறைய உள்ளன :)--ரவி 12:30, 24 ஜூலை 2007 (UTC)

சுந்தர் இதனை இலக்கணம் என்பதைவிட சிறுமரபு எனலாம். பிறமொழி சொற்களை (பெயர்கள் உட்பட), மிகத்துல்லியமாக ஒலிப்பது கடினம், ஓரளவுக்கு துல்லியமாக ஒலிக்கலாம். பாட்டில் என்று ஒலிப்பதில் ஏதும் இடக்கு இருக்க முடியாது (paaTTil). என்றாலும் காஷ்மீர் போன்று பாட்டீல், பட்டீல் என்று அழைப்பது வழக்கமாக உள்ளது. கஷ்மீர், பாட்டில் என்று சரியாக ஒலிப்பதில் எனக்கு ஏதும் மறுப்பு இல்லை. --செல்வா 13:07, 24 ஜூலை 2007 (UTC)
ஆம், சிறுமரபு தான். இலக்கணம் என்ற சொல்லை சற்றே கூடுதலாகப் பொதுமைப்படுத்தி விட்டேன். :-)
ரவி, கஜோலை விட மாட்டீங்களே. -- Sundar \பேச்சு 06:59, 27 ஜூலை 2007 (UTC)