உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:பண்புப்பெயர்ப்பி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அலைமாற்றி என்னும் சொல் பொருத்தமானதல்ல. அளக்கவேண்டிய ஒரு பண்பை (பெரும்பாலும் இது ஓர் இயற்பியல் பண்பாக இருக்கும்) அதற்கு ஈடாக அல்லது சார்பாக மாறும், நாம் அளக்கவல்ல, வேறு ஒரு பண்பாக மாற்றும் கருவிக்கு பண்புபெயர்ப்பி (transducer) என்று பெயர். எனவே இதனைப் பண்புபெயர்ப்பி என்று மாற்றலாம். தக்க உள்சூழலில் வெறும் பெயர்ப்பி என்றாலே பொருள் விளங்கும். தெர்மோ கப்பிள் என்னும் வெம்மிணை வெப்பநிலைக்கு ஏற்றார்போல மின்னழுத்தம் மாறும் ஒரு (பண்பு)பெயர்ப்பி. இதனை வெப்ப-மின் பண்புபெயர்ப்பி என்கிறோம். இன்னும் ஒன்று. Sensor என்பதை உணரி என்பது சரி, ஆனால் Actuator என்பதை இயக்கி என்று கூறவேண்டும். இச்சொல் பிறபல பொருள்களுடன் முரணுறும், ஆகையால் வேறு சொல் தேர்வு செய்யலாம். ஆனால் இந்தப் பொருளிலும் இச்சொல்லை ஆளலாம். --செல்வா 14:02, 13 ஆகஸ்ட் 2009 (UTC)


செல்வா . இந்தக் கட்டுரையை நிறைவு செய்ய உங்கள் உதவி தேவை. இந்தக்கட்டுரை முடித்த பிறகு இதில் உள்ள ஒவ்வொரு கருவி களுக்கும் அல்லது பெயர்ப்பிகளுக்கும் தனிக்கட்டுரை எழுத வேண்டும் என்று நினைக்கிறேன் . அதற்கு தங்கள் முழு ஒத்துழைப்பு தேவை . மேலும் இதில் உள்ள பெயர்ப்பி களின் பெயர் பொருத்தமானதா என்று பார்க்கவும் . பரிந்துரைகள் செய்யவும் . --இராஜ்குமார்
cathode , anode இதற்கு தமிழ் சொற்கள் எனக்கு தெரியவில்லை . strain guage , electrometer & galvanometer , sonar ,hydro ,gramo ,geo , amplifier , oscillator --இராஜ்குமார்
பெயர்ப்பி என்ற சொல் பொதுவாக உள்ளது. பண்புப்பெயர்ப்பி என மாற்றப்படல் வேண்டும்.--Kanags \பேச்சு 23:21, 14 ஆகஸ்ட் 2009 (UTC)


பண்புப்பெயர்ப்பி என்று வைத்து கொண்டால் கூட இலக்கணம் போல் இருக்காதா . அறிவியல் சார்ந்த பண்புகளை பெயர்த்து எடுக்கும் கருவிகள் என்பது போல் பெயர் வைத்தால் என்ன . எனது தலைப்புகள் அனைத்தும் மாற்ற கூடியனவே . உரையாடலுக்கு பின் மாற்றப்படும் . --இராஜ்குமார்


ஆற்றல்மாற்றி (விக்சனரி) --Natkeeran 04:29, 15 ஆகஸ்ட் 2009 (UTC)

நான் இதற்கு அலைமாற்றி என்றுதான் பெயர் வைத்திருந்தேன் . ஆனால் அது தவறென்று செல்வா அவர்கள் சொன்னார்கள் . பின்னர் பெயர்ப்பி என்று மாற்றினேன் . பண்புப்பெயர்ப்பி என்பது பொருத்தமாகத்தான் இருக்கிறது . திரு . செல்வா அவர்களிடமும் இதை பற்றி கலந்துரையாட எண்ணுகிறேன் .--இராஜ்குமார்


பண்புபெயர்ப்பி, ஆற்றல்மாற்றி இரண்டும் பொருத்தமானவையாகத் தெரிகின்றன. ஆற்றல்மாற்றி என்றும் சொல்லலாம். வெப்பநிலை, சூடு என்பது ஆற்றல் இல்லை, ஆற்றலின் ஒரு வெளிப்பாடு. ஒரே வெப்பநிலையில் உள்ள இரு பொருள்கள் வெவ்வேறு வெப்ப ஆற்றல் கொண்டிருக்கக்கூடும். அதேபோல மின்னழுத்தம் என்பது மின்னாற்றல் அல்ல, ஆனால் மின்னாற்றல் உள்ள ஒன்றின் ஒரு முகவெளிப்பாடு. மின்னோட்டம், மின்னழுத்தம், மின்மம் (அளவு) இப்படிப் பலவும் ஒவ்வொரு பண்புக்கூறுகள். ஆகவே பண்புபெயர்ப்பி என்பது இன்னும் கூடுதலான பொருத்தம் உடையதாக்க் கருதுகின்றேன்.--செல்வா 15:45, 16 ஆகஸ்ட் 2009 (UTC)

பண்பு பெயர்ப்பி என்பது இலக்கணம் போல் இருப்பதாக நான் எண்ணுகிறேன் . அறிவியல் அல்லது வேறு ஏதேனும் பொருத்தமான சொல் சேர்ந்து வந்தால் நன்றாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன் . அதே சமயம் சொல்லும் நீண்டுவிடக் கூடாது . இப்பொழுது இப்படியே இருக்கட்டும் . நன்கு கலந்துரையாடியவுடன் தகுந்த சொல் ஏதேனும் அமைந்தால் மாற்றி கொள்ளலாம் . இச்சொல்லை சிந்தையில் வைத்துக்கொள்ளுங்கள் . --இராஜ்குமார்

Start a discussion about பண்புப்பெயர்ப்பி

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பண்புப்பெயர்ப்பி&oldid=417053" இலிருந்து மீள்விக்கப்பட்டது