பேச்சு:பட்டினத்தார் (புலவர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Tripundra.PNG பட்டினத்தார் (புலவர்) என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


இவரும் பட்டினத்தாரும் ஒரே ஆட்களா ?? --Natkeeran (பேச்சு) 01:43, 16 மே 2012 (UTC)

ஆம் ஒருவரே, இக்கட்டுரையை பட்டினத்தார் கட்டுரையுடன் இணைக்கலாம் --ஸ்ரீதர் (பேச்சு) 00:06, 19 சூன் 2012 (UTC)
Yes check.svgY ஆயிற்று--சண்முகம்ப7 (பேச்சு) 04:01, 19 சூன் 2012 (UTC)
தோழர் ஃபால்கன் திருத்தம் - நன்றி. --Sengai Podhuvan (பேச்சு) 21:43, 12 திசம்பர் 2012 (UTC)

பத்திரகிரியார் தொடர்பு[தொகு]

உஜ்ஜையினி தேசத்தின் மன்னன் பத்திரகிரியார் பட்டினத்தாரை தவறான புரிதலில் கள்வர் என்று எண்ணிக் கைது செய்து கழுவிலேற்ற ஆணையிட்டார். கழுமரம் தீப்பற்றி எரிந்த காட்சியில் ஞானம் பெற்ற பத்திரகிரி மன்னன் தன் சொத்துக்களைத் துறந்து பட்டினத்தாரின் சீடரானார். பதினெண் சித்தர்களில் பத்திரகிரியாரும் முக்கியமான ஒருவர். அவருடைய பாடல்கள் "மெய்ஞானப் புலம்பல்" என்று பெயர் பெற்றவை.

இந்த இடத்தில் ஒரு தர்க்கத்தில் பட்டினத்தார் படிய பாடல் ஒன்று

"சிற்றம்பலமும் சிவமும் அருகிருக்க
வெற்றம்பலம் தேடுகின்றோமே! - நித்தம்
பிறந்த இடம் தேடுதே பேதை மட நெஞ்சம்
கறந்த இடம் நாடுதே கண்"

பத்திரகிரியாரை உஞ்ஞை மன்னன் எனக் குறிப்பிடுவதற்கும், கதைக்கும் மேற்கோள் நூல் நூல் இல்லை. வடநான்னு மன்னன் தமிழ் பயின்று பாடிய பாடல்கள் பத்திரகிரியாரின் பாடல்கள் எனக் காட்டும் இந்தச் சான்று பெருமை கொள்ளத்தக்க ஒன்று. என்றாலும் பட்டினத்தார் உஞ்ஞை சென்றாரா? அவன் ஆட்சிக்கு உடபட்ட இடத்தில்தானே அவன் ஆணை செல்லுபடி ஆகும். - என்னும் செய்திகள் மேற்கோள் காட்டப்படுமாயின் கருதலாம். அதுவரை இங்கு இது பதிவாக இருக்கலாம். --Sengai Podhuvan (பேச்சு) 19:12, 30 மே 2015 (UTC)