பேச்சு:பட்டம்பலம் தேவி கோயில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கட்டுரைத் தலைப்பு திருத்தம் சம்பந்தமாக[தொகு]

இக்கட்டுரை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு, கட்டுரைத் தலைப்பில் 'சேத்திரம்' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதால், அதைத் திருத்தி கோயில் (பகுப்பிலும் இந்துக் கோயில்கள் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது) என்று மாற்றி, சேத்திரம் பட்டம்பலம் தேவி கோயில் என்று குறிப்பிடலாம்.

Almightybless (பேச்சு) 11:18, 24 நவம்பர் 2023 (UTC)[பதிலளி]

வணக்கம், Almightybless. சேத்திரம் என்றால் இடம் அல்லது தலம் என்பர். கோயில் அமைந்துள்ள புண்ணியத்தலத்தை அவ்வாறு குறிப்பிடுவதுண்டு. சூரியன் வழிபட்ட நிலையில் கும்பகோணத்தை பாஸ்கர (சூரியன்) சேத்திரம் என்பர். சேத்திரம் பட்டம்பலம் தேவி கோயில் என்பதற்கு பதிலாக, சேத்தரம் என்ற சொல்லை ஊரின் பின்னொட்டாக அமைத்து பட்டம்பலம் சேத்திரம் தேவி கோயில் எனலாம். இருப்பினும் இவ்வகைகளில் கூறும்போது கூறியது கூறல் என்ற வகையில் தலைப்பில் இரு சொற்கள் இருப்பதைப் போலுள்ளது. இச்சூழலில், பட்டம்பலம் என்பதானது இடம்/சேத்திரம் என்ற வகையில் பொருள்படும் நிலையில் பட்டம்பலம் தேவி கோயில் என்று நேரடியாக கூறிவிடலாம். கருத்தறிந்து தொடர்வேன். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 04:15, 26 நவம்பர் 2023 (UTC)[பதிலளி]
@பா.ஜம்புலிங்கம்
சமசுகிருதம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் 'ஷேத்ரம்' என்ற சொல் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது; 'அம்பலம்' என்றும் மலையாளத்தில் குறிப்பிடப்படுகிறது என்பதை தாங்கள் அறிவீர்கள். கேரளாவிலுள்ள கோயில்கள் சம்பந்தமான கட்டுரைகளில், ஷேத்ரம்/ஷேத்திரம் என்று குறிப்பிடப்படுகின்றன. ஆனால், இக்கட்டுரை தமிழில் உள்ளதால், 'கோயில்' என்று குறிப்பிட பரிந்துரைத்தேன். நன்றி!
Almightybless (பேச்சு) 07:01, 26 நவம்பர் 2023 (UTC)[பதிலளி]
@Almightybless
பட்டம்பலம் தேவி கோயில் என்று தலைப்பினை மாற்றிவிடலாமா? --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 08:34, 26 நவம்பர் 2023 (UTC)[பதிலளி]
@பா.ஜம்புலிங்கம்
பட்டம்பலம் தேவி கோயில் என்பது மிகப் பொருத்தமானது.
Almightybless (பேச்சு) 10:57, 26 நவம்பர் 2023 (UTC)[பதிலளி]
@Almightybless நகர்த்திவிட்டேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 11:22, 26 நவம்பர் 2023 (UTC)[பதிலளி]
@பா.ஜம்புலிங்கம்
நன்றியுடன்
Almightybless (பேச்சு) 11:25, 26 நவம்பர் 2023 (UTC)[பதிலளி]