பேச்சு:தொடர்வண்டி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தொடர்வண்டி என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

சுந்தர் புகையிரதம் என்பதே சரியானதாகும் ஏன் நீர் புகைவண்டிக்கு அதை நகர்த்தியுள்ளீர்?? - சுரேன்

இரதம் என்ற சொல் வடமொழிச் சொல்லாகும். தவிர அது பரவலாகப் பயன்படுத்தப்படுவதாகத் தெரியவில்லை. ஒருவேளை, இலங்கையில் அது பரவலாகப் பயன்படுத்தப்பட்டால் தலைப்பில் அடைப்புக்குறிக்குள் அதையும் தந்து விடுங்கள். சொற் பயன்பாடு பற்றிய கலந்துரையாடலுக்கு விக்கிபீடியா பேச்சு:சொல் தேர்வு என்ற பக்கத்தைப் பார்க்கவும். நன்றி. -- Sundar \பேச்சு 08:21, 21 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]
'புகையிரதம் என்பதே இலங்கையில் வழக்காகவுள்ளது, புகைவண்டி என்பது இங்கு பயன்படுத்தப்படுவதில்லை. மேலும் ஆங்கில சொற்களை பயன் படுத்தும் பொது வடமொழிக்கு என்ன குறை?? - சுரேன்.
ஆங்கிலச் சொற்களோ, வடமொழிச் சொற்களோ அல்லது பிறமொழிச் சொற்களோ எவையாயினும் நல்ல மாற்றுச் சொற்கள் தமிழில் இருக்கும் போது அவற்றைப் பயன்படுத்துதலே நலம் என்பது என் கருத்து. அடைப்புக் குறிக்குள் ஆங்கிலச் சொற்களைத் தருவது இணையத் தேடுபொறிகளில் தேடுபவர்களின் வசதிக்காகவே. மேலும், அவை அடைப்புக்குறிக்குள் தரப்பட்டுள்ளதாலும் வேறு எழுத்துக்களைக் கொண்டுள்ளதாலும் தமிழென்று யாரும் தவறாகக் கொள்ள மாட்டார்கள். ஆனால் வடமொழியைக் கூடுதலாகப் பயன்படுத்துவதால் அது தமிழ் சொல்லென்று கருதப்பட ஏதுவாகும். சிலர் இதை வைத்துக் கொண்டு தமிழின் வரலாற்றை மாற்றி எழுத முயற்சிக்கும் கவலைக்குறிய நிலை ஏற்படும். எனக்கு வடமொழியின் மீதோ வேறு எந்த மொழியின் மீதோ எந்த ஒரு வெறுப்பும் கிடையாது. நானாக விரும்பியே இந்தி மொழியைக் கற்றுள்ளேன். இதுபற்றிய உங்கள் கருத்துக்களை தயவு செய்து விக்கிபீடியா பேச்சு:சொல் தேர்வு பக்கத்தில் தெரிவியுங்கள். அது விக்கிபீடியாவின் கொள்கைகளை வகுக்க உதவும். நன்றி. -- Sundar \பேச்சு 08:43, 21 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]
சுரேன், சுந்தர்-வழிமாற்றுப்பக்கங்களை உருவாக்கும்போது எல்லா சமயங்களிலும் இலங்கை வழக்கில் இருந்து தமிழ் நாட்டு வழக்கிற்கு பக்கத்தை திருப்பி வடுவதாக யாரும் (இலங்கை வழக்கை புறக்கணிப்பதாக) நினைத்துக்கொண்டு மனம் வருந்தி விடக்கூடாது. இது வரை அப்படி செய்யப்பட தருணங்களில் (அணுக்கரு பௌதிகத்தில் இருந்து அணுக்கரு இயற்பியலுக்கு, புகையிரதத்தில் இருந்து புகை வண்டிக்கு) வேற்று மொழி வழக்கில் இருந்து நல்ல பரவலாகப் பயன்படுத்தப்படும் இன்னொரு தமிழ் வழக்கிற்கு திருப்பிவிடப்பட்டதாகத்தான் கருத்தில் கொள்ள வேண்டும். இது குறித்து வழிமாற்று உதவிப் பக்கத்திலும் பெயரிடல் மரபு பக்கத்திலும் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும். சுரேன், புகையிரதம் என்று சொன்னால் தமிழ் நாட்டில் ஒருவருக்கும் புரியாது. புகை வண்டி என்று எழுதினால் இலங்கையில் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன். இந்த காரணத்தால் இந்த கட்டுரை புகை வண்டி என்ற தலைக்கிலேயே தொடரட்டும் என்று கருதுகிறேன். சுந்தர் சொன்னது போல் அடைப்புகுறிக்குள் புகையிரதம் என குறிப்பிடலாம். இலங்கை வழக்கு நல்ல தமிழ் சொல்லாக இருந்து தமிழ் நாட்டு வழக்கு வேற்று மொழியினதாக இருந்தால், தமிழ் நாட்டு வழக்கை அடைப்புகுறிக்குள் இட்டு உலங்கை வழக்கை பிரதானப்படுத்தி எழுதலாம் என்பது விக்கிபீடியா கொள்கையாக இருக்கலாம் என்று முன் மொழிகிறேன்..--ரவி (பேச்சு) 10:20, 21 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]
ஓ. இப்படி தவறாகப் பொருள்படும் வாய்ப்புள்ளது என்று எனக்குத் தோன்றாமல் போய்விட்டது. கண்டிப்பாக இலங்கை வழக்கு என்ற காரணத்தால் நான் முந்தைய பரிந்துரைகளை வைக்கவில்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன். வேண்டுமானால், இரத்தச் சிவப்பணு கட்டுரையை குருதிச் சிவப்பணு கட்டுரைக்கு வழி மாற்றலாம். எனக்கும் இரண்டாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கை வழக்கில் தான் உடன்பாடு கூடுதல். இருப்பினும் மற்றவர்கள் பயன்பாடு விகித அடிப்படையில் முந்தைய தலைப்பைத் தேர்ந்தெடுப்பார்கள் என்று எண்ணியே அத்தலைப்பைத் தந்தேன். -- Sundar \பேச்சு 10:38, 21 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]
கூடிய அளவுக்கு நல்ல தமிழ்ச் சொற்களைப் பயன் படுத்துவது தான் நல்லது என்பது எனது கருத்து. புகையிரதம் என்ற சொல் இலங்கையில் பரவலாகப் பயன்பாட்டிலிருந்தாலும் புகைவண்டி என்ற சொல் இலங்கைத் தமிழருக்கு அந்நியமான சொல்லல்ல. புகைவண்டி என்ற சொல்லை இலங்கையில் எல்லோருமே புரிந்து கொள்வார்கள். தற்போது தமிழ் விக்கிபீடியாவில் இலங்கைத் தமிழர், இந்தியத் தமிழர் இருசாராருமே குறிப்பிடத் தக்க அளவில் பங்களிப்புச் செய்து வருகின்றனர். இதனால் சொற்பயன்பாடுகள் சம்பந்தமான சிக்கல்கள் ஏற்படத்தான் செய்யும். ஆனாலும் இது ஒருவர் பற்றி இன்னொருவர் அறிந்து கொள்ள அரிய சந்தர்ப்பமாகவும் அமையும். இருந்தாலும், கட்டுரைகளில் இலங்கை இந்தியச் சொற் பயன்பாடு தொடர்பான அடிப்படையான சில கொள்கைகளை வகுத்துக் கொள்ளலாம். மாற்றுச் சொற்களை இலகுவில் அறிந்து கொள்ள வசதியாகச் சில ஒழுங்குகளையும் செய்து கொள்ள முடியும். விக்சனரியையும் இதற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். திறந்த மனதுடன் கலந்துரையாடித் தீர்மானங்களை எடுப்பதுதான் முக்கியமானது. Mayooranathan 17:57, 21 செப்டெம்பர் 2005 (UTC)[பதிலளி]

தொடரூந்து அல்லது தொடரூர்தி[தொகு]

இலங்கையில் Train ஊர்ந்துகொண்டு மெதுவாகச் செல்வதால் தொடரூர்தி அல்லது தொடரூந்து பொருத்தமாக இருக்கும் ஆனால் வெளிநாடுகளில் மிகவேக Train செல்வதால் இது எந்த அளவிற்குப் பொருத்தமோ அறியேன். எல்லா வண்டிகளும் புகைவிடுவதால் புகைவண்டி என்பதை ஏன் Train இற்கு மாத்திரம் புகைவண்டி அல்லது புகையிரதம் என்ற சொல்லைக் கொடுக்கவேண்டும் முன்னைய காலத்தில் அறிமுகப் படுத்திய வேளையில் கரியில் இயங்கிய Train மிகவும் புகைவிடுவதால் அது பொருத்தமான தமிழாக இருந்தது இப்போது அவ்வளவு பொருத்தமாக இல்லை. இங்கையில் வீதிகளில் செல்லும் சில வாகங்களை விட Train இப்போது குறைவாகத்தான் புகைவிடுவது போன்றே எனக்குத் தோன்றுகின்றது. ஆனால் இது நன்கு பாவனையில் உள்ள சொல் என்பதால் அப்படியே விட்டாலும் பரவாயில்லை. --Umapathy 12:40, 15 ஜூன் 2007 (UTC)

ஊந்து என்று ஒன்றும் இல்லை. தொடர்+உந்து = தொடருந்து - ஏற்புடையை சொல் தான். --ரவி 21:22, 16 ஜூன் 2007 (UTC)

தொடருந்து நல்ல சொல். --Natkeeran 22:21, 16 ஜூன் 2007 (UTC)

இலங்கையில் இது தொடருந்து என்றுதான் தற்காலத்திற் பயன்படுத்தப்படுகிறது. சீருந்து, பேருந்து, தானுந்து என்பன போன்று இது தொடருந்து எனப்படுகிறது.--பாஹிம் (பேச்சு) 02:36, 10 மே 2012 (UTC)[பதிலளி]

கட்டுரையில் கோச்சி என்ற சொல் இடம் பெற்றிருக்கிறது. கோச்சி என்பது ஆங்கிலத்தில் Coach என்பதன் தமிழ் வரிவடிவம். தென்னிலங்கையில் பொதுவாக இச்சொல்லே பயன்பாட்டிலுள்ளது. நானும் அப்படித்தான் அழைக்கிறேன். ஆயினும், கோச்சி என்பது எழுத்து வழக்கில் பயன்படுத்தப்படுவது அரிது. வெலிகமையில் தொடருந்துக் கடவைக்கு அருகில் கோச் வரும், கவனம் என்ற எச்சரிக்கைப் பலகை இடம்பெற்றிருந்தது. அது இலங்கைப் புகையிரதத் திணைக்களத்தினால் வைக்கப்பட்டிருந்தது. புகையிரதம் என்பது இன்னும் எழுத்து வழக்கில் பரவலான புழக்கத்திலிருக்கிறது. இலங்கைப் புகையிரதத் திணைக்களம் என்பதே உத்தியோகபூர்வப் பெயர். தொடருந்து போன்ற சொற்கள் செய்தி வாசிப்பிலும் பாடசாலைப் புத்தகங்களிலும் இடம்பெற்று வருகின்றனவாயினும் ஒரு சிலர் அவற்றை விடுதலைப் புலிகள் அறிமுகப்படுத்திய சொற்கள் என்று கூறி, பொது வழக்கில் அவற்றைப் பயன்படுத்துவதை விரும்புவதில்லை. நானே ஒரு தடவை உரைபெயர்ப்புப் பரீட்சையின் போது தொடருந்து என்ற சொல்லைப் பயன்படுத்தியதும் அங்கிருந்த பரீட்சகர் அதை நிராகரித்தார். எனினும் எனது சக பரீட்சார்த்திகள் எனது சொற்பயன்பாட்டை ஆதரித்தனர்.--பாஹிம் (பேச்சு) 01:52, 10 மார்ச் 2015 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தொடர்வண்டி&oldid=3616270" இலிருந்து மீள்விக்கப்பட்டது