பேச்சு:திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Tripundra.PNG திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


பெயர்[தொகு]

இக்கட்டுரையின் முதல் வரியில் இருப்பது திருப்பைஞ்ஞீலி நீலகண்டேசுவரர் கோயில் - இது திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயிலா அல்லது திருப்பைஞ்ஞீலி நீலகண்டேசுவரர் கோயிலா என்னும் குழப்பம் ஏற்படுகின்றது. மேலும், அருள்கூர்ந்து -ஈசுவரர் என்று முடியுமாறு முதல் வரியில் உள்ளது போலவே தலைப்பை இடுங்கள் -ஸ்வரர் என்று முடிவது தமிழ் முறை அன்று. தேவார-திருவாசகங்களில் காண ஒண்ணாதது. பாடல்பெற்ற தலங்களைச் சைவசமயக் குரவர்கள் எழுதியவாறு எழுதுதல் கடமை. எனவே திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில் என்றோ திருப்பைஞ்ஞீலி நீலகண்டேசுவரர் கோயில் என்றோ எழுதுங்கள். இதே போலவே பல இடங்களிலும் -ஈசுவரர் அல்லது -ஈசுவரம் என முடியும்படி எழுத வேண்டுகின்றேன். --செல்வா (பேச்சு) 22:41, 19 சூன் 2013 (UTC)

திருப்பைஞ்ஞீலி நீலகண்டேசுவரர் கோயில் என திருப்பைஞ்ஞீலி கோவில் அழைக்கப்பெறுகிறதா என்று தெரியவில்லை. தினமலர் கோவில்கள் தளத்தில் நான் தலைப்பிட்டவாறே குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்

\\பாடல்பெற்ற தலங்களைச் சைவசமயக் குரவர்கள் எழுதியவாறு எழுதுதல் கடமை.\\ இவ்வாறு எழுதும் பொழுது அந்த தலத்தின் பெயரை மட்டுமே இட இயலும்,. கோவில் உள்ள ஊர் மற்றும் அந்த தலத்தின் மூலவர் பெயர் அதன்பிறகு கோவில் என்ற அடைமொழி இவற்றுடன் தான் பல்வேறு கோயில்கள் எழுதப்பெற்றுள்ளன. தற்பொழுது வழக்கத்தில் உள்ள பெயர்களை உபயோகிக்கும் பொழுதே அதிக எண்ணைக்கையில் தேடலில் கிடைக்கும் என்பது என் தனிப்பட்ட எண்ணம். தாங்கள் கூறிய ஸ் மீது இனி கவனம் கொள்கிறேன் நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 02:36, 20 சூன் 2013 (UTC)

செகதீசுவரன், தேடுபவர்கள் வசதிக்காக வேண்டுமானால் மாற்றுவழிப் பக்கங்களை அமைக்கலாம். தலைப்பு மரபுப்படி அமைய வேண்டும். -- சுந்தர் \பேச்சு 03:35, 20 சூன் 2013 (UTC)
மரபுபடி என்றால் எதை குறிப்பிடுகின்றீர்கள் நண்பரே, தெளிவாக கூறுங்கள். இக்கட்டுரையான திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரர் கோயில் தலைப்பு எவ்வாறு அமைக்கப்பெற வேண்டும் என்று உதாரணம் போல் அமைத்து கூறினால் புரிவதற்கு ஏதுவாக இருக்கும். செல்வா அவர்கள் இரு கருத்துகளை முன் வைத்துள்ளார், ஒன்று தேவாரம், திருவாசகங்களில் உள்ள பெயர்களை தலைப்பாக இடுவது. இவ்வாறு இடுதல் சிறப்பு என்று கருதுகின்றீர்களா?. இரண்டாவது சமஸ்கிருத சொல்லாட்சி. தாங்கள் எதைப் பற்றி கூறுகின்றீர்கள்?. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 05:02, 20 சூன் 2013 (UTC)
திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் என்று எழுதுவதே சரி (ஸ் இல்லாமல்). கபாலீசுவரர் என்று எழுதுவதே சரி. நான் பாடல்பெற்ற திருத்தலங்களைப் பற்றிக் கூறியதில் எவ்வாறு சமயக்குரவர்கள் கிரந்தம் இல்லாமல் வழங்கினார் என்று குறிக்கவே கூறினேன். கிரந்தம் இல்லாமல் எழுதுவது பொதுவானது (தமிழ் மக்கள் அனைவருக்கும்), தமிழ்மொழியில் இயல்போடு ஒன்றியது. இறைவன் இறைவி பெயர்களைச் சமற்கிருதத்தில் எழுதும்பொழுது சமற்கிருத வழக்கத்தின் படி எழுதட்டும், அதை யாரும் தடுக்கமாட்டார்கள், ஆனால் தமிழில் எழுதும்பொழுது தமிழ் வழக்கத்தின்படி எழுதுதல் வேண்டும். அறம்வளர்த்த நாயகி என்பது இறைவியின் பெயரானால் அதனை தர்மசம்வர்த்தினி என்று சமற்கிருதத்தில் எழுதிக்கொள்வது சமற்கிருத வழக்கம். அங்கே அவர்கள் சமற்கிருத எழுத்து அமைதி, பொருள் பொருத்தம் எல்லாம் பார்த்து எழுதிக்கொள்ளட்டும். ஆனால் தமிழில் எழுதும்பொழுது தமிழ் வழக்கத்தின் படி எழுதுவோம். --செல்வா (பேச்சு) 05:16, 20 சூன் 2013 (UTC)
செல்வா அவர்களே, முந்தைய மறுமொழியிலேயே உங்களுடைய கருத்தினை ஏற்றுக் கொண்டதாக, தாங்கள் கூறிய ஸ் மீது இனி கவனம் கொள்கிறேன் என்று கூறியுள்ளேன். இனி அவ்வாறு செய்கிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 06:07, 20 சூன் 2013 (UTC)
செகதீசுவரன், கிரந்தம் தவிர்ப்பது தவிர பாடல் பெற்ற தலங்களின் உண்மையான தமிழ்ப்பெயர்கள் தெரியும் என்பதால் அவற்றையே பயன்படுத்துவது சிறந்தது. அந்தந்த கோவில்களிலும் தமிழ்ப்பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளதைப் பலமுறை கவனித்துள்ளேன் (குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, காரைக்குடி பகுதிகளில் பல கோவில்களில் கண்டுள்ளேன்). ஊடகங்கள் இவ்விசயத்தில் அக்கறை கொள்ளாமலும் வேறு சில காரணங்களுக்காவும் வடமொழிப் பெயர்களைப் பயன்படுத்துகிறார்கள். அதை நாம் பின்பற்ற வேண்டியதில்லை. -- சுந்தர் \பேச்சு 06:50, 20 சூன் 2013 (UTC)
ஊடகம் என்றில்லை நண்பரே, மக்கள் பயன்பாடும் பலவாறு அவ்வாறுதான் உள்ளது. என்னுடைய பெயரே அதன் சாட்சி. மாவட்டம் வாரியாக தேவாரம் பாடல் பெற்ற தலங்கள் என்ற கட்டுரையை முன்னிலைப்படுத்தி தலைப்புகளை இட்டேன். அவற்றை சரி செய்துவிடலாம். கடலூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்கள் கோவில்கள் மட்டுமே மாற்றியிருப்பதால் பிற மாவட்ட கோயில்களில் தாங்களும், செல்வாவும் குறிப்பிட்டுள்ள படி முன்னிலைப்படுத்தி விடலாம். செல்லா புராணப்பெயரை வைக்க சொல்கிறார் என்று நினைத்தே இத்தனை பெரிய விவாதமாக மாறியுள்ளது. மன்னிக்கவும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 08:16, 20 சூன் 2013 (UTC)
நன்றி செகதீசுவரன். நீங்கள் செல்லா புராணப்பெயரை என்று கூறியதைக் கண்டு வியக்கின்றேன். செல்லாப் பெயரா?!! நாயன்மார்கள் சைவக் குரவர்கள் இல்லையேல் இன்று 'இந்துமதம்' என்று ஒன்றே இருந்திருக்காது என்று கூறுவார்கள். சைவ சமயத்தில் 18,000 உக்கும் அதிகமான பாடல்கள் உள்ளன. அவற்றில் பல இறைவன் இறைவியர் பெயர்கள், ஊர்ப்பெயர்கள் உள்ளன. அவற்றைக் கண்டீர்கள் எனில் அவற்றில் கிரந்தம் இராது. பொதுவாக மக்கள் வாய்மொழி வழக்கில் -ஸ்வரம் எனச் சொல்ல வராது. மெல்ல வாய் விட்டுச் சொல்லிப்பாருங்கள், காற்றொலிக்குப் பிறகு உகரமோ ஓர் உயிரொலியோ வராது 'வரம்' எனவோ பிறவோ சொல்ல இயலுமா என்று. உங்கள் பெயரில் உள்ள -ஸ்வரன் என்பதையும் உண்ணிப்பாகத் தன்னுணர்வோடு சொல்லிப்பாருங்கள் ஜெகதீசுவரன் என்றுதான் ஒலிக்கும். சு என்பதில் உள்ள உகரம் குறைவாக மிகச்சிலருக்கு ஒலிக்கத்தெரிந்திருக்கலாம், ஆனால் உயிரொலி அறவே இல்லாமல் அடுத்துவரும் -வரம் ஒலி ஒலிக்க முடியாது. --செல்வா (பேச்சு) 14:34, 20 சூன் 2013 (UTC)
செல்வா எனத் தட்ட வரும்போது தவறுதலாகச் செல்லா என்று தட்டியுள்ளார் என நினைக்கிறேன், செல்வா. -- சுந்தர் \பேச்சு 14:52, 20 சூன் 2013 (UTC)
ஆம் ஆம் தட்டச்சுப்பிழைதான். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 14:59, 20 சூன் 2013 (UTC)
ஓ! மன்னிக்கவும், நான் தவறாகப் பொருள்கொண்டுவிட்டேன்!--செல்வா (பேச்சு) 15:03, 20 சூன் 2013 (UTC)

சரியான பெயர்[தொகு]

திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் என்பதே சரியான பெயர் திருக்கோவிலின் படம் கட்டுரையில் இணைக்கப்பட்டுள்ளது--யோகிசிவம் (பேச்சு) 17:06, 4 நவம்பர் 2013 (UTC)