பேச்சு:திருநங்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பேச்சு:அலி பக்கத்திலிருந்த உரையாடல்[தொகு]

உணர்வும் உருவமும். -தொகுப்பு: ரேவதி. (அடையாளம்; விலை-ரூபாய்.65/-) தமிழில் திருநங்கைகள் பற்றிய முதல் (ஆய்வு)நூல் என்பது மட்டுமல்ல.. இதை தொகுத்தவரும் ஓரு திருநங்கை என்பதும், தமிழில் திருநங்கை ஒருவரால் கொண்டுவரப்பட்ட முதல் நூலும் இதுவே. அவமானப்பட்ட அம்மக்களின் வாழ்வை அவர்களின் மொழியிலேயே சொல்லப்பட்டிருப்பதால் இந்நூல்

படம் தக்காலிகமாக நீக்கம்[தொகு]

இந்தப் கட்டுரையின் தொடக்க வலது பக்கத்தில் பொருத்தமில்லை. --Natkeeran 16:10, 3 பெப்ரவரி 2008 (UTC)

மகாபாரதத்தில் அர்ச்சுனன் அலியாக கூறப்படுகிறார். : இது எனக்கு புதிய செய்தியாக இருக்கிறது. ஏதேனும் இணையச் சுட்டிகள் தரமுடியுமா? −முன்நிற்கும் கருத்து Suresh jeevanandam (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

நான் அறிந்த வரையில் அப்படி மகாபாரதத்தில் கதையில்லை. சிகண்டி பால்மாற்றம் கண்ட ஒரு கதை மாந்தர். சிகண்டியை முன்னிறுத்தி பீடுமரைப் போரில் மாய்த்தவன் அருச்சுனன் என்பதால் இக்குழப்பம் விளைந்ததோ? -- சுந்தர் \பேச்சு 06:51, 7 ஆகஸ்ட் 2009 (UTC)
"அருச்சுனன் மறைவாசத்தில் அலி வேடம் பூண்டு நாட்டியத்திலும் கொடியை நாட்டியவன்"[1].--Kanags \பேச்சு 08:04, 7 ஆகஸ்ட் 2009 (UTC)
இதில் "வேடம் பூண்டான்" என்றுதான் கூறப்பட்டிருக்கிறது. அலியாக இருந்தான் என்னும் பொருள் வருமாறு கட்டுரை உள்ளது. அருச்சுனன் பற்றிய குறிப்பு இக்கட்டுரையில் தவறான பொருளைத் தரும். வேறு எடுத்துக்காட்டுகளைப் பயன்படுத்தலாம். Suresh jeevanandam 08:13, 7 ஆகஸ்ட் 2009 (UTC)
நீங்கள் சொல்வது சரி சுரேஷ், எதற்கும் கட்டுரையை எழுதிய நற்கீரன் ஏதாவது மேற்கோள்களைத் தருகிறாரா எனப் பார்க்கலாம்.--Kanags \பேச்சு 08:37, 7 ஆகஸ்ட் 2009 (UTC)
பார்க்க: en:Brihannala.--Kanags \பேச்சு 08:40, 7 ஆகஸ்ட் 2009 (UTC)

தலைப்பு, உள்ளடக்கம் மாற்றம்[தொகு]

அலி என்று அழைப்பது குறிப்பிட்டவர்களை மனம் வருத்தும் சொல்லாக இருக்கிறது. தலைப்பு மாற்றம் தேவை. தற்கால ஊடகத்தில் திருநங்கை என்ற சொல் பரவலாகப் பயன்படுகிறது. திருநங்கைகளின் உடற்கூறுகள், சமூகப் பிரச்சினை, நிலை குறித்து விரிவாக எழுத வேண்டும்--ரவி 16:44, 7 ஆகஸ்ட் 2009 (UTC)


Transgender வேறு Eunuch. அலி என்ற பெயர் பொருத்தம் அற்ற பெயர் என்றால் வேறு ஒரு பெயரைத் தெரிவிக்கவும், அப்படியே மாற்றலாம். --Natkeeran 23:42, 7 ஆகஸ்ட் 2009 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:திருநங்கை&oldid=2626102" இருந்து மீள்விக்கப்பட்டது