பேச்சு:தமிழ் அகரமுதலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அகராதி தமிழ் சொல் அல்ல. அகரமுதலி என்பதே சரியான தமிழ் சொல்லாகும். - சுரேன்

தமிழ் சொல்லாக இல்லாதபட்சத்திலும் நெடுங்காலமாக இச்சொல் வழக்கில் இருப்பதை கருத்தில் கொண்டு அகரமுதலி, அகராதி ஆகிய இரண்டு சொற்களையும் பயன்படுத்தலாம். அல்லது, இப்பக்கத்தை தமிழ் அகரமுதலி பக்கத்திற்கு நகர்த்தலாம்.--ரவி (பேச்சு) 16:34, 5 நவம்பர் 2005 (UTC)
ஆதி என்பது தமிழ் வேரில் இருந்து வடபுல போன சொல். ஆனால் செந்தமிழ்ச்சொல் இல்லை. பகுதி > பாதி, மிகுதி > மீதி என்றானதுபோல அகு > அகுதி > ஆதி (முன் நின்றது) என்று பொருள். இது பற்றி செந்தமிழ் பேரகரமுதலியில் இரண்டு பக்க விளக்கம் உள்ளது. ஆதி என்னும் சொல் சமசுகிருதத்தில் இந்திராதி, முதலிய சொற்களில் இருந்தாலும், வேறு மேலையாரிய மொழிகளில் இதற்கு ஏற்ற சொல்லாட்சிகள் இல்லை. தமிழில் தொல்காப்பியத்தில் 25/26 இடங்களில் முதல் என்னும் சொல் தான் பயபட்டுள்ளது. ஒரே இடத்தில் ஆதி என்னும் சொல் ஆளப்பட்டுளது. தமிழ் இலக்கியத்திலும் பெருமளவு ஆதி ஆளப்படாததால், செந்தமிழ்ச் சொல் இல்லை என்பது கணிப்பு. அகைத்தல் என்றால் எழுதல், கிளைத்தல், முன் வரல் என பொருள் படும். எனவே அகு > அகுதி > ஆகுதி > ஆதி என்றும், அகு > அகை = முன் வரல், முதலாதல் என்று செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி கூறுகிறது. ஆதி என்பது பிற்கால வழக்கு, ஆனால் அது தமிழ் வேரில் இருந்து வந்தது தான்.--C.R.Selvakumar 22:54, 24 ஜூன் 2006 (UTC)செல்வா
தமிழ் அகரமுதலி பக்கத்திற்கு நகர்த்திவிட்டு இப்பக்கத்திலிருந்து வழிமாற்றம் செய்யலாம். -- Sundar \பேச்சு 08:02, 5 டிசம்பர் 2005 (UTC)

tamil dictionaries review[தொகு]

இந்தப் பக்கத்தில் தமிழ் அகரமுதலிகள் பற்றிய விரிவான பயனுள்ள ஆங்கிலக் கட்டுரை உள்ளது. அதை இங்கு தமிழில் தர யாரேனும் முயலலாம்--ரவி 14:37, 2 டிசம்பர் 2005 (UTC)

ரவி அக்கட்டுரையின் பயன் மிகக் குறைவு. அவருடைய புலம்பல் என்னவென்றால் பேச்சு வழக்கான சொற்களும் சொல்லாட்ட்சிகளும் பல்வேறு அகரமுதலிகளில் தரப்படவில்லை என்பது. அதுவும் தமிழல்லாதார் பார்வையில் உள்ளதையே சுட்டுகின்றார். ஏவல் வினை முதலியன குறிப்பிடப்படவில்லை என்கிறார். லெக்சிகோகிராபி (சொல்லகரமுதலிக் கலை) தமிழில் மேற்கத்திய முறைகளில் இன்னமும்தான் இல்லை. பயனுடைய அகரமுதலிப் பட்டியலை இங்கே பார்க்கலாம்--C.R.Selvakumar 23:29, 24 ஜூன் 2006 (UTC)செல்வா

அகரமுதலி கான்ஸ்டன்ஷியுஸ் பெஸ்கி என்னும் கிறிஸ்தவ மத போதகரால் 1732 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. என்றும் 1792 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது என்றும் இரண்டு வெவ்வேறு ஆண்டுகளை குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் எது சரியானது? --HK Arun

பெசுக்கி 1746 ஆம் ஆண்டிலேயே இறந்து விட்டபடியால், அந்த ஆண்டு 1732 ஆக இருக்க வேண்டும். அதற்கேற்ப கட்டுரையில் மாற்றம் செய்திருக்கிறேன்.--Kanags \உரையாடுக 02:18, 7 பெப்ரவரி 2011 (UTC)

இணைய அகராதிகள் இணைப்புகள்[தொகு]

இணையத்தில் காணக் கிடைக்கும் பயனுள்ள தமிழ் அகரமுதலிகள் சில:

அகராதி என்றிருப்பதே பொருத்தம் எனப்படுகிறது[தொகு]

இதன் தலைப்பு அகராதி என்றிருப்பதே பொருத்தம் என்று படுகிறது. மிகுந்த பயன்பாட்டில் உள்ளது. கலைக்களஞ்சியங்களிலும் அகராதி என்றே குறிப்பிடப்படுகிறது. --Natkeeran 17:54, 6 பெப்ரவரி 2011 (UTC)

வீரமாமுனிவர் இயற்றிய சதுரகராதி தோன்றிய காலமும் அச்சேறிய காலமும்[தொகு]

மேலே இப்பொருள் குறித்த உரையாடலைக் கண்டேன். "வீரமாமுனிவர்: தொண்டும் புலமையும்" என்னும் தலைப்பில் 1996இல் தாம் வெளியிட்ட ஆய்வுநூலில் முனைவர் ச. இராசமாணிக்கம் சதுரகராதியை வீரமாமுனிவர் 1732ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21ஆம் நாள் எழுதி முடித்ததாகக் குறிப்பிட்டிருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார் (பக். 153). அதுபோலவே, பேராசிரியர் கா. மீனாட்சிசுந்தரம் அவர்களும் தம் "ஐரோப்பியர் தமிழ்ப்பணி" என்னும் நூலில் (ஆண்டு: 2003) இதே தகவலைத் தருகின்றார்.

மேற்கூறிய இரு ஆய்வாளர்களும் சதுரகராதி அச்சேறிய ஆண்டாக 1824ஐக் குறித்துள்ளனர். அதுபோலவே, இலண்டனில் அமைந்துள்ள "பிரித்தானிய கலைக்கூட நூலகம்" (Library of the British Museum) 1909இல் வெளியிட்ட "தமிழ் நூல் பட்டியலில்" (Catalogue of the Tamil Books) கீழ்வரும் தகவல் உள்ளது. அதை அப்படியே எடுத்தெழுதுகின்றேன்:

இஃது வீரமாமுனிவர் செய்த சதுரகராதி. [Chatur-agaradi. A fourfold dictionary of high Tamil, giving (1) meanings, (2) synonyms, (3) classes, (4) rhymes. Edited by Tandava-raya Mudaliyar and Rama-chandra Kavirayar.] சென்னை [Madras, 1824].

இதிலிருந்து, இன்று பிரித்தானிய கலைக்கூடத்தில் உள்ள சதுரகராதி பதிப்பு 1824ஆம் ஆண்டைச் சார்ந்தது என்றும், அதைப் பதிப்பித்தவர்கள் தாண்டவராய முதலியார், இராமச் சந்திரக் கவிராயர் ஆகியோர் என்பதும் தெரிகிறது. இப்பதிப்பு சென்னைக் கல்லூரியின் இயக்குநராயிருந்த ரிச்சர்டு கிளார்க் என்பவரின் ஆணைப்படி நிகழ்ந்தது என்னும் கூடுதல் தகவலைப் பேராசிரியர் கா. மீனாட்சிசுந்தரம் தருகிறார் (பக். 153).

இத்தகவல்களின் அடிப்படையில் கட்டுரையைத் திருத்துகிறேன். --பவுல்-Paul 04:35, 7 பெப்ரவரி 2011 (UTC)

  • தங்களின் காலச்சுவடுகளால் அகமகிழ்ந்தேன். இதுபோன்ற தமிழ் அகரமுதலிகளின் ஆய்வுகளைப் படிக்க எண்ணுகிறேன். இணையத்தில் கிடைக்குமா?--த* உழவன் 05:04, 7 பெப்ரவரி 2011 (UTC)

மேலே நான் குறிப்பிட்ட நூல்கள் தவிர, செ.வை. சண்முகம் எழுதிய கிறித்துவ அறிஞர்களின் இலக்கணப் பணி, மயிலை. சீனி. வேங்கடசாமி எழுதிய கிறித்துவமும் தமிழும், சேவியர் தனிநாயகம் அடிகளாரின் ஆய்வுகள் போன்றவற்றில் அரிய தகவல்கள் உள்ளன. அவற்றுள் சிலவற்றையாவது தமிழ் விக்கியில் கொணர முடியும் என்று நினைக்கிறேன். நீங்களும் சில அரிய அகரமுதலிகளின் படிமங்கள் பதிவுசெய்துள்ளதை விக்கிமீடியாவில் கண்டேன். பாராட்டுகள்!--பவுல்-Paul 05:20, 7 பெப்ரவரி 2011 (UTC)

  • மயிலை. சீனி. வேங்கடசாமி எழுதிய கிறித்துவமும் தமிழும் நூலைப் படித்து வருகிறேன். தமிழர் வரலாற்று ஆவணங்களை சிறப்பாக பேணுவதில்லை என்றே தோன்றுகிறது.மணப்பாடு என்னுமிடத்தை, பல நூல்களில் மணப்பாறை என்று குறிப்பிட்டுள்ளனர். அம்மாமுனிவர் பதித்த தமிழக இடங்களில், என் காலடிகளையும் பதிக்க என்னுள் எண்ணம் மேலோங்குகிறது. பதிப்பேன்.--த* உழவன் 06:30, 7 பெப்ரவரி 2011 (UTC)
வாழ்வியற் களஞ்சியத்திலும், இணையத்தில் கிடைக்கும் தமிழ்க் கலைக்களஞ்சியத்திலும் விரிவான தகவல்கள் உள்ளன. தமிழ் அகராதியியல் வளர்ச்சி வரலாறு என்ற ஒரு நூலும் உள்ளது. --Natkeeran 05:28, 7 பெப்ரவரி 2011 (UTC)
  • கண்ட பின்பு தொடர்பு கொள்கிறேன்.தகவலுக்கு நன்றி. வணக்கம்.--த* உழவன் 06:30, 7 பெப்ரவரி 2011 (UTC)