பேச்சு:தமிழ்நாட்டுத் தமிழில் வழங்கும் பிற மொழிச் சொற்களின் பட்டியல் - தகவல் தொடர்பு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இத்தகைய பிற மொழிச் சொற்கள் பட்டியல்களில், தமிழ் வழக்குகள் முற்றிலும் இல்லாத, அருகி வரும் சொற்களை மட்டும் இட்டால் பயனுள்ளதாக இருக்கும். கவர், கார்டு, போஸ்டாபீசு, மணியார்டர், லெட்டர் போன்ற தமிங்கிலச் சொற்களைப் பட்டியலிடத் தொடங்கினால், பட்டியல் முடிவே இல்லாமல் நீளும். இவற்றுக்கு நல்ல தமிழ் வழக்குகள் உள்ளன. ரேக்ளா, ரிக்ஷா போன்ற சொற்களைப் பட்டியல் இடலாம். ஆனால், இதற்கும் தகவல் தொடர்புக்கும் என்ன தொடர்பு எனப் புரியவில்லை. ஆதார நூலில் உள்ளதை அப்படியே பட்டியல் இடாமல் பொருத்தமான சொற்களை மட்டும் பட்டியல் இடலாம்--இரவி (பேச்சு) 10:47, 5 மே 2012 (UTC)[பதிலளி]

ஆமாம். இரவியின் கருத்துடன் உடன்படுகிறேன். --Natkeeran (பேச்சு) 13:23, 5 மே 2012 (UTC)[பதிலளி]

இத்தொடர் தலைப்புக்கள், தமிழில் வழங்கும் பிற மொழிச் சொற்களின் பட்டியல் என்றிருக்க வேண்டும். சொற்கள் பட்டியல் அல்ல.--பாஹிம் (பேச்சு) 14:10, 5 மே 2012 (UTC)[பதிலளி]

கவர், கார்டு போன்ற பல்வேறு ஆங்கிலச் சொற்களைப் பலரும் இன்னும் பயன்படுத்தி வருகின்றனர். இவை சிறு குறிப்புக்காகவே பட்டியலிடப்பட்டுள்ளன. தாங்கள் குறிப்பிடுவது போல் ஆங்கிலச் சொற்களைப் பட்டியலிட்டால் அதிகமாக நீளக் கூடும்தான். இருப்பினும் ஆங்கிலச் சொற்கள் குறைவாகவே பட்டியலிடப்பட்டுள்ளன. இருப்பினும் ஆங்கிலம் தவிர்த்த பிற மொழிச் சொற்கள் குறித்து அறிந்து கொள்ள இந்தப் பட்டியல் அவசியமாக இருக்கும் என நினைக்கிறேன். பிற மொழிச் சொற்களுக்குச் சரியான தமிழ்ச் சொற்கள் கிடைத்தால் வ. எண், தமிழில் பயன்படுத்தும் சொல், இடம் பெற்றிருந்த மொழிக்கு அடுத்தபடியாக, சரியான தமிழ்ச் சொல் என்று தனியாக தலைப்பின் கீழ் அட்டவணைப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பும் அமையலாம். எனவே தற்போதைய நிலையில் இப்படியே இருக்கட்டும். கருத்துகளுக்கு நன்றி. தலைப்பு மாற்றம் செய்து கொள்ளலாம். நன்றி.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 14:26, 5 மே 2012 (UTC)[பதிலளி]
பாஹிம் கூறுவது போல தலைப்பு தமிழில் வழங்கும் பிற மொழிச் சொற்களின் பட்டியல் என இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன். இவ்வகையான அனைத்துக் கட்டுரைகளுக்கும் தலைப்புகளை மாற்றலாம். தமிழ்நாட்டுத் தமிழ், இலங்கைத் தமிழ், மலேசியத் தமிழ், பிறநாட்டுத் தமிழ் என வேறுபடுத்தத் தேவையில்லை. (தமிழ்) உலகம் இப்போது சுருங்கி விட்டது:).--Kanags \உரையாடுக 22:42, 5 மே 2012 (UTC)[பதிலளி]
கனக்ஸ், பாஹிம் சொல்வதில் எனக்கும் உடன்பாடே. ஆனால், நற்கீரன் இந்த உரையாடல் பகுதியில் குறிப்பிட்ட கருத்தின்படி தமிழ்நாட்டுத் தமிழில் என்று சேர்க்கப்பட்டது. தலைப்பை மாற்றிக் கொள்வதில் எனக்குக் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:10, 6 மே 2012 (UTC)[பதிலளி]
தமிழ்நாட்டில் வழங்குவது, இலங்கையில் வழங்குவது என்றவாறு குறிப்பிடத்தான் வேண்டுமாயின் அதற்குத் தனி நிரலொன்றை அமைத்து எங்கெங்கெல்லாம் புழக்கத்தில் உள்ளதென்று கூறலாமே.--பாஹிம் (பேச்சு) 02:28, 6 மே 2012 (UTC)[பதிலளி]