பேச்சு:சோலைமந்தி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோலைமந்தி எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia
சோலைமந்தி என்ற இக்கட்டுரை, விக்கித் திட்டம் இந்தியத்துணைக்கண்டப் பாலூட்டிகள் என்னும் திட்டத்துள் அடங்கியதாகும்.

இத்திட்டக் கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடையவர், இத்திட்டத்தில் உறுப்பினராகலாம். இத்திட்டத்தில் பங்களிக்க விரும்புவர், இத்திட்டப் பக்கத்திற்குச் சென்றால், அங்கு நிறைவேற்ற வேண்டியப் பணிகளின், பட்டியலைக் காணலாம்.

மந்தி என்பது குரங்கைத் தானே குறிக்கும். (மந்தி தமிழ்ப் பெயர் தானா?). குரங்கு பக்கத்துக்கு வழிமாற்றம் தரலாமா?--Kanags \பேச்சு 01:09, 7 ஜூலை 2008 (UTC)

மந்தி என்பது தமிழ் பெயர்தான். இச்சொல் "குற்றாலக்குறவஞ்சியில்" கையாளப்பட்டுள்ளது. எந்தப் பாடல் என்று தெரியவில்லை :-(.

மந்தி என்பது ஆங்கிலத்தில் "macaque" என்பதையும் குரங்கு என்பது "monkey"யை குறிப்பதற்காக உபயோகப்படுத்தப்பட்டிருக்கலாம்? என நினைக்கிறேன்.

தமிழ் நாட்டில் மட்டும் குறைந்தது 5 வகையான முதனிகள் உண்டு, ஆகையால் எல்லாவற்றையும் குரங்கு என்ற பொதுப்பெயரின் கீழ் கொண்டுவர இயலாது என்பது என் கருத்து. இன்னபிற முதனிகளை பற்றி விரைவில் எழுத உள்ளேன்--கார்த்திக் 13:27, 7 ஜூலை 2008 (UTC)

நன்றி கார்த்திக்.--Kanags \பேச்சு 13:47, 7 ஜூலை 2008 (UTC)
மந்தி என்று கூகிளில் போட்டாலே நிறைய தரவுகள் கிடைக்கின்றன. சில குரங்கு என்றும் அர்த்தம் கொள்கின்றன. --Natkeeran 13:49, 7 ஜூலை 2008 (UTC)

மந்தி என்பது பெண் குரங்கு மட்டும்.--பாஹிம் 10:10, 30 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

முன்பு பெண் பால் குரங்கை மட்டும் குறித்து வந்தாலும் பிற்கால வழக்கில் இரு பால் குரங்குகளையும் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. [1]. மந்தி என்பதைக் குரங்கென்று மாற்றத் தேவையில்லை--சோடாபாட்டில்உரையாடுக 10:23, 30 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சோலைமந்தி&oldid=941092" இலிருந்து மீள்விக்கப்பட்டது