பேச்சு:சேனாதிராச முதலியார்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சேனாதிராச முதலியார் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

இவரின் சாதிப்பெயர் பல இடங்களில் வருகிறது. குறைத்துக் கொள்ளலாமே? -- சுந்தர் \பேச்சு 17:18, 4 டிசம்பர் 2009 (UTC)

இவர் சேனாதிராச முதலியார் என்றே அறியப்பட்டாலும், விக்கி பெயரிடும் முறைப்படி தலைப்பை "நெல்லைநாதர் சேனாதிராசா" என மாற்றலாம். (சிங்காரவேலு முதலியார், ஆ. சிங்காரவேலு என்பது போல)--Kanags \பேச்சு 10:59, 5 டிசம்பர் 2009 (UTC)
எவருக்கும் மறுப்பு இல்லையெனில் மாற்றி விடலாம். -- சுந்தர் \பேச்சு 17:45, 5 டிசம்பர் 2009 (UTC)
இலங்கையில் முதலியார் என்பது சாதிப் பெயர் அல்ல. அது ஒரு பதவி அல்லது பட்டப் பெயர் ஆகும். இலங்கையில் முதலியார் என்றொரு சாதி கிடையாது.மயூரநாதன் 18:45, 5 டிசம்பர் 2009 (UTC)
ஓ, வியப்பான செய்தி. நான் அறிந்திருக்கவில்லை. -- சுந்தர் \பேச்சு 14:59, 6 டிசம்பர் 2009 (UTC)
தமிழ் நாட்டிலும் முதலியார் என்பது ஒரு பதவிப் பெயராகத்தான் இருந்தது என்று எங்கோ வாசித்ததாக ஞாபகம். இலங்கையில் யாழ்ப்பாண இராச்சியத்திலும், சிங்கள அரசுகளிலும்கூட இந்த முதலியார் பதவி இருந்தது. பின்னர் குடியேற்றவாத ஆட்சிக் காலங்களிலும் இது நீடித்தது. பொறுப்புக்களில் மாற்றம் இருந்திருக்கலாம். இது மிகவும் செல்வாக்குள்ள பதவி. இப்பொழுது இந்தப் பதவி இல்லை. பழைய காலத்தில் இலங்கையில் இருந்த இத்தகைய பதவிகள், பட்டங்கள் குறித்து ஒரு கட்டுரை எழுதலாம். கொஞ்சம் தகவல்கள் சேகரிக்க வேண்டும்.மயூரநாதன் 15:56, 6 டிசம்பர் 2009 (UTC)