பேச்சு:செம்போத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Exquisite-kfind.png செம்போத்து எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia


செண்பகம் - செம்பகம். எது சரி. செம்பகம் பேச்சு வழக்குப் போல் தெரிகிறது.--சிவக்குமார் \பேச்சு 06:53, 9 ஏப்ரல் 2012 (UTC)

செம்பகம் என்பதுதான் சரி. செண்பகம் அல்ல. மாறாக, சண்பகம் என்ற பெயரில் தாவரம் ஒன்றுள்ளது.--பாஹிம் (பேச்சு) 23:51, 9 ஏப்ரல் 2012 (UTC)

மரபைப் பேணுவோம்
  • செம்போத்து என அழைத்துப் பாடப்படும் நாட்டுப்புறப்பாடல் ஒன்று உள்ளது
செம்போத்து செம்போத்து
யாரு வாரார் செம்போத்து
அத்தை வாராரார் செம்போத்து
அத்தைக்கென்ன சாதங்கறி

இப்படி இந்தப் பாட்டு வளரும். எனவே இந்தக் கட்டுரையின் தலைப்பைச் செம்போத்து என மாற்றிவிடுவது நலம். பெருவழக்குச் சொல்லைப் பயன்படுத்துங்கள். அருவழக்குச் சொல்லில் ஆராய்ச்சி வேண்டாம்.

நானும் செம்போத்து என்னும் பெயரையே பெரும்பாலும் கேட்டிருக்கின்றேன். சிலர் சண்பகப் பட்சி, செண்பகப் பறவை என்றும் சொல்லவும் கேட்டிருக்கின்றேன். ஆனால் மிகப்பெரும்பாலும், செம்போத்து என்றே கேட்டிருக்கின்றேன். --செல்வா (பேச்சு) 01:03, 28 மே 2012 (UTC)
நானும் செம்போத்து அல்லது செம்பூத்து என்றே பேச்சு வழக்கில் கேட்டிருக்கிறேன். ஈரோடு, கோவைப் பகுதிகளில்.--சிவக்குமார் \பேச்சு 06:08, 28 மே 2012 (UTC)
இன்றும் செம்பூத்து என்றே எங்கள் பகுதியில் கூறுவார்கள்... :)--சண்முகம் (பேச்சு) 06:23, 28 மே 2012 (UTC)
  • நிர்வாகிகள் கவனத்துக்கு
    • மரபைப் பேணியும், பழந்தமிழின் பாங்கைக் கருதியும் மாற்றிவிடுங்கள். தயக்கம் வேண்டாம். இழுபறி வேண்டாம். காலம் கடத்த வேண்டாம். --Sengai Podhuvan (பேச்சு) 01:12, 28 மே 2012 (UTC)
Yes check.svgY ஆயிற்று இதை நீங்களே செய்யலாம் ஐயா.. பார்க்க உதவி:பக்கத்தை நகர்த்துதல்--சண்முகம் (பேச்சு) 06:23, 28 மே 2012 (UTC)

(கட்டுரைகளை ஒன்றிணைக்கும் போது இக்கருத்து ஒன்றிணைக்கப்பட்டது)செம்பகம் என்பதே சரியான பெயர் (பார்க்க: தமிழில் பறவைப் பெயர்கள் - முனைவர் க. ரத்னம் - பக். 44)--பரிதிமதி (பேச்சு) 17:07, 10 மே 2012 (UTC)

அன்புள்ள பரிதிமதி, இரு வழக்கும் சரியே.
எனினும் செம்போத்து என்பது செஞ்சொல். மரபுவழக்கு. 
செம்பகம் என்பது திசைச்சொல் (வட்டார வழக்கு) 
செஞ்சொல் வேண்டாம். வட்டார வழக்கே இருக்கட்டும் எனக் கருதினால் எனக்கென்ன? 
ஒழியட்டும்.−முன்நிற்கும் கருத்து Sengai Podhuvan (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது. 

ஐயா பரிதிமதி அவர்கள் இந்த கருத்தை மே மாதம் 10 தேதியே செண்பகம் (பறவை) எனும் கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் குறிப்பிட்டார். இரண்டு கட்டுரைகளையும் ஒன்றிணைக்கும் போது இக்கருத்து ஒன்றிணைக்கப்பட்டது, தவறாக நினைக்க வேண்டாம்--சண்முகம் (பேச்சு) 08:19, 28 மே 2012 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:செம்போத்து&oldid=1529331" இருந்து மீள்விக்கப்பட்டது