பேச்சு:சென்னை புத்தகக் காட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நக்கீரன் குமுதம் குங்குமம் விகடன் புதிய தலைமுறை போன்ற பத்திரிக்கைகளும் பதிப்பகங்களை வைத்திருக்கின்றன. அவற்றை இணைக்கலாமா!.

- சகோதரன் ஜெகதீஸ்வரன் \பேச்சு

தாராளமாக. :-) அதுவும் இம்முறை எங்கு கண்டாலும் புதிய தலைமுறை தென்படுகிறது :-)--சோடாபாட்டில்உரையாடுக 12:30, 11 சனவரி 2011 (UTC)

சென்னை நூல் கண்காட்சி எனலாம். --Natkeeran 14:05, 9 செப்டெம்பர் 2011 (UTC)

இந்த நிகழ்வு சென்னைப் புத்தகக் கண்காட்சி என்று பயன்பாட்டிலிருப்பதால் அப்படியே இருந்துவிட்டுப் போகட்டுமே...--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 16:14, 9 செப்டெம்பர் 2011 (UTC)
அதிகாரப் பெயர் ”சென்னைப் புத்தகக் கண்காட்சி” தான். மாற்ற வேண்டாம்.--சோடாபாட்டில்உரையாடுக 16:25, 9 செப்டெம்பர் 2011 (UTC)
அதிகாரப் பெயர் ‘சென்னை புத்தகக் காட்சி’ என்பது தான். ‘கண்காட்சி’ என்பது சரியல்ல. தலைப்பிலேயே மாற்றம் தேவை! --பயனர்:மாயவரத்தான்/உரையாடுக. 16:14, 27 ஏப்ரல் 2013 (UTC)

பங்கு கொள்ளும் பதிப்பகங்கள் பட்டியல் தேவையா?[தொகு]

இக்கட்டுரையிலுள்ள “பங்கு கொள்ளும் பதிப்பகங்கள்” தலைப்பின் கீழ் இருக்கும் தமிழ் பதிப்பகங்கள், பன்மொழிப் பதிப்பகங்கள் போன்ற உள் தலைப்புகளை முழுமையாக நீக்கிவிடலாம் என நினைக்கிறேன். இக்கண்காட்சியில் 600க்கும் அதிகமான கடைகள் அமைக்கப்படும் போது குறிப்பிட்ட சில பதிப்பகங்கள் பட்டியலை மட்டும் இங்கு இணைப்பது சரியாக இல்லை என கருதுகிறேன். மேலும் பதிப்பகங்கள் பட்டியல் தனித் தலைப்பில் தனிக் கட்டுரையாக இடம் பெற்றிருப்பதால் இங்கு பதிப்பகங்கள் பட்டியல் தேவையில்லை என நினைக்கிறேன். மற்றவர்கள் கருத்து அறிய விருப்பம்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 14:20, 9 செப்டம்பர் 2013 (UTC)

மிகவும் பயன் மிக்க தகவலே. முழுமை இல்லை எனில் அதைப் பற்றிய ஒரு குறிப்பைச் சேர்க்கலாம். பிற பயனர்கள் முழுமைப்படுத்த உதவலாம். --Natkeeran (பேச்சு) 13:12, 10 செப்டம்பர் 2013 (UTC)