பேச்சு:சுருங்குறித்தொடர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கட்டுரையின் தலைப்பில் அல்லது உள்ளடக்கத்தில் பொது பயன்பாட்டில் இல்லாத அல்லது புதிய தமிழ் சொற்கள் அல்லது சொற்தொடர்கள் உள்ளன. அவற்றுக்கு இணையான பொது பயன்பாட்டில் இருக்கும் அல்லது பொருள் இலகுவில் புலப்படக்கூடிய அல்லது எளிய சொற்கள் இருந்தால் தயவுசெய்து இங்கே தெரிவியுங்கள். நீங்களே கட்டுரையில் மாற்றங்களை ஏற்படுத்தி இங்கே விளக்கம் தந்தாலும் நன்றே.

--Natkeeran 16:49, 15 அக்டோபர் 2008 (UTC)[பதிலளி]

குறித்தொடர், சுருங்குறித்தொடர், சீர்குறித்தொடர்....??? --Natkeeran 16:49, 15 அக்டோபர் 2008 (UTC)[பதிலளி]

இதனை எழுத்துத்தொடர் என்றே குறிக்கலாமே. பொது எழுத்துதொடர் = regular expression ?? symbol என்பதற்கு குறி அல்லது குறியெழுத்து என்று கூறலாம். மேப்பிள் அல்லது மாத்தமாட்டிக்கா போன்ற வணிக மென்பொருள்களில் பயன்படும் Symbolic computation என்பதை குறிக் கணிமை அல்லது குறியெழுத்துக் கணிமை எனலாம். (கணிமை என்னும் சொல் சரியானதுதானா என்பது என் தீராக் கேள்வி). string என்பதையும் எழுத்துத்தொடர் என்றுதான் கூறுகிறோம் அல்லவா? எழுத்துக்கோவை என்றும் சொல்லாம். அல்லது கோவை என்றே சுருக்கமாகச் சொல்லலாம். --செல்வா 17:20, 15 அக்டோபர் 2008 (UTC) regular, standard என்பதை சீர்வழக்கு, சீர்வடிவ, ஒழுங்குசெய்த, ஒழுங்குற்ற, சீருற்ற, சீர்செய்த, சீர்நிறுவிய என இடத்திற்கு ஏற்றார்போல வழங்கலாம்.. --செல்வா 17:25, 15 அக்டோபர் 2008 (UTC)[பதிலளி]

கணிமை பொருந்தாது என்றால் நல்ல மாற்றுப் பயன்பாடு இருந்தால் பரிந்துரையுங்களேன். சில இடங்களிலாவது பயன்படுத்திப் பார்க்கலாம். -- சுந்தர் \பேச்சு 08:10, 20 அக்டோபர் 2008 (UTC)[பதிலளி]
string என்பதற்கு எழுத்துதொடர் என்ற சொல்லே வழக்கம். ஆனால் expression என்ற சொல்லுக்கு எது வழக்கமான சொல் என்று தெரியவில்லை. www.tcwords.com இல் array என்பதற்கே கோவை என்று தந்துள்ளார்கள். அணி என்ற சொல் matrix கணிதத்தில் குறிக்கிறது.
பொதுவாக எழுத்துதொடர்களையே regex பண்ணில்லாம், பொதுவாக மேல் நிலையில் அவற்றை குறியீடுகள் என்றே குறிக்கலாம்.
எனினும் இந்த சொல் சுந்தர் பரிந்துரை செய்தது. சுருங் என்று அவர் சேர்த்தது "regular expressions provide a concise and flexible means for identifying strings of text of interest" என்ற விளக்கத்தை கருத்தில் கொண்டு என்று நினைக்கிறேன். --Natkeeran 21:40, 15 அக்டோபர் 2008 (UTC)[பதிலளி]
ஆம், நற்கீரன். நான் அந்த அடிப்படையிலேயே அதைப் பரிந்துரைத்தேன். ஆனால் இந்தப்பெயர் முழுமையாகப் பொருந்துகிறதா என்றறியேன். செல்வா, எடுத்துக்காட்டாக '(ab)*ca+' என்ற தொடர் "ca, caa, caaa, ..., abca, abcaa, ..." போன்ற எழுத்துத்தொடர்களுக்குப் பொதுவானது. மொழியியலில் இந்தக் குறியீடு குறிக்கும் எழுத்துத்தொடர்களின் கணத்தை ஒரு regular language என்பர். '(ab)*ca+' என்பது இந்த மொழிக்கான இலக்கணம் போன்றது. இதைக் கொண்டு ஒரு நல்ல மொழிபெயர்ப்பு வேண்டும். regular languages < context-free languages < recursively enumerable languages என்று நோம் சாம்சுக்கி வரைந்த கருவான, ஆழமான கருத்தியல் பின்புலம் கொண்ட படிநிலையைச் சிறிது சிறிதாகவேனும் தமிழில் எழுதி முடிக்க ஆவலாயுள்ளேன். -- சுந்தர் \பேச்சு 04:35, 16 அக்டோபர் 2008 (UTC)[பதிலளி]

கூகுளின் கட்டுரை : சுருங்குறித் தொடர் கட்டுரையை பேச்சுப்பக்கத்திற்கு நகர்த்துதல் குறித்து..[தொகு]

சுருங்குறித் தொடர் என்ற கூகுளின் கட்டுரை 2010 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இக்கட்டுரை, அதற்கு முன்னமே 2008 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அதன் விக்கித்தரவு இணைப்பும் தவறாக உள்ளது. கூகுளின் கட்டுரை நடை, சுருங்குறித் தொடரை விட, சிக்கலாக உள்ளது. நான் கற்றவரை, அது சுருங்குறித் தொடரின் பொருண்மையை தரவில்லை. சுருங்குறித் தொடரின் மேன்மையை எளிய நிகழ்பட பாடங்களால் விரிவாக்க விரும்புகிறேன். எனவே, இரண்டாவதாக உருவாக்கப்பட்ட, கூகுள் கட்டுரையை, முதலாவதாக உருவாக்கப்பட்ட, இகட்டுரையின் பேச்சுப்பக்க பரணுக்கு மாற்றலாமென்று எண்ணுகிறேன். எண்ணமிடுக. --உழவன் (உரை) 10:12, 15 சூன் 2018 (UTC)[பதிலளி]

@Info-farmer: பழைய கட்டுரையை வைத்துக் கொண்டு (அதாவது முன்னிலைப்படுத்தி) இரு பக்க வரலாற்றையும் இணைத்து விடலாம். பேச்சுப் பக்கத்துக்கு மாற்றுவது தேவையற்றது.--Kanags (பேச்சு) 12:11, 15 சூன் 2018 (UTC)[பதிலளி]
சிறப்பு. அத்தகைய நகர்வை நான் செய்தது இல்லை. நீங்கள் அதனை செய்யும் முறையை ஒரு நிகழ்படமாக உருவாக்கி, அதனை இங்கு இணைக்கக் கோருகிறேன். படிப்பதை விட, இம்முறையை பலரும் உடன் பின்பற்றுவர்.--உழவன் (உரை) 04:57, 1 சூலை 2018 (UTC)[பதிலளி]