பேச்சு:சாதாக்கெண்டை மீன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது சாதாக்கெண்டை மீன் என்றே அழைக்கப்படுவதாக நினைக்கிறேன்.--Kanags \உரையாடுக 05:06, 26 மார்ச் 2016 (UTC)

ஆமாம். சாதாக்கெண்டை மீன் என்றே அழைக்கப்படுகிறது.--நந்தகுமார் (பேச்சு) 05:20, 26 மார்ச் 2016 (UTC)

சாதா என்றால் என்ன பொருள்? சாதாரணத் தேநீர் என்பதை ஒரு சிலர் சாதாடீ என்பது போன்றுதான் இதிலும் நடக்கிறது. தமிழில் சாதா என்றொரு சொல்லே கிடையாது.--பாஹிம் (பேச்சு) 06:40, 26 மார்ச் 2016 (UTC)

இக்காலத்தில் இன்னுஞ் சிலர் சகோதரன் என்பதைச் சுருக்கி சகோ என்றும், அதிலுஞ் சிலர் ஒரு படி மேலே போய் சகோஸ் என்றும், அநாமதேயம் என்ற சொல்லை அறியாமல் அனானி என்றும் திரித்துப் பயன்படுத்துவதைப் போன்ற வழக்கங்களை விக்கிப்பீடியா ஏற்றுக்கொள்ளுமா?--பாஹிம் (பேச்சு) 06:43, 26 மார்ச் 2016 (UTC)

ஆம், அப்படி சகோ என ஒரு குறிப்பிட்ட நபர் பொதுவாக அழைக்கப்படுவாரானால் விக்கியிலும் அவரைப்பற்றி எழுதும் போது அவ்வாறே எழுதப்பட வேண்டும். அதற்காக எல்லாரையும் சகோ என எழுத முடியாது. சாதாக்கெண்டை மீனும் அவ்வாறே. அதற்காக சாதாரண என்ற சொல்லை அனைத்துக்கும் சாதா என மாற்ற முடியாது. இம்மீன் சாதாரண கெண்டை மீன் என்று நீட்டி முழக்குவதற்குப் பதிலாக சாதாக்கெண்டை மீன் எனப் பழக்கப்பட்டு விட்டது. அதுவே நிலைத்தும் விட்டது. இவ்வாறு தமிழில் ஒரு சில பெயர்கள் மருவுவது இயற்கை தானே.--Kanags \உரையாடுக 07:36, 26 மார்ச் 2016 (UTC)