பேச்சு:க்ஷ்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது கிரந்தம் தொடர்பான உரையாடல் இல்லை. க்ஷ் குறித்தது. இதைப் பற்றி மட்டும் உரையாடுமாறு வேண்டுகிறேன்.

தமிழில் கிரந்தம் சேர்ப்பது இருக்கட்டும். புறந்தள்ளுங்கள். ஒலிப்புக்காக என்று ஒப்புக்குக் கூறி சேர்த்துக் கொள்வதில் ஒரு நியாயம் உள்ளது. அல்லது ஒலிப்பா முக்கியம், எனவே கிரந்தம் வேண்டாம் என்று சொல்லுவதிலும் ஒரு நியாயம் உள்ளது.

ஒரு கூட்டெழுத்தை, அதுவும் தமிழ் விதிகளுக்கு ஒவ்வாத ஒரு கூட்டெழுத்தை எப்படி சேர்த்துக் கொள்ள முடியும்?? உடனடியாக ஒதுக்குவது தானே முறை! என்னால் பொறுக்க முடியவில்லையே!

க்ஷ் வழக்கில் இல்லை. ஆம், ஸ்ரீ என்னும் எழுத்தாவது கோவில் குளங்களில் உள்ளது. இவ் வெழுத்து இல்லை. கிரந்த எழுத்தை பயன்படுத்தும் ஏறத்தாழ 99% பேருக்கு ஜு, ஹூ போன்ற எழுத்துகளை எழுதத் தெரியாது என்பது மறுக்க முடியாத உண்மை, ஜ், ஜ, ஜை, ஜோ போன்ற எழுத்துகள் மட்டுமே தெரியும், இவற்றின் பிற உயிர்மெய்களை யாருக்கும் எழுதத் தெரியாது என்பதே உண்மை. அதிலும் க்ஷ் இன் உயிர்மெய்கள் சுத்தம்!! நம்மில் யாருக்கும் எழுதத் தெரியாது அல்லது எழுதிப் பழகியதில்லை. இவ்வெழுத்தை நீக்கியே வந்துள்ளோம். இது பெருவழக்கும்கூட. எனவே, இக்கட்டுரையில் பயன்பாட்டில் உள்ளது எனக் கூறி ஏன் அதைத் தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கச் செய்ய வேண்டும் அல்லது இருப்பதாக அறிவிக்க வேண்டும்?. வழக்கிலில்லை என்று கூறினால் போதுமே? தயவு செய்து இவ்வெழுத்து தொடர்பாக மட்டும் மறுமொழி கூறி உதவுங்கள். நன்றி -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:43, 19 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிப்பீடியாவில் க்ஷ் பயன்பாடு பற்றிய ஒரு (நுட்ப) உரையாடலுக்குப் பார்க்க: விக்கிப்பீடியா:தனியெழுத்து மாய இடைவெளி நீக்கம். விக்கிமீடியா பணிக்குச் சென்றிருக்கும் சிரீக்காந்த் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும் :)--இரவி (பேச்சு) 19:39, 19 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

க்ஷ் என்ற எழுத்து இலங்கையில் சிறிதளவு வழக்கிலிருந்திருக்கிறது, உள்ளது. பரீக்ஷை என்ற சொல்லை ஆறுமுகநாவலர் தனது இலக்கணச் சுருக்கம் எனும் நூலில் கையாண்டுள்ளார். --மதனாகரன் (பேச்சு) 03:23, 20 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:க்ஷ்&oldid=1238115" இலிருந்து மீள்விக்கப்பட்டது