விக்கிப்பீடியா:தனியெழுத்து மாய இடைவெளி நீக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பார்க்க


பயனர்:Logicwiki/ZWNJ பக்கத்தில் அனைத்து ZWNJ கொண்ட பக்கங்களையும் இட்டுள்ளேன். அதில் குறிப்புகளும் இட்டுள்ளேன். இங்கு எவ்வாறு துப்புரவு செய்வது என்பது பற்றி உரையாடிய பின்னர் துப்புரவைச் செய்யலாம். மீடியாவிக்கி நிரலாளரும் இந்திய மொழி கணிமை வல்லுனரான சந்தோஷ் தொட்டிங்கலிடம் ZWNJ/ZWJ/ZWSP பற்றி கேட்டறிந்தேன். இது பிற மொழிகளில் ஒரு எழுத்துக்கள் பல வடிவங்களில் வருமாயின், அவற்றை எழுத்துருக்கள் புரிந்து கொள்ள உதவக்கூடிய மாயயெழுத்துக்கள் இவை. அவர் தமிழில் இது பயன்படுத்துவதில்லை என்றார். ஆனால் ஒருங்குறியின் இது பற்றிய அறிக்கை ஒன்றில் தமிழிலும் ZWNJ பயன்படுத்தலாம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

For example, because Tamil only uses a Join_Control character in one specific case

ஆனால் எந்த ஓரிடம் என்று சொல்லவில்லை. தமிழ் விக்கியின் தலைப்புகள் தரவில் ஓட்டிப் பார்த்ததில் 'க்ஷ்' க்கு மட்டும் இது தேவைப்படலாம் என்று தோன்றுகிறது, ஏனென்றால் நான் க்.ஷ், க்ஷ் என்று இரு முறையையும் பார்த்த நினைவு.(நான் தவறாக இருக்கலாம்). தமிழா குழுவில் உரையாடல் ஒன்றைத் தொடங்கி மேலும் விவரங்கள் அறியமுடியுமா என்று பார்க்கிறேன். தலைப்புகளை சரி செய்த பின்னர் regex மூலம் இயங்கும் ஒரு தானியங்கியைக் கொண்டு முழு தரவிலிருந்து இதை நீக்கிவிடலாம். கூகிள் ZWNJ நீக்கித் தான் தேடுதல் முடிவுகளைத் தருமாம்(ஆகையால் அங்கு பாதிப்பில்லை). ஆனால் விக்கியிலுள்ள தேடுதல்(பொதுவாக் Lucene) ZWNJ இருந்தால் இரண்டு சொற்களாகப் பிரித்துப் பார்க்கும். தானியங்கி ஓட்டுவதை உடனடியாகச் செய்ய வேண்டும் என்பதில்லை, இவ்வளவு காலம் இருந்த இவ்வழு மேலும் சில நாட்கள் பொருத்திருந்து, இதுபற்றி நன்கு முழுமையாக அறிந்த பிறகு சரியான முறையில் சரி செய்தால் நன்மை. நன்றி ஸ்ரீகாந்த் (பேச்சு) 17:40, 31 மே 2012 (UTC)


சில உரையாடல்களைப் படித்ததிலும், தரவுகளைப் பார்த்ததிலும் ZWNJ க்ஷ க்‌ஷ(க்ZWNJஷ) வேறுபடுத்துவதற்கு மட்டும் பயன்படுத்தலாம் என்ற புரிதலுக்கு வந்துள்ளேன். அது தவிர தமிழ் விக்கியில் ஃபோ என்பதை இரு எழுத்தாக மாற்ற ZWNJ ஓரிடத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது தவறு என நினைக்கிறேன். தவிர ஒருங்குறி அறிக்கையிலேயே ZWNJ ஒரு இடத்தில் மட்டும் பயன்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர். தமிழா குழுமத்திற்கு மடல் அனுப்பியுள்ளேன். விளக்கம் வரும் வரை காத்திருக்கிறேன். ஏற்கனவே பயனர்:Logicwiki/ZWNJ பட்டியலிலிருந்த சர்ச்சையற்ற பிற கட்டுரைகளை நகர்த்தி, தேவையற்ற தலைப்புகளை நீக்கிவிட்டேன். பிற திட்டங்களிலும் நிர்வாகிகள் அவ்வாறு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். அடுத்து செய்ய வேண்டியவை

  1. தானியங்கி கொண்டு முழு தரவுதளத்திலுள்ள க்‌ஷ தவிர்த்து அனைத்து ZWNJகளையும் நீக்க வேண்டும். (க்‌ஷ முடிவு பொருத்து மாறலாம்)
  2. எ-கலப்பை, என்.எச்.எம் ரைட்டர் முதலிய தட்டச்சு கருவிகளின் பால் வழுக்கள் பதிந்து அவை மூலம் தட்டச்சும் பயனர்கள் தேவையில்லா இடங்களில் ZWNJ நுழைக்காமல் இருக்கச் செய்யவேண்டும்.
  3. அவர்கள் அவ்வழுக்களை சரி செய்யாமலிருந்தாலோ, பயனர்கள் பழைய வழுவுள்ள பதிப்பை தட்டச்சப் பயன்படுத்தலாம் என்பதாலும் ZWNJ நீக்கும் தானியங்கி மாதம் ஒரு முறை ஓட்டிக் கொண்டிருக்க வேண்டும்.
  4. தேவையற்ற இடங்களில் ZWNJ நீக்குவது தேடல் முடிவுகளின் தரத்தை உயர்த்தும். ஆகையால் அவசியம் செய்ய வேண்டிய ஒன்று. முன்பே இரு முறை இதுபற்றி உரையாடியும் நீக்காமல் விட்டது தவறிய வாய்ப்புகள். :(

க்ஷ் பற்றி[தொகு]

  1. பேச்சு:அக்சோப்ய_புத்தர் பக்கத்தில் இரவி க்ஷ்(கூட்டாக எழுதுவது) எப்படி பொது வழக்கில் இல்லாதது என்று குறிப்பிட்டுள்ளார். க்‌ஷ(தனித்தனியாக எழுதுவது) தமிழகத்திலாவது பொது வழக்கில்(சிறு அளவில்) உள்ளது.
  2. கிரந்தம் பற்றி இணக்க முடிவில்லாததால் க்ஷ் பயன்பாடுத் தெளிவு வேண்டும். (வெறும் வழிமாற்றுதலாக இருந்தாலும் கூட)
  • தெரிவு 1: எப்படி கிரந்தம் தவிர்த்தும் சேர்த்தும் எழுதுவது போல் ZWNJ பயன்பாட்டையும் பயனரின் விருப்பத்திற்கேற்றார் போல் விட்டுவிடலாம்.
  • தெரிவு 2: ZWNJ சேர்க்க கூடாது. க்ஷ கூட்டெழுத்தாகத் தான் இருக்க வேண்டும்.
  • தெரிவு 3: ZWNJ சேர்த்தே அனைத்து க்‌ஷ எழுத வேண்டும். இதற்கு தட்டச்சுக் கருவியில் மாற்றம் செய்ய வேண்டும். எழுத்துப்பெயர்ப்பில் செய்துவிடலாம். தமிழ்99 வடிவத்தில் இப்பொழுது இடமில்லை. சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. தமிழ்99 இல் T கூட்டெழுத்து இடவேண்டும். hfW விசைகளால் 'க்‌ஷ' பிரித்தே வரும். இலங்கையில் பிரித்தே எழுதும் வழக்கே இருப்பதாகவும், அதுவே மாற்றியமைக்கப்பட்ட இரங்கநாதன் வடிவத்திலுள்ளதாகப் படித்தேன்

உங்கள் கருத்தக்களை இங்கு இடவும். சந்தேகமிருப்பின் கேளுங்கள் :) ஸ்ரீகாந்த் (பேச்சு) 19:57, 2 சூன் 2012 (UTC)


1. தமிழக அரசாணை -- APPENDIX - C Tamil99 Extended Keyboard Sequence for Tamil Unicode (TU) and TACE16 page 9 of 13 -- (பக்கம் 37)யில் உள்ள ZWNJ பற்றிய குறிப்பு இயல்பிருப்பாக க் பிறகு ஷ தட்டச்சு செய்தால் க்‌ஷ பிரித்தே எழுத்தப்படவேண்டும், கூட்டேழுத்து வேண்டுமென்போர் அதற்கென உள்ள தனி விசை பயன்படுத்த வேண்டும். ஸ்ரீகாந்த் (பேச்சு) 06:11, 6 சூன் 2012 (UTC)


கருத்துக்கள்[தொகு]

கிரந்தத்தை நீக்கி எழுத மேலும் ஒரு காரணம் :) க்ஷ அல்லது க்‌ஷ வேண்டுமென்றால் எனது வாக்கு தெரிவு 2க்கே. இதனை பயனர் விருப்பிற்கு விடுவது சரியில்லை. தமிழகத்திலும் இலங்கையிலும் ஒரேபோல இருக்க வேண்டுமெனில் தெரிவு 3இன்படி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.--மணியன் (பேச்சு) 20:14, 5 சூன் 2012 (UTC)
நான் தெரிவு 1 விரும்புவேன். ஆனால் தமிழக அரசாணைப் படி க்-ஷ தட்டச்சு செய்யும் பொழுது தனியாக வரவேண்டும், கூட்டெழுத்து வேண்டுமென்போர் அதற்கென உள்ள தனி விசையைப் (அறிந்து) பயன்படுத்த வேண்டும். ஸ்ரீகாந்த் (பேச்சு) 06:11, 6 சூன் 2012 (UTC)
உயிர்மெய்யாக வரும்பொழுது கூட்டெழுத்து சிக்கலைத் தரும். க்‌ஷோ என்பது எளிமையாக இருக்கும். க்ஷோ, க்ஷை, க்ஷௌ என்று எழுதுவது தமிழ் வழக்கிற்கு தவறான நடைமுறையாகும். ஷ என்ற எழுத்திற்கு உண்டான ஓ உயிரை ’க’விற்கும் சேர்த்து எழுதுவது பொருந்தாது. பழைய கிரந்தக் கூட்டெழுத்து முறை வழக்கத்தில் இல்லை என்பதால், இரண்டு வழிகளே உள்ளன.
1. எல்லா எழுத்துகளுக்கும் சேர்த்து பழைய கூட்டெழுத்து முறையை சேர்க்க வேண்டும். அது நடைமுறைக்கு ஒவ்வாது. யாருக்கும் புரியாது!! எளிமையானதும் அல்ல. ஒருங்குறியில் சேர்ப்பதும் தேவையில்லாத ஒன்று. பாதி எழுத்துகள் அரைகுறையாகவே தெரியும்.
2. இருக்கின்ற இரண்டு கூட்டெழுத்துகளையும் உடைத்தெழுத வேண்டும். உடைத்தெழுதுவதால் எளிமையாகவும் இருக்கும். கையால் எழுதுவோருக்கு குழப்பமும் வராது. ே+க்ஷ+ ா என்ற வரிசையில் எழுதுவது வழக்கத்திலும் இல்லை. இந்த வரிசையில் சிந்தித்து எழுதும்படி அரசுப் பாட நூல்களில் கற்பிக்கப்படவும் இல்லை. எழுத்துகளை அகர வரிசைப்படுத்தும்போதும் தவறாக வரிசைப்படுத்தப்படும். எனவே, இரண்டு கூட்டெழுத்துகளையும் உடைத்தெழுதுவதே சிறந்தது. zero width non joiner போட்டு உடைத்தெழுதலாம். விரும்புவோர் இணைத்து எழுதிக் கொள்ளட்டும். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:54, 15 ஆகத்து 2014 (UTC)