பேச்சு:குறைகடத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Wikipedia-logo-v2-bw.svg குறைகடத்தி என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

குறைமின்கடத்தி கட்டுரையின் பேச்சுப் பக்கம்[தொகு]

இத்தலைப்பை நீக்க வேண்டுகிறேன். குறைக்கடத்தி என்பதே சிறந்த சொல். அரையும்குறையுமாக கடத்தும் திறன் கொண்ட பொருள். சரிபாதி கடத்துவது அல்ல. அரைமின் கடத்தி என்பது அவ்வளவாக நல்ல சொல்லாட்சி அல்ல. நன்கடத்தி, வன்கடத்தி, குறைக்கடத்தி மற்றும் மீகடத்தி என்பன இது தொடர்பான சொற்கள். --C.R.Selvakumar 17:38, 4 ஜூன் 2006 (UTC)செல்வா

இக்கட்டுரை இருந்ததை மறந்தே விட்டேன். இக்கட்டுரை இருப்பதை விக்கி இணைப்பு தரும் பொழுது இப்பொழுதுதான் பார்த்தேன். இப்பொழுது குறைக்கடத்தி என்று ஒரு கட்டுரையை எழுதத் தொடங்கி விட்டேன். இக் கட்டுரையை நீக்கிவிடலாமா? வரலாறு காக்க வேண்டும் என்பதால், இணைப்பதே சிறந்தது. --செல்வா 20:20, 3 டிசம்பர் 2008 (UTC)

en:WP:CUTPASTE முறையில் செய்கிறேன். -- சுந்தர் \பேச்சு 04:20, 4 டிசம்பர் 2008 (UTC)

நன்றி[தொகு]

சுந்தர், இரண்டு பக்கங்களையும் இணைத்துத் தந்தமைக்கு நன்றி.--செல்வா 04:54, 4 டிசம்பர் 2008 (UTC)

கடத்துமை x கடத்துதிறன்[தொகு]

கடத்துமை என்பது பண்பு. இதனை conductivity என்பது பொருந்தும். கடத்துதிறன் என்பது கடத்தும் ஆற்றல்/திறன் என்பதாகும் (இதனைப் தன்னியல்பான பண்பு என்று கூறுவது சரியாக இராது). resitivity = தடைமை; conductivity = கடத்துமை. --செல்வா 01:41, 11 அக்டோபர் 2009 (UTC)Reply[பதில் அளி]

செல்வா,
  • Resistance = மின்தடை;
  • Conductance = மின் கடத்துத்திறன்;
  • Resistivity (or Specific Resistance) = மின்தடை எண் (அல்லது தன் மின்தடை எண்;
  • Conductivity (or Specific Conductance) = மின்கடத்து எண்;

என்று தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவன 12-ஆம் வகுப்பு இயற்பியல் நூலில் [1]கொடுக்கப்பட்டுள்ளதையே பயன்படுத்தியுள்ளேன். மேலும், எங்கள் பள்ளியில் தமிழ்-வழி மாணவர்களுக்கு இச்சொற்களைப் பயன்படுத்தியே கற்பிக்கின்றேன். நீங்கள் கூறியுள்ள சொற்கள் சரியாக இருக்கலாம். ஆனால், இப்பக்கத்தைப் பார்க்கும் தமிழ்-வழி மாணவர்கள் அடையக்கூடும் குழப்பம் தவிர்க்க, மேற்கூறிய சொற்களையே எழுதலாம் என்று நினைக்கிறேன்! அடைப்புக்குறிகளிட்டு நீங்கள் குறிப்பிட்டுள்ள சொற்களை எழுதி விடலாம் அல்லவா? --பரிதிமதி 07:00, 11 அக்டோபர் 2009 (UTC)Reply[பதில் அளி]

சிற்சில எழுத்துப்பிழைகள்[தொகு]

எழுத்துப்பிழைகளும் சொற்றொடரமைப்புபிழைகளும் நிறையவுள்ளன! நான் திருத்துகிறேன்! ஒப்புவீரென நம்புகிறேன்! அடியேன் திருத்தியதில் ஐயமிருப்பின் நீங்கள் உங்கள் மனமொப்புஞ்சொற்களையே போட்டுக்கொள்ளலாம்! --சூர்ய பிரகாசு.ச.அ. 06:20, 25 ஜூன் 2010 (UTC)

சுட்டு[தொகு]

  1. [பார்க்க பக்.58]

தலைப்பு[தொகு]

குறை கடத்தி என்றிருக்க வேண்டியதைக் குறைக்கடத்தி என்று கூறினால், குறையைக் கடத்துவது என்று பொருள் தருமே?--பாஹிம் (பேச்சு) 07:24, 22 செப்டெம்பர் 2012 (UTC)

குறை கடத்தி என இரு சொற்களாக அல்லாமல் ஒரு சொல்லாக இருப்பதே semiconductor இற்கு சிறப்பு. குறைகடத்தி எனலாம்.--Kanags \உரையாடுக 07:52, 22 செப்டெம்பர் 2012 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:குறைகடத்தி&oldid=2292268" இருந்து மீள்விக்கப்பட்டது