பேச்சு:காவாறனை
Hi, I am MakizNan (P.Gopal, UW Madison, USA) who has written many articles on Molecular Biology in 2009-2010. It is good to see a youngster writing articles on Molecular Biology, my appreciation and greetings you for the nice " kalai sorkal" on mRNA, tRNA, rRNA. I will try contribute and support your article. I impressed with " Muran Mukkuriyam" (anticodon) word. Hats off.
Thanks -- மகிழ்நன் (பேச்சு) 21:07, 13 ஏப்ரல் 2017 (UTC)
தலைப்பு?
[தொகு]பயனர்:5anan27! காவாறனை என்ற சொல் பயன்பாட்டில் உள்ளதா? அப்படியாயின் எங்கே உள்ளது? ஏதாவது பாடநூல்களிலா? அறிய ஆவல். காரணம் கேள்விப்படாத சொல்லாக உள்ளது. இதேபோல் தூதாறனை என்ற சொல்லும் கேள்விப்படாத சொல்லாகவே உள்ளது. இவை பற்றி அறிய ஆவல். ரைபோ கருவமிலம் கட்டுரையில் கீழ்வருமாறு உள்ளது. //புரதப்பெயர்ப்பிலுள்ள ஆர்.என்.ஏக்கள் (RNA in translation): செய்தி பரிமாற்ற ஆர்.என்.ஏ (messenger RNA -mRNA), இடமாற்று ஆர்.என்.ஏ (transfer RNA-tRNA), ரைபோசோமல் ஆர்.என்.ஏ (ribosomal RNA -rRNA)//. இவற்றையே பயன்படுத்தலாமா?...கலை
- பயனர்:Kalaiarasy, இல்லை. அத்தகைய ஒரு சொல் இக்கட்டுரைக்கு முன் பயன்பாட்டில் இருக்கவில்லை. ஆர்.என்.ஏ, டி.என்.ஏ என்பன மூலக்கூற்று உயிரியலில் மிகப் பரவலாகப் பயன்படும் சொற்கள். அத்துறை சார்ந்த ஆயிரக்கணக்கான கட்டுரைகளில் எப்போதும் ஆர்.என்.ஏ, டி.என்.ஏ என்று அப்படியே ஆங்கிலத்தை ஒலிபெயர்த்து எழுதிக்கொண்டிருக்கமுடியாது என்பதால் அவற்றுக்குத் தகுந்த மாற்றுச்சொற்களைத் தேடினேன். அப்போது கிடைத்த சொற்கள் தான் முறையே ஆறனை, தாயனை என்பன. ஆறனை சார்ந்த மூன்று வகைப்பாடுகளும் தூது-ஆறனை (mRNA), காவு-ஆறனை (tRNA), இறை-ஆறனை (rRNA) என்றவாறு மொழிபெயர்க்கப்பட்டு பயன்பட்டன.
ஆனால், மூலக்கூற்று உயிரியலில் (அல்லது அறிவியலில்?) messenger - transfer - ribosomal ஆகிய மூன்று சொற்கள் வரும் எல்லா இடங்களிலுமே ரைபோ கருவமிலம் கட்டுரையில் வரும் சொற்களைப் பிரதியிடமுடியாதல்லவா? தூது -காவு - இறை ஆகிய சொற்களை முறையே தமியேன் பரிந்துரைத்த காரணம் அதனால் தான். காவாறனை முதலான புதிய கலைச்சொற்கள் குழப்பத்தை ஏற்படுத்தினால் மேற்கூறிய சொற்களை அடைப்புக்குள் இணைத்துவிடலாம் என்றே கூறவிரும்புவேன்.
தமிழ் விக்கியில் போதாமை உள்ளபோதும், அறிவியல் கட்டுரைகளை ஆங்கில விக்கியிலிருந்து மொழிபெயர்ப்பதில் உள்ள முக்கிய இடர்கள்:
- கலைச்சொல் பற்றாக்குறை.
- தமிழக, இலங்கை பாடத்திட்டங்களில் பயன்படும் மாறுபட்ட கலைச்சொற்கள். (எ.கா: Chloroplast - பசுங்கனிகம்/பச்சையவுருமணி)
- சமயங்களில் பொருத்தமற்ற கலைச்சொற்கள். (எ.கா: DNA என்பது டி.என்.ஏ என்றும் அனடி என்றும் மொழியாக்கப்பட்டது).
- பதிலீடாக புதிய கலைச்சொல்லொன்றை முன்மொழியும் போது, அது ஏனைய கலைச்சொல்லாளர்களிடையே கருத்து முரண்பாட்டையும், பயனர்களிடையே குழப்பத்தையும் ஏற்படுத்தல்.
இவற்றால், அக்கட்டுரையை தமிழில் மொழிபெயர்த்த முழுமுயற்சியுமே பயனின்றி வீணாகப் போகின்றது. யாருக்கும் பாதிப்பிருக்கக் கூடாதென்று, ஆற அமர இணையத்தில் உசாவி, எல்லாக் கலைச்சொற்களையும் தவறாமல் குறிப்பிட்டு சரியான விக்கிக் கட்டுரையை உருவாக்கி முடிக்கும்போது, பெருமளவு நேரம் செலவழிந்து போய்விடுகிறது. இக்காரணங்களாலேயே ஓரிரு கட்டுரைகளுக்கு மேல், தமியேனால் அறிவியல் கட்டுரைகளை (குறிப்பாக என் துறை சார்ந்த மூலக்கூற்று உயிரியல் கட்டுரைகளை) உருவாக்கமுடியவில்லை. என் இயலாமைக்கு வருந்துகிறேன். --5anan27 (பேச்சு) 17:17, 11 ஏப்ரல் 2017 (UTC)
- வணக்கம் அஞ்சனன்! தயவுசெய்து கேள்விகள் கேட்கப்படுவதைத் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம். அனைவரும் இணைந்து, தொடர்ந்து தமிழ்விக்கிக்குப் பங்களிப்பதையே விரும்புகிறேன். கலைசொல்லாக்கத்தில் பல குழப்பங்கள் வருவது வழமைதான். ஆனால் அவற்றை உரையாடல்கள் மூலமே சரிசெய்து கொள்ளலாம். பெருமளவு நேரம் இதில் செலவாகின்றது என்பது உண்மைதான். சிலசமயம் எனக்கும் அப்படி ஒரு இயலாமை ஏற்படுவதுண்டு. ஆனாலும், அவற்றை மீறி, தமிழ்விக்கியை வளர்த்தெடுப்பதில் அனைவரும் ஒத்துழைப்போம்.
- முன்பு ஒரு தடவை டி.என்.ஏ க்குப் பொருத்தமான தலைப்புப்பற்றி ஒரு இடத்தில் உரையாடினோம். இப்போது அந்த இணைப்பைத் தேடிக் கண்டுபிடிக்க முயன்றேன். ஆனால் முடியவில்லை. அப்போது உரையாடியதன்படி, அதற்குச் சரியான முடிவை எட்ட முடியாமல் இருந்தமையால், அதனை இப்போதைக்கு அப்படியே வைத்திருப்போம் என முடிவெடுத்திருந்ததாய் நினைவு.
- திடீரென்று, தாயனை, ஆறனை காவாறனை என்று வாசித்தபோது, உண்மையில் எனக்கு எதுவுமே புரியவில்லை. பின்னர் இணைப்புகளூடாகச் சென்றபோதுதான் என்ன என்று புரிந்துகொண்டேன். புதிய சொல்லாக்கங்கள் செய்யப்படுவது தவறில்லை, இங்கே விக்கியிலும், அப்படி எத்தனையோ அறிவியல் கலைச் சொற்கள் ஆக்கப்பட்டிருக்கின்றன. எனவே அதனைத் தவறாகக் கொள்ள வேண்டாம். நான் அவற்றைப் புரிந்துகொள்ளவே முயற்சிக்கிறேன். முக்கியமான கலைச்சொல்லாக்கங்களில் ஏனையோரையும் கலந்தாலோசித்துச் செய்வது நல்லது. அவ்வாறில்லாவிடினும், அவைபற்றிய உரையாடல் ஆரம்பிக்கும்போது, அதனை பிரச்சனையாக எடுக்காமல், விளக்கங்களுடன் உரையாடி முடிவெடுப்பது நல்லது. அந்தச் சொல்லைப் பயன்படுத்தும்போது, அதன் அர்த்தம் புரிந்துகொள்ளப்பட்டால் சிறப்பு.
- நீங்கள் இங்கேயும் கலைச்சொல்லாக்கங்கள் பற்றி கலந்துரையாடலாம்.
- //ஆனால், மூலக்கூற்று உயிரியலில் (அல்லது அறிவியலில்?) messenger - transfer - ribosomal ஆகிய மூன்று சொற்கள் வரும் எல்லா இடங்களிலுமே ரைபோ கருவமிலம் கட்டுரையில் வரும் சொற்களைப் பிரதியிடமுடியாதல்லவா?// இது புரியவில்லையே. ஒரு குறிப்பிட்ட சொல்லை பிரதியீடு செய்யலாம்தானே? மேலும் ரைபோ கருவமிலம் கட்டுரையில் உள்ள rRNA (Ribosomal RNA) க்கு இணையான இரைபோசோ'மல்' ஆர்.என்.ஏ என்பதும் பொருத்தமாகப்படவில்லை. அதனையும் மாற்றத்தான் வேண்டும்.
- தமிழக, இலங்கை பாடத்திட்டங்களில் மாறுபட்ட கலைச்சொற்கள் பயன்படும்போது, அவைபற்றி உரையாடி, எது மிகப்பொருத்தமான சொல்லாக இருக்கிறதோ, அது தலைப்பாகக் கொள்ளப்பட்டிருக்கிறது. சிலசமயம் இரண்டும் தவிர்த்து, புதிய சொல்லும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. எ.கா. உயிரணு, இலங்கை வழக்கு கலம், தமிழக வழக்கு செல். ஆனால் அவ்வாறான இடங்களில் அடைப்புக் குறிக்குள் அனைத்தும் கொடுக்கப்படுவதுடன் வழிமாற்றுக்களும் ஏற்படுத்தப்படுகின்றன.
- டி.என்.ஏ என்பது கலைசொல்லாக்கத்தால் வந்ததல்ல. கலைச்சொல்லாக்கத்தில் தெளிவற்று இருந்தமையால், தற்போதைக்கு ஆங்கிலச் சொல்லையே ஒலிப்பெயர்ப்புச் செய்து கையாளலாம் என்று முடிவெடுக்கப்பட்டிருந்தது. (எனக்கு அப்படித்தான் நினைவுள்ளது.)
- //பதிலீடாக புதிய கலைச்சொல்லொன்றை முன்மொழியும் போது, அது ஏனைய கலைச்சொல்லாளர்களிடையே கருத்து முரண்பாட்டையும், பயனர்களிடையே குழப்பத்தையும் ஏற்படுத்தல்.// இதனைத் தயவுசெய்து தவறாகக் கொள்ள வேண்டாம். கருத்து முரண்பாடுகள், உரையாடல்கள், சரியான முடிவுகளை எட்ட உதவும். எனவே அதனை நேர்மறையாக எடுங்கள்.
- //ஆற அமர இணையத்தில் உசாவி, எல்லாக் கலைச்சொற்களையும் தவறாமல் குறிப்பிட்டு சரியான விக்கிக் கட்டுரையை உருவாக்கி முடிக்கும்போது, பெருமளவு நேரம் செலவழிந்து போய்விடுகிறது.// இதனைத் தவிர்க்க ஆரம்பத்தில் கட்டுரையாக்கத்திற்கு முன்னரே ஏனையோருடன் உரையாடி ஒரு முடிவை எட்டி சரியான தலைப்பைத் தெரிவு செய்யலாம். நான் எழுதிய பல கட்டுரைகள் பல உரையாடல்களின் பின்னர் தலைப்பு மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. இதற்கு அயர்ச்சியடையாமல் இருத்தல் உதவும் என நினைக்கிறேன்.
- இதனால், தவறாகப் புரிந்து கொள்ளாமல், தொடர்ந்து உங்கள் கட்டுரைகளை எழுதுங்கள். கலைச்சொல்லாக்கத்தில் உதவ வேறு சிலரையும், இங்கே இணைக்கிறேன். @செல்வா:, @Info-farmer:, @Rsmn:, @Nan:, @Mayooranathan:, @Drsrisenthil:, @5anan27:, @Sundar:
- நன்றி.--கலை (பேச்சு) 12:40, 12 ஏப்ரல் 2017 (UTC)
- கருத்துக்கு நன்றி கலை அவர்களே, தாங்கள் கேள்விகேட்பதை நான் குற்றச்சாட்டாகக் கருதுவதாகவோ, பிரச்சனையாக எடுப்பதாகவோ கருதவேண்டாம். உரையாடல்கள் மீது ஆர்வம் கொண்டவன் நான். இந்தக் கலைச்சொற்களை உருவாக்கும்போதே இவ்வினாவை எதிர்பார்த்தேன். இப்போது தாங்கள் கேட்டதும் சிக்கலை சுருக்கமாக விளக்கமுயன்றேன். அவ்வளவு தான்.
தாங்கள் சொல்கின்ற அனைத்தையும் ஏற்றுக்கொள்கின்றேன். ஆனால்,
- தமிழ்க் கலைச்சொல்லாக்கத்தில் abbreviation, acronym, initialism முதலியவை கடினமானவை. ஐநா, உத்தமம் போல அரிதாக, அல்லது மிகக்கடினத்தின் மத்தியில் தான் அது சாத்தியமாகும். அதற்காக, அதேவழியிலேயே கலைச்சொல்லாக்காமல், இயல்பான முறையிலேயே மொழியாக்கலாமா என்ற முயற்சியில் பிறந்தவை தான் ஆறனை, தாயனை, காவாறனை, தூதாறனை, தூதாறன்பு முதலியவை. அது சரியா என்றும் தெரியவில்லை. ஏனெனில் இது மொழியியல் சார்ந்தது என்பதை விட, அதிகமாக அறிவியல் சார்ந்தது. நீண்ட சொற்றொடர்களை அல்லது விளக்கங்களை கலைச்சொற்களாகப் பயன்படுத்துவதில் உள்ள சிக்கலை அறிவியல் உலகமும் ஏற்றுக்கொள்கின்றது. abbreviation, acronym, initialism எல்லாமே இன்று அறிவியலில் தான் அதிகம் பயன்படுகின்றன.
- முக்கியமான அல்லது அவசரமான சந்தர்ப்பங்களில், கலைச்சொல் பரிந்துரைக்காக காத்திருப்பது எத்தகைய பொறுமையிழப்பை ஏற்படுத்தும் என்பதை தாங்கள் நன்கு அறிவீர்கள். கலைச்சொல் ஒத்தாசைப் பக்கத்தையே எடுத்துக்கொள்ளுங்கள். போன ஆண்டு கேட்கப்பட்ட இந்த மூன்று கேள்விகளுக்கும் பதிலே வழங்கப்படவில்லை. (நான் விக்கிப்பீடியர்களை குற்றம் சாட்டவில்லை. சிலமாதங்களாக இடைவிடாமல் பங்களித்து வரும் நான், அதிலுள்ள சிக்கல்களையும் வேலைப்பளுவையும் தெளிவாகவே உணர்கிறேன்.)
- அறிவியற்கட்டுரைகள் எந்தளவுக்கு பயனர்களைச் சென்றுசேர்கிறது என்ற கேள்வி எனக்கும் உண்டு. நான் தொகுத்த அறிவியல் விக்கிக்கட்டுரைகளில் சிறந்ததாகக் கருதுவது, மொழிபெயர்ப்பு (உயிரியல்) கட்டுரையை. ஆனால் என் துறை நண்பன் ஒருவனிடம் அதைப் படிக்கக்கொடுத்ததும், "இதற்கு பேசாமல் ஆங்கிலத்திலேயே படித்துவிட்டுப்போகலாம்" என்று சொல்லிவிட்டான். உடைந்துவிட்டேன். ஒன்றரை நாட்கள் ஆங்கில விக்கியையும் என் பாடக்குறிப்புகளையும் உசாவி தொகுத்த கட்டுரை அது. (குறிப்பு: அவன் தமிழ்வழிக்கல்வியை ஆதரிப்பவன். )
- கலைச்சொல்லுருவாக்கத்தில் பெரும்பாலும் தீர்வை எட்டமுடியாது என்பதும் உண்மை. அது கலைச்சொல்லை உருவாக்கும் அந்த ஒருவரின் தனிப்பிரச்சனை அல்ல; அது முழு உலகத்தமிழர்களினதும் பிரச்சனை என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். மற்றும்படி, ஆர்.என்.ஏ, டி.என்.ஏ கலைச்சொல் விடயத்தில் தங்களினதும் மற்றும் மதிப்பிற்குரிய @செல்வா:, @Info-farmer:, @Rsmn:, @Nan: ஆகியோரினதும் எந்தவொரு முடிவுக்கும் கட்டுப்படுகிறேன். --5anan27 (பேச்சு)
- நேரக்குறைபாடு என்பது அனைவருக்கும் வருவதுதான். இந்தக் கிழமை வேலையிலிருந்து விடுப்பு எடுத்திருப்பதால்தான் என்னால் விக்கியில் ஓரளவுக்காவது பங்களிக்க முடிகிறது. இது தொடர்ந்து முடியாமல் போகலாம். மேலும் மற்றவர்கள் முடிவுக்குக் கட்டுப்படுவது என்பதைவிட, உங்களது கருத்துக்களை, விளக்கங்களையும் தாராளமாகப் பகிர்ந்துகொண்டு முடிவை நோக்கி நகரலாம் . தங்களது விளக்கத்தின் பின்னர், என்னிடமிருந்து ஏதாவது சந்தேகங்கள், கேள்விகள் வரும்போது தப்பாகப் புரிந்துகொள்ள மாட்டீர்கள் என்ற நம்பிக்கை வந்ததால் மகிழ்ச்சியாக உள்ளது. காரணம் எனது துறையும் மூலக்கூற்று உயிரியல் என்பதால் அடிக்கடி தங்கள் கட்டுரைகள் பக்கம் நானும் தடக்கி விழுவேன் .
- புதிய கலைச்சொற்களால் கட்டுரையை நீங்கள் திருத்திய பின்னரும், உங்கள் துறை நண்பரிடம் படிக்கக் கொடுத்துப் பார்த்தீர்களா? புதிய சொற்கள் தொடர்பில் அவரது கருத்து என்ன? இதை ஏன் கேட்கிறேன் என்றால், வெளியில் இருந்து இதனைப் படிப்பவர்கள் எப்படிப் புரிந்துகொள்கிறார்கள் என்பதும் முக்கியம் என்பதால்தான்.
- இந்த smiley வார்ப்புரு இருப்பது இத்தனைநாள் நான் அறியாதிருந்தேன். தற்போது அதனைக் கண்டறிந்ததில் மகிழ்ச்சி . நன்றி. --கலை (பேச்சு) 08:30, 13 ஏப்ரல் 2017 (UTC)
- நேரக்குறைபாடு என்பது அனைவருக்கும் வருவதுதான். இந்தக் கிழமை வேலையிலிருந்து விடுப்பு எடுத்திருப்பதால்தான் என்னால் விக்கியில் ஓரளவுக்காவது பங்களிக்க முடிகிறது. இது தொடர்ந்து முடியாமல் போகலாம். மேலும் மற்றவர்கள் முடிவுக்குக் கட்டுப்படுவது என்பதைவிட, உங்களது கருத்துக்களை, விளக்கங்களையும் தாராளமாகப் பகிர்ந்துகொண்டு முடிவை நோக்கி நகரலாம் . தங்களது விளக்கத்தின் பின்னர், என்னிடமிருந்து ஏதாவது சந்தேகங்கள், கேள்விகள் வரும்போது தப்பாகப் புரிந்துகொள்ள மாட்டீர்கள் என்ற நம்பிக்கை வந்ததால் மகிழ்ச்சியாக உள்ளது. காரணம் எனது துறையும் மூலக்கூற்று உயிரியல் என்பதால் அடிக்கடி தங்கள் கட்டுரைகள் பக்கம் நானும் தடக்கி விழுவேன் .
- ஆகா, தாங்களும் மூலக்கூற்று உயிரியலாளரா? மிக்க மகிழ்ச்சி. என் தனிக்கருத்தைவிட, விக்கியில் நீண்டநாளாகப் பங்களிக்கும் தங்கள் அனைவரினதும் கருத்துக்கள் மூலம் ஒரு பொதுப்படையான முடிவைக் கண்டால் நல்லதென்று கருதினேன். புதிய சொல்லை விட, எந்தவிதத்தில் - எப்படி, அச்சொல் உருவாக்கப்பட்டது என்பதையே நண்பனுக்கு விளக்கவேண்டியிருந்தது. விளக்கினேன். ஓரளவு அதை ஏற்றுக்கொண்டான். சிரிப்பியை விக்கியில் புத்தாண்டன்று கண்டறிந்திருக்கிறீர்கள். பிறக்கின்ற புத்தாண்டு சிறப்பை நல்க முற்கூட்டிய வாழ்த்துக்கள். --5anan27 (பேச்சு) 15:07, 13 ஏப்ரல் 2017 (UTC)
முரண் முக்குறியம் - எதிர் முக்குறியம்
[தொகு]- புரிந்துகொண்டமைக்கு நன்றி அஞ்சனன். உங்களுக்கும் எனது சித்திரை நாள் வாழ்த்துக்கள்.
- இன்னுமொரு கேள்வி anti codon என்பதற்கு முரண் முக்குறியம் என்பதிலும் பார்க்க எதிர் முக்குறியம் என்பது பொருத்தமாக இருக்குமா என எண்ணிப் பாருங்கள். காரணம் முரண் என்னும்போது, ஒரு ஒவ்வாத்தன்மை (contradiction) இருப்பது போன்ற தோற்றம் வருகிறது. இங்கு codon, anti codon ஒன்றுடன் ஒன்று இணைந்துகொள்ள உதவுவதால், (எதிர் ஏற்றங்கள் ஒன்றையொன்று கவர்வதுபோல்), அவற்றை எதிர் முக்குறியம் என அழைத்தல் சிறப்போ என எண்ணுகிறேன். நீங்களும் யோசித்துப் பாருங்கள். இதேபோல் முன்னர் நான் allele என்பதற்கு நான் அறிந்தபடி எதிருரு என்ற தலைப்பில் கட்டுரையை ஆக்கியிருந்தேன். ஆனால் உண்மையில் allele எனப்படுபவை ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல, alternate forms, என்பதால் அவை மாற்றுரு என வரவேண்டும் என விளக்கம் தரப்பட்டது. அது சரியெனத் தோன்றியதால், கட்டுரையின் தலைப்பை மாற்றினோம். anti codon என்பதற்கு முரண், எதிர் ஆகிய இரண்டும் தவிர்ந்த வேறு ஏதாவது பொருத்தமான தமிழ்ச் சொல் இருந்தாலும் சொல்லுங்கள். நன்றி.--கலை (பேச்சு) 20:36, 13 ஏப்ரல் 2017 (UTC)
முரண் என்றால் வேறுபாடு என்பதை குறிக்கும் . எதிர்-முக்குறியம் என்ற சொல் மிக பொருத்தமாக இருக்கும் என எண்ணுகிறேன் .-- மகிழ்நன் (பேச்சு) 21:36, 13 ஏப்ரல் 2017 (UTC)
இக்கட்டுரை எழுதிய நண்பருக்கு வாழ்த்துக்கள் . மூலக்கூறு உயிரியலில் ஆய்வில் ஈடுபடும் எனக்கு, இதை இலக்கிய தமிழில் படிப்பதை போன்ற தன்மையெய் ஏற்படுத்துகின்றது . ரிபோசோமில் பி புறம் என சொல்வதற்கு முன்னால் , ரிபோசோம் (சிறிய , பெரிய மற்றும் அவை சேர்த்து 80S யாக மாறுவதை விவரித்து, அதனுள் மூன்று அமரும் இடங்கள்( binding site) என்பதை சொல்லாம் . உறுதியாக நான் ஓய்வாக இருக்கும் நாளில் உங்களுக்கு கட்டுரையெய் செம்மையாக உதவிடுவேன் . இதை நண்பராக சொல்கிறேன் என எடுத்துக்கொள்ளவும். உங்களின் பணி சிறக்க எனது வாழ்த்துக்கள்.
நான் circular RNA வில் ஆய்வில் ஈடுபடுகிறேன் . circular RNA க்கான நல்ல கலைச்சொற்களை நண்பர்கள் பகிரவும். ஓய்வு நேரத்தில் அக்கட்டுரையெய் எழுதலாம் என நினைக்கிறேன் .
நன்றி
-- மகிழ்நன் (பேச்சு) 21:59, 13 ஏப்ரல் 2017 (UTC)
- தங்கள் கருத்துக்கு நன்றி மகிழ்நன்! circular RNA ஐ வட்டமான என்று சொன்னால் அது Round என்று வந்துவிடக்கூடும். சுற்று என்று சொன்னால் சரியாக இருக்குமா? அதுவும் மிகப் பொருத்தமான பொருளைத் தருவதாகத் தோன்றவில்லை .--கலை (பேச்சு) 12:16, 14 ஏப்ரல் 2017 (UTC)
- வட்டணை:
vaṭṭaṇai s. a cymbal, தாளம்; 2. a circle, வட்டம். வட்டணையுறுத்தல், beating cymbals, தாளம்போடல்.
வட்டணை ஆர்.என்.ஏ எனலாம்.--☤சி.செந்தி☤ (உரையாடுக) 15:13, 14 ஏப்ரல் 2017 (UTC)
sRNA எனறால் சிறு ஆர் .என்.எ என்றுதான் பொருள் . கரையான் (soluble ) ஆர்.என்.எ என நான் படித்தில்லை.
-- மகிழ்நன் (பேச்சு) 16:33, 14 ஏப்ரல் 2017 (UTC)
- வாழ்த்துக்கு நன்றிகள் மகிழ்நன். எதிர் முக்குறியம் சரியே. circularஇற்கான வட்டணை என்ற பரிந்துரையை நானும் வழிமொழிகிறேன். கரையாறனை என்பது காவாறனைக்கு வழங்கப்பட்ட பழைய பெயர். டிக்ஷனரி.காமில் வரையறை மற்றும் ஆன்சர்.காமில் விளக்கம். --5anan27 (பேச்சு) 17:09, 14 ஏப்ரல் 2017 (UTC)
தாயனை - ஆறனை விளக்கம்
[தொகு]குறுக்கம் (Abbreviation) , அஃகுப்பெயர் (Acronym), முன்னெழுத்தியம் (Initialism) இவை தமிழில் கொஞ்சம் கடினம். அதற்காக,மூலக்கூற்று உயிரியலில் பயன்படும் FISH, RFLP, STR இதுபோன்ற சொற்குறுக்கங்களை எல்லாம் தமிழுக்கு ஏற்றவிதத்தில் மொழியாக்கியே ஆகவேண்டும் என்று நான் ஒற்றைக்காலில் நிற்கமாட்டேன். ஆனால், DNA, RNA, PCR, ATP இவை மூலக்கூற்று உயிரியலில் தவிர்க்கமுடியாதவை. இப்பதங்கள் இல்லாமல் உயிரியல் துறை பற்றிய மேலோட்டமான விளக்கம் கூட வழங்கமுடியாது என்பதை நீங்கள் எல்லோரும் அறிவீர்கள். தவிர, டி.என்.ஏ, ஆர்.என்.ஏ இரண்டும் விஞ்ஞானப்பதங்கள் என்பதை விட, இன்று அன்றாட வாழ்க்கையிலும் அதிகம் புழங்கும் சொற்களாக மாறிவருகின்றன. இறுதிவரை தமிழுலகம் அவற்றை அப்படியே தான் சொல்லிக்கொண்டிருக்கவேண்டுமா? இக்காரணங்களாலேயே அம்மூலக்கூறுகளுக்கு ஒலிப்பு ஒத்துப்போகுமாறு – ஆனால் (என்னளவில்) பொருத்தமான பெயர்களைச் சூட்டினேன்.
- தாயனை
தாய்+அன்ன மூலக்கூறு. தாய் போன்றது. பெரும்பாலான உயிரிகளில் அதன் முழு மரபுச்செய்தியையும் பிறப்பு - வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் முன்னோடியான மூலக்கூறு. டீயென்னே என்பதற்கும் தாயனை என்பதற்குமான ஒலிப்பொற்றுமை இன்னொரு காரணம்.
- ஆறனை
தாயனையிலும் பழைய மரபுச்செய்திக் களஞ்சியம் என்றாலும், RNAஇன் பிரதான தொழில், மரபுச்செய்தியை தாயனையிலிருந்து கடத்தி புரதத்தொகுப்பில் ஈடுபடுவது தான். தாயனையின் செய்திகளுக்கான பாதையாக இருப்பதால் (ஆறு – பாதை, ஒழுக்கு, வழி) ஆறு+அன்ன மூலக்கூறு. ஆரென்னே – ஒலிப்பொற்றுமை.
வேறு வழிகளில் DNA, RNA ஐ மொழியாக்கலாம் என்றாலோ, அல்லது இக்கலைச்சொற்கள் பலவிதங்களில் அவற்றின் உண்மையான தொழிற்பாட்டுடன் முரண்படுகின்றன என்றாலோ சுட்டிக்காட்டுங்கள். இக்கலைச்சொற்களைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்.
இறுதியாக, ஒரு வினா. குறுக்கம், அஃகுப்பெயர், முன்னெழுத்தியம் இவை மூன்றையும் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழியாக்கும் போது, கடைப்பிடிக்கப்படவேண்டிய விதிகள் என்று ஏதும் உள்ளதா? அல்லது அவை மூன்றையும் தமிழிலேயே கட்டாயம் அப்படித்தான் மொழியாக்கவேண்டும் என்ற வரையறை எங்கேனும் சொல்லப்பட்டிருக்கிறதா? அப்படி ஏதேனும் அமைப்புகள் குறிப்பிட்டிருந்தால், அவ்வமைப்புக்கு உலகத்தமிழர் கலைச்சொல்லாக்கத்தில் உள்ள வகிபாகம் யாது? ஏதும் அறிந்திருந்தால் தயைகூர்ந்து தெரிவியுங்கள். --5anan27 (பேச்சு) 17:09, 14 ஏப்ரல் 2017 (UTC)
கலையின் கருத்து
[தொகு]- தாயனை, ஆறனை, காவாறனை, தூதாறனை போன்ற சொற்களைக் கட்டுரையின் உள்ளே கொடுக்கலாம். அதேவேளை தலைப்பை மாற்றலாம் என்றே கருதுகிறேன்.
- தாயனை என்பதற்கான விளக்கம் தாய் போன்றது என்பதிலிருந்தும், டீயென்னே என்பதற்கான ஒலிப்பொற்றுமை என்றும் கூறியிருக்கிறீர்கள். என்னைப் பொறுத்த அளவில், கலைச்சொல்லாக்கத்தில் குறிப்பிட்ட சொல்லிற்குரிய பொருளை விளக்கும் சொல்லாக புதிய சொல் இருத்தல் சிறப்பு. தாயனை என்னும்போது Deoxy ribonucleic acid என்பதன் பொருள் வரவில்லை. அத்துடன் ஒலிப்பு ஒற்றுமை என்றால் தாயன்னே, அல்லது தாயென்னே என்று வந்திருக்க வேண்டும். ஆனால் தாயனை என்னும்போது பொருளோ, ஒலிப்பு ஒற்றுமையோ இல்லாததுபோலவே தோன்றுகிறது. தாய் போன்ற என்ற பொருள் வரும்படியாக கலைச்சொல்லை ஆக்குவதென்றால், தாய்க் கருவமிலம் (சுருக்கமாக தா.க.அ.) என்று அழைத்தால் பொருந்துவதாய்த் தோன்றுகிறது. அல்லாவிடில் ஒக்சியற்றப்பட்ட இரைபோ கருவமிலம் (சுருக்கமாக ஒ.க.அ.)
- அதேபோல் ஆறனை என்பதற்கு, சரியான ஒலிப்பு ஒற்றுமையும் கிடைக்கவில்லை. ஆறுபோன்றது என்பதுவும், சரியான பொருளைக் கொண்டு வரவில்லை. ஆனால், ஆர்.என்.ஏ கட்டுரை, உரையாடலின்பின்னர், ரைபோ கருவமிலம் கட்டுரைக்கு வழிமாற்றுச் செய்யப்பட்டுள்ளது. ஆர்.என்.ஏ என்று தேடுபவர்களுக்கு கிடைக்கும்படியாக வழிமாற்று விட்டுச் செல்லப்பட்டுள்ளது. எனவே ரைபோ கருவமிலம் என்பதனையே முதன்மைச் சொல்லாகக் கொண்டால் என்ன? அதனையும் இரைபோ கருவமிலம் (சுருக்கமாக இ.க.அ.) என மாற்றக் கோரியுள்ளேன். பார்க்க பேச்சு:இரைபோ கருவமிலம்.
- mRNA, tRNA, rRNA என்பவற்றை முறையே தூது இரைபோ கருவமிலம் (சுருக்கமாக தூ.இ.க.அ.), காவு இரைபோ கருவமிலம் (சுருக்கமாக கா.இ.க.அ.), இரைபோசோமல் கருவமிலம் (சுருக்கமாக இ.இ.க.அ.) என்று அழைத்தால் என்ன?
- ஒரு சொல்லுக்குப் பல பொருள் இருக்கும் நேரங்களில்,, சில சமயம் கலைச்சொல்லாக்கத்தில், தவறான பொருள் கொண்டும் கலைச்சொற்கள் ஆக்கப்பட்டு, அவை இங்கே உரையாடப்பட்டும் இருக்கின்றன. கட்டுரையின் உள்ளே புதிய கலைச்சொற்கள் மாற்றுச்சொற்கள் பயன்படுத்தப்படும்போது, ஓரளவு வேறுபாடு இருப்பினும் பரவாயில்லை. ஆனால் தலைப்பில் இருக்கும்போது, அவை இலகுவில் புரிந்துகொள்ளக்கூடிய பொருள் கொண்டவையாக இருத்தல் நல்லது என்பது எனது கருத்து.
- பேச்சு:தூதாறனையில், "தேடுபொறியில் ஏற்கனவே பரிச்சயமான சொல்லைத்தான் ஒருவர் தேடுவார். அச்சொல்லே அவரை விக்கிபீடியாவுக்கு அழைத்து வருகின்றது. விக்கியின் இணையத்தளப் பக்கத்தில் "H1" தலைப்பு உள்ள சொல்லே தேடலுக்கு முக்கியத்துவம் பெற்றது. அந்த நிலையில் ஏற்கனவே தெரிந்த ஒரு சொல்லுக்கு கட்டுரையின் தலைப்பு அப்பெயர் கொண்டே அமைவது அவசியமானது." என்று செந்தி கூறியிருப்பதையும் கவனத்தில் கொள்ளலாம்.
- --கலை (பேச்சு) 12:40, 15 ஏப்ரல் 2017 (UTC)
அஞ்சனன் கருத்து
[தொகு]- இரைபோக் கருவமிலம் என்பதனையே முதன்மைச் சொல்லாகக் கொண்டால் என்ன?
இரைபோக் கருவமிலம் என்பதே சிக்கல் தான்.
- 'இரைபோ' தமிழ் அல்ல.
- அமிலத்தை அமிலம் என்பதா காடி என்பதா என்ற சிக்கல்.
- கருவமிலங்கள் கருவில் மட்டும் இல்லை; கருவுக்கு வெளியேயும் (Extrachromosomal) அவ்வளவு ஏன், கருவே இல்லாத நிலைக்கருவிலிகளிலும் உண்டு.
Nucleic acid என்று தவறாகப் பெயர் வைத்திருக்கிறாய் என்று வெள்ளையனுடன் சண்டைக்குப்போக அழைக்கவில்லை. அவன் அதைக் கண்டுபிடித்தபோது அது கருவில் மட்டுமே இருப்பதாக நினைத்தான். ஆனால், எத்தனையோ ஆண்டுகளுக்குப் பின் 2017ஆமாண்டு தமிழில் அதற்குக் கலைச்சொல் தேடும்போது, அதே தவறான பொருள் தரும் - அதே விளக்கம் தரும் சொல்லே முதன்மைச்சொல்லாக வேண்டும் என்று ஏன் பிடித்தபிடியாக நிற்கவேண்டும் என்றே கேட்கிறேன்.
- தா.க.அ, ஒ.க.அ, தூ.இ.க.அ, இ.இ.க.அ என்றெல்லாம் கலைச்சொல்லாக்கலாம்.
குறுக்கம், அஃகுப்பெயர், முன்னெழுத்தியம் என்பவற்றின் கடினத்தன்மையைச் சொன்னபின்னும், தா.க.அ, ஒ.க.அ, என்று பட்டியலிடுகிறீர்கள். தமிழில் அவை (100 விழுக்காடு) சாத்தியமற்றவை. நினைவுகூரக் கடினமானவை. தமிழ்புழங்கும் நாவுக்கு இந்தச் சொற்குறுக்கங்கள் எத்தனை கடினமானவை? இந்தப் பட்டியலையும், தாயனை, ஆறனை, காவாறனை, இறையாறனை என்ற பட்டியலையும் ஒரு சாதாரண தமிழனிடம் கொடுத்து, பிடித்த ஒன்றை தெரிவுசெய்யச் சொன்னால் அவன் எதைத் தெரிவான்?
- பரிச்சயமான சொல்லே தேடப்படும்.
கலந்துரையாடாமல் தலைப்புக்கு பெயர்சூட்டிய தவற்றுக்கு முன்பே மன்னிப்புக் கோரிவிட்டேன். அடைப்புக்குள் ஆங்கிலத்தில் அல்லது ஒலிபெயர்ப்புத் தமிழில் குறித்த கலைச்சொற்களை இடுவதில் எனக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை.
- ஒலிப்பும் பொருளும் என் கலைச்சொற்களில் சரியாக வரவில்லை.
ஒலிப்பு ஒத்தால் தாயன்னே, தாயென்னே எனப்படவேண்டும் என்கிறீர்கள். Bank தமிழில் "வங்கி" ஆகும்போது, Tank தமிழில் "தாங்கி" ஆகும்போது, 'deeyennaeh' இற்கும் 'தாயனை'க்கும் ஒலிப்பொற்றுமை இல்லை என்கிறீர்கள். தாய்+அனை என்பதே தமிழில் பொருள் உள்ள சொல் - தாய் அன்னது. தாயைப்போன்றது. ஆனால், தாயன்னே, தாயென்னே இங்கெல்லாம் 'தாய்' உடன் புணரும் "அன்னே, என்னே" என்ற சொற்களின் பொருள் தான் என்ன?
வரலாறு, ஒழுகலாறு போன்ற சொற்களில் உள்ளவாறான பொருளிலேயே ஆறனையின் "ஆறு" சொல்லைக் கையாண்டிருக்கிறேன். கருவமிலம் என்ற தவறான கலைச்சொல் அ பரவலாகச் சென்றடைந்துவிட்டது. இப்போதைக்கு குழப்பம் தேவையில்லை. நியூக்ளிக் அஸிட் கருவமிலம் என்றே மொழியாக்கப்படட்டும். ஆனால், அது DNA, RNA என்பவற்றின் கலைச்சொல்லாக்கத்தில் தலையிடவேண்டாம்.
DNA, RNA இரண்டும் ஒலிப்பொத்துப் போகுமாறு, அவற்றின் ஏதாவது தொழிற்பாட்டுக்கு பொருந்தக்கூடிய விதத்தில் மொழிபெயர்த்தேன் என்பதை முன்பே கூறியிருக்கிறேன். மரபியல் செய்திகளின் தாய்; அந்தச் செய்திகளின் பாதை என்ற பொருளில் முறையே தாயனையும் ஆறனையும் பழுதற்றவை என்றே எனக்கு இப்போதும் தோன்றுகின்றது.
இப்போதும் குறித்த வாதங்களை தாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லையெனில், என்னைப் பொறுத்த அளவில், கலைச்சொல்லாக்கத்தில் குறிப்பிட்ட சொல்லிற்குரிய பொருளை விளக்கும் சொல்லாக புதிய சொல் இருத்தல் சிறப்பு. என்று சொல்லும் தாங்கள், அந்தக் கூற்றோடு பொருந்தும் வகையில் வேறு எப்படி DNA, RNA என்பவற்றை மொழியாக்கலாம் என சுட்டிக்காட்டுங்கள். நான் முயன்றுபார்க்கிறேன். --5anan27 (பேச்சு) 19:51, 15 ஏப்ரல் 2017 (UTC)
கலையின் பதில்
[தொகு]எனக்குத் தெரிந்தவற்றிற்கு மட்டும் பதில் தருகின்றேன். அதற்கு முதல் ஒன்று, தயவுசெய்து மன்னிப்பு என்ற பெரிய வார்த்தைகளெல்லாம் வேண்டாமே. அனைவரும் நண்பர்களாகவே உரையாடுவதால், அது அவசியமற்றது என நினைக்கிறேன். மேலும் நீங்கள் மிகவும் திறந்த மனதுடன் இங்கே உரையாடுவதே மகிழ்ச்சிதான். உரையாடலின் முடிவில் நல்ல விளைவு ஏற்படும்போது அனைவருக்கும் மகிழ்ச்சியே. இனி எனது பதில்களுக்கு வருகிறேன்.
- 'இரைபோ' தமிழ் அல்ல என்பதை அறிவேன். அதனால்தான் இரைபோசோம் என்று ஒலிப்பெயர்ப்பை வழங்குவதுபோல் இதனையும் சேர்த்திருந்தேன்.
- அமிலம், காடி இரண்டும் பயன்படுத்தலாம் என்று முன்பு ஒரு உரையாடலில் பேசிக் கொண்டதாய் நினைவு.
- 2017 ஆம் ஆண்டிலும் Nucleic acid என்ற பெயர் மாறாதிருக்கும்போது, அதன் போக்கிலேயே நாமும் பயன்படுத்தலாம் என்று நினைக்கிறேன்.
- சுருக்கப் பெயர்களைத் தலைப்பில் போடுவதில் எனக்கும் சம்மதமில்லை. முழுப் பெயரைப் போட்டுவிட்டு, சுருக்கங்களை உள்ளே கொடுக்கலாம். கொடுக்காமலும் விடலாம், சிறிய சொற்களாக வேண்டும் என்று கருதினாலும் என்றே அவற்றைக் கொடுத்தேன். பி.கு., எ.கா. என்பவற்றை ஏற்றுக்கொண்டதுபோல, DNA, RNA என்பவற்றை ஏற்றுக் கொண்டதுபோல், அவற்றையும் சிலசமயம் பின்னர் ஏற்றுக்கொள்ள முடியலாம்.
- தாயனை, ஆறனை, காவாறனை, இறையாறனை இந்தச் சொற்களை எத்தனை பேரால் புரிந்துகொள்ள முடியும் என்று தெரியவில்லை. ஒருவேளை எனக்குத்தான் புரியாமல் இருக்கின்றதோ, அதுவும் தெரியவில்லை. பாதை என்பதற்கு ஆறு என்ற ஒத்த சொல் இருப்பதே நீங்கள் சொல்லித்தான் எனக்குத் தெரியும் . அப்படியே முதலே தெரிந்திருந்தாலும், பாதை என்ற அர்த்தத்தில், ஆர்.என்.ஏ க்குரிய எந்த சிறப்பியல்புகளையும் உள்ளடக்காத சொல், குறிப்பிட்ட சொல்லுக்கான பொருளைத் தருவது கடினம் என்பதே எனது கருத்து. ஆறு போன்ற, அல்லது பாதை போன்ற என்ற பொருள் மிகவும் பொதுப்படையான ஒன்றாகவே தெரிகிறது. அதனால்தான் நான் விரும்புவது, மிகவும் எளிமையான, இலகுவில் எதைபற்றி இருக்கும் என்பதை அனேகமானவர்களால் புரிந்துகொள்ளக் கூடிய சொற்களைத் தேடுகிறேன். அப்படிக் கிடைக்காதவிடத்து, அல்லது கிடைக்கும்வரை, டி.என்.ஏ, இரைபோ கருவமிலம் போன்ற சொற்களைப் பயன்படுத்துகிறேன். ஆனால் நல்ல தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்த வேண்டுமே என்ற உங்கள் ஆதங்கமும் புரிகின்றது.
- //தாய்+அனை என்பதே தமிழில் பொருள் உள்ள சொல் - தாய் அன்னது. தாயைப்போன்றது.// இதனையும் நான் முதலில் புரிந்துகொள்ளவில்லை. நீங்கள் வெறும் ஒலிப்பெயர்ப்பாகவே கூறுகிறீர்கள் என்றுதான் நான் நினைத்தேன்.
- எப்படி இருந்தால் சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை என்றும், எப்படி இருந்தால் புரிந்துகொள்ள இலகுவாக இருக்கும் என்றும் சொல்லத் தெரிகிறதேயன்றி, சிலவற்றை எப்படி முழுமையாகத் தமிழ்ப்படுத்தலாம் என்று எனக்குத் தெரியாது. அவ்வளவுக்கு மொழி அறிவு என்னிடம் இல்லை. பொதுவாக நான் ஆக்கும் அறிவியல் கட்டுரைகளுக்கே யாரிடமாவது கேட்டுத்தான் கலைச் சொற்களைப் பெற்றுக் கொள்வேன். அதனால் நான் இந்த உரையாடலில் இருந்து ஒதுங்கி நின்று கவனிக்கிறேன். கோவித்துக்கொண்டெல்லாம் போகவில்லை. என்னால் இதற்குச் சரியான சொல்லைக் கண்டுபிடிக்க முடியாது. அதனால்தான் மொழியில் அறிவுள்ளவர்களிடம் இதற்கான முடிவை விட்டுவிடுகிறேன். நன்றி.
- நன்றி. --கலை (பேச்சு) 21:48, 15 ஏப்ரல் 2017 (UTC)
அஞ்சனன், மீண்டும்
[தொகு]நண்பர்களிடம் மன்னிப்பெல்லாம் கேட்கக்கூடாது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. கேட்கப்படாத - கொடுக்கப்படாத இடங்களில் மன்னிப்பு பொருளிழந்து போவதாகவே நான் கருதுகிறேன். அதனால் தான் அப்படி. ஆனால், தமிழ் விக்கிப்பீடியாவில் தனிச்சிறப்பு மிக்க அழகான அறிவியல் கட்டுரைகளை ஆக்கிக்கொண்டே தனக்கு மொழியறிவு இல்லை என்று சொல்பவர்களை நான் மன்னிப்பதாக இல்லை. இனி, எத்தனையோ ஆறுகள் (பாதைகள்) இருக்கும்போதும் குறிப்பாக RNAஐ ஆறனை என்று ஏன் அழைக்கமுடியும் என்பதற்கான விளக்கத்தை மேலே சொல்லியிருக்கிறேன். பார்க்கலாம். மற்றையோரின் கருத்தையும் பார்ப்போம். தொடர்ந்து உரையாடலாம். --5anan27 (பேச்சு) 17:14, 16 ஏப்ரல் 2017 (UTC)