உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:தூதாறனை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தூதாறனை என்னும் கட்டுரை உயிரியல் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

தலைப்பு?

[தொகு]

பார்க்க பேச்சு:காவாறனை. @செல்வா:, @Info-farmer:, @Rsmn:, @Nan:, @5anan27:, @Mayooranathan: @Drsrisenthil: --கலை (பேச்சு) 12:49, 12 ஏப்ரல் 2017 (UTC)

மறுமொழி - செல்வா

[தொகு]
எனக்கு ஆறனை, தாயனை காவாறனை முதலியன முற்றிலும் புதிய சொற்கள். ஆர்.என்.ஏ என்னும் ஆங்கிலச் சொல்லைத்தான் ஆறனை என்கின்றீரகள் என்பது விளங்குகின்றது. இதே போல டி.என்.ஏ என்பதைத் தாயனை என்கின்றீர்கள். இவை தவறு என்று சொல்லவில்லை, சொல்வதற்கு எளிமையாகவுமுள்ளது. ஆனால் பொருத்தான முறைதானா என்பதில் ஐயம் எனக்கு. ஆரென்னே என்றாலாவது ஆர்.என்.ஏ என்பதைக் குறிக்கும்பொழுது சேர்த்து ஒலிப்பதாகக் கொள்ளலாம். தூதாறானை என்பதைக் குறிப்பு ஆர்.என்.ஏ என்றோ கு.ஆர்.என்.ஏ என்றோ குறிப்பதே போதும். சொல்லும்பொழுது கூவாரன்னே எனச் சொல்லுவோமாக விருக்கும். தி.மு.க என்பதைத் தீமூக்கா என்பதுபோல. இதே போல டீயென்னே அல்ல்து தீனென்னே என்றும் சொல்வோமாகவிருக்கும். ஆனால் டி.என்.ஏ என்றே இருக்கலாம். இவற்றுக்கு நல்ல தமிழ்க்கலைச்சொற்கள் ஆக்கலாம், வழங்கலாம். பெரிய சிக்க ஏதுமில்லை. --செல்வா (பேச்சு) 19:00, 12 ஏப்ரல் 2017 (UTC)

மறுமொழி - செந்தி

[தொகு]
ஏற்கனவே உபயோகத்தில் இருக்கும் ஆர்.என்.ஏ என்பதை 'ஆறனை' என்று அழைப்பது சிக்கலானது. ஆர்.என்.ஏ என்பதை முதன்மையான சொல்லாக வைத்துக்கொண்டு இதற்கு இன்னுமொரு சொல் உண்டு என ஆறனையைப் பயன்படுத்தலாம். காலப்போக்கில் ஆறனை பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்டால் ஆர்.என்.ஏ படிப்படியாக மங்கிவிடும். ஆனால், ஒரு விளங்கிப் படிக்கும்(தமிழில் கல்வி) சூழ்நிலையில், கலைச்சொல்லில் இருந்து அதற்குரிய விளக்கம் பெற்றுக் கற்றல் மிகச் சிறந்தது. Nucleic acid = கருவமிலம் (கருக்காடி) என அழைத்தால், Ribonucleic acid என்பதை இரைபோக் கருக்காடி எனவோ அல்லது இரைபோக் கருவமிலம் எனவோ அழைக்க நேரிடும், அல்லது முழுவதும் தமிழில், ஐங்கரிமவினியக் கருக்காடி அல்லது ஐவினியக் கருக்காடி (இரைபோசு ஒரு ஐங்கரிம இனியம் என்பதால்) எனலாம்.

மூலச்சொல்லை ஆராய்ந்தால், இரைபோசு என்பது arabinose எனும் சொல்லில் இருந்து உருவானது, arabinose எனும் சொல் arabic + ose இல் இருந்து உருவானது. D-Ribose was first reported in 1891 by Emil Fischer. It is a C'-2 carbon epimer of the sugar D-arabinose (both isomers of which are named for their source, gum arabic) and ribose itself is named as a partial rearrangement of letters in the word 'arabinose'.

பொதுவாகவே கலைச்சொற்களே அற்று இருக்கும் புதிய சொற்களுக்கு சொல்லாய்வுக்காக நேரம் செலவிடுவது நன்று. ஏற்கனவே "ஆர்.என்.ஏ" என பலர் அழைப்பதை நிறுத்தி "ஆறனை" என்று திடீரென முன்மொழிந்தால் ஏற்றுக்கொள்ளப்படுவதில் சிக்கலும் தாமதமும்தான் இருக்கும். எனவே இவ்வகைச் சொற்களுக்கு மிகவும் ஆராய்ந்து பலர் ஏற்றுக்கொண்ட பின்னரே கலைச்சொல்லாக்கம் செய்வது உசிதமானது. சில சொற்களுக்கு ஏற்கனவே ஒரு கலைச்சொல்லும் இல்லை, ஆங்கில ஒலிபெயர்ப்புப்படி எழுதுகின்றோம் என்றால் தற்போதைக்கு ஒரு பெயர் கொண்டு அழைக்கலாம். ஏற்றுக்கொள்ளப்படும் போது அதுவே அதனது கலைச்சொல்லாக திகழ வாய்ப்புள்ளது. அதனை யாரேனும் மறுத்தால் மேலும் ஆராயலாம்.

@5anan27: அஞ்சனன்,

ஏற்கனவே இங்கு புழக்கத்தில் இருக்கும் பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சொல்லுக்கும் தாங்கள் தனித்துவமான கலைச்சொல் கொண்டு எழுதியுள்ளீர்கள். அது படிப்போருக்கு கடினத்தை அளிக்கலாம்.

ஆர்.என்.ஏ. படியெடுப்பு என்பது வரிமாற்றம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்.என்.ஏ. படியெடுப்பு, வரிமாற்றம் இவ்விரு சொல்லையும் படிக்கும் ஒரு நபருக்கு "ஆர்.என்.ஏ. படியெடுப்பு" என்றால் சொல்லிலேயே அதற்குரிய விளக்கம் கிடைத்து விடுகின்றது. வரிமாற்றம் என கூகிளில் தேடுகையில் வரி செலுத்துவதில் ஏற்படும் மாற்றம் என்பது இரண்டாவதாகக் கிடைத்தது. பார்க்க:பேச்சு:ஆர்.என்.ஏ. படியெடுப்பு

விக்சனரி அகரமுதலியில் (https://ta.wiktionary.org/s/6tnq) அல்லது கலைக்களஞ்சியத்தில் இவ்வகைச் சொற்களை இடும்பொழுது கலந்து ஆலோசித்து இடுதல் நன்று. எனது கருத்துப்படி, ஆறனை, தாயனை காவாறனை போன்றனவற்றை மாற்றுச்சொல்லாகவும் ஆர்.என்.ஏ, டி.என்.ஏ போன்றனவற்றை முதன்மைச் சொல்லாகவும் கையாளுதல் சிறந்தது. --சி.செந்தி (உரையாடுக) 06:31, 14 ஏப்ரல் 2017 (UTC)

மறுமொழி - அஞ்சனன்

[தொகு]
@Drsrisenthil: அவர்களுக்கு,
முதலில் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். விக்கிப்பீடியாவில் என் இரண்டு மிகப்பெரும் தவறுகளை ஒத்துக்கொள்கின்றேன்.
1. உருவாக்கிய கலைச்சொற்களை யாருடனும் கலந்தாலோசியாது கட்டுரைத் தலைப்புகளாக்கியமை.
2. ஆங்கிலச் சொற்களை, அல்லது முன்பே ஏற்றுக்கொள்ளப்பட்ட கலைச்சொற்களை அக்கட்டுரையில் (அடைப்பிலேனும்) குறிப்பிடாமை.
அதற்கான காரணங்களை பேச்சு:காவாறனை பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறேன் எனினும், அந்தத் தவறுகளுக்காக மன்னிப்பைக் கோருகிறேன்.
தங்கள் கருத்தில் நான் முரண்படும் புள்ளிகள்:
  • ஆர்.என்.ஏ என்பது ஏற்கனவே வழக்கிலுள்ள சொல்.
சிறுதிருத்தம், அது வழக்கிலுள்ள ஆங்கிலச் சொல். அதைத் தமிழ் விக்கிப்பீடியாவில் அப்படியே பயன்படுத்துவதாக முன்பொரு விவாதத்தில் முடிவெடுக்கப்பட்டதாக @Kalaiarasy: குறிப்பிட்டிருந்தார். ஆனால், ஆர்.என்.ஏ எனும் ஆங்கில ஒலிபெயர்ப்பை "ஆறனை" என தமிழில் அழைப்பதில் என்ன சிக்கல் எனப் புரியவில்லை. தமிழ் விக்கி உள்ள காலம் வரையும் ஆர்.என்.ஏ அப்படியே தான் சொல்லப்படவேண்டுமா? மூலக்கூற்று உயிரியற்றுறையில் உள்ள நூற்றுக்கணக்கான ஆறனை சார்ந்த கட்டுரைகள், ஆர்.என்.ஏ என்றே மொழிபெயர்க்கப்படவேண்டுமா?
* பொதுவாகவே கலைச்சொற்களே அற்று இருக்கும் புதிய சொற்களுக்கு சொல்லாய்வுக்காக நேரம் செலவிடுவது நன்று.
இது எனக்குப் புரியவில்லை. கலைச்சொல் இல்லாத சொல்லொன்றுக்குத் தான் தமிழ்ச்சொல் பரிந்துரைத்தேன். (நினைவுகூர்கிறேன், ஆர்.என்.ஏ தமிழ்ச்சொல்லே அல்ல. கார், பஸ், ரோடு போல ஒலிபெயர்ப்பு மட்டும் தான்.)
  • முழுவதும் தமிழில், ஐங்கரிமவினியக் கருக்காடி அல்லது ஐவினியக் கருக்காடி எனலாம்.
தமியேன் இறைபோசு, சுக்குறோசு, அரபினோசு, மன்னோசு முதலான எல்லா வெல்லங்களுக்கும் தனித்தமிழ்ப்பெயர் சூட்டவேண்டும் என்றோ, வேதியியல் தனிமங்களுக்கெல்லாம் தனித்தமிழ்ப்பெயர் சூட்டவேண்டும் என்றோ, கோரும் வகையறா அல்லன். அறிவியற்கலைச்சொல்லொன்றின் பொதுப்புழக்கத்தின் அளவு கருதியே அவற்றை மொழியாக்கவேண்டும் என்ற கருத்துக்கொண்டவன். DNA, RNA என்பன அறிவியலைத் தாண்டி, இன்று பொதுப்பயன்பாட்டிலும் அதிகம் பயன்படும் சொற்கள், மூலக்கூற்று உயிரியல் எனும் வளர்ந்துவரும் முக்கியமான அறிவியல் துறையின் நாயகர்கள், என்பதாலேயே அவற்றுக்கு தமிழ்க்கலைச்சொல்லைப் பரிந்துரைத்தேன்.
  • "ஆறனை" என்று திடீரென முன்மொழிந்தால் ஏற்றுக்கொள்ளப்படுவதில் சிக்கலும் தாமதமும்தான் இருக்கும்.
மொழியாக்கம் புரியாது என்பதற்கு மாற்றீடாக தமியேன் கருதுவது ஒலிப்பு ஒத்து – ஆனால் – வேர்ச்சொல் தமிழிலக்கண மரபு மாறாமல் கலைச்சொல்லாக்கம் செய்வது. ஆனால், எந்தவொரு மொழியாக்கமும் எடுத்த எடுப்பிலேயே அதன் பேசுமொழியாளர்க்குப் புரியாது – புரியவும் முடியாது. அவ்வாறு புரியவேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு. அதற்கு நிச்சயம் சற்றுக்காலமெடுக்கும். மின்சாரம், பேருந்து, அலைக்கற்றை இதெல்லாம் முதன்முதலாக அச்சு ஊடகத்தில் வந்தபோது எத்தனை பேருக்குப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
  • எனவே இவ்வகைச் சொற்களுக்கு மிகவும் ஆராய்ந்து பலர் ஏற்றுக்கொண்ட பின்னரே கலைச்சொல்லாக்கம் செய்வது உசிதமானது.
பேருந்து, மின்சாரம் தொடங்கி அண்மையில் சர்ச்சைக்குள்ளான காணொளி, அலைக்கற்றை வரை எல்லாக் கலைச்சொற்களுமே தமிழறிஞர் – துறைவல்லுநர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டு அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னரே பொதுப்புழக்கத்துக்கு வந்தது என்று சொல்லமுடியாது. தமிழறிஞரும் துறைவல்லுநரும் தீர ஆராய்ந்துவிட்டே ஒரு கலைச்சொல்லை ஏற்றுக்கொண்டு பொதுவெளிக்கு விட அனுமதிக்கவேண்டும் என்பது தற்போதைக்கு சாத்தியமற்ற ஒரு இலட்சியக் (ideal) கருத்து. அத்தகைய அனைத்துலக தமிழ் அமைப்பு எதுவும் நானறிந்து இதுவரை நிறுவப்படவில்லை.
தமிழ் விக்கிப்பீடியாவில் பல கலைச்சொற்கள், ஒத்தாசைப்பக்கத்தில் வினவப்பட்டு அப்படியே கிடப்பில் கிடப்பதை சுட்டிக்காட்டிய பின்னும், மற்றவரின் ஆலோசனை பெற்றே கலைச்சொல்லை உருவாக்கவேண்டும் என்கின்றீர்கள். மன்னியுங்கள். இனிமேல் பொதுக்கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் நான் உருவாக்கும் கலைச்சொற்களை தலைப்பாகவோ,முதன்மைச்சொல்லாகவோ திணிக்கமாட்டேன் என்றும், தேவையான இடங்களில் நிச்சயம் ஒத்தாசைப்பக்கத்தை நாடுவேன் என்றும் உறுதியளிக்கிறேன். ஆனால் தொடர்ந்தும் கலைச்சொற்களைப் பரிந்துரைப்பேன். அது பொருத்தமில்லை என்றால் தகுந்த வாதங்களை முன்வைத்து நிராகரியுங்கள். முழுமனத்துடன் ஏற்றுக்கொள்கிறேன். அப்படியல்ல விவாதத்துக்கு வைத்தபின்னரே , நீ உருவாக்கிய கலைச்சொல்லை பயன்படுத்தவேண்டும் என்பீர்களென்றால், மன்னியுங்கள். தமியேனுக்கு அவ்வளவு நாள் காத்திருக்கும் பொறுமை இல்லை. --5anan27 (பேச்சு) 17:15, 14 ஏப்ரல் 2017 (UTC)

மறுமொழி - செந்தி

[தொகு]

@5anan27: தங்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள் அஞ்சனன்,

ஏற்கனவே இருக்கும் சொற்கள்

[தொகு]

எனது உரையாடலை பிழையாக விளங்கிக் கொண்டுள்ளீர்கள் :). புதிதாக உருவாக்கும் கலைச்சொற்களுக்கு எனது ஆதரவு எப்போதும் உண்டு. ஏற்கனவே இருக்கும் சொற்களைக் கையாளாமல் நீங்கள் உருவாக்கியவை:

அருள் கூர்ந்து இதனை மீண்டும் படித்துப் பாருங்கள்: ///பொதுவாகவே கலைச்சொற்களே அற்று இருக்கும் புதிய சொற்களுக்கு சொல்லாய்வுக்காக நேரம் செலவிடுவது நன்று. ஏற்கனவே "ஆர்.என்.ஏ" என பலர் அழைப்பதை நிறுத்தி "ஆறனை" என்று திடீரென முன்மொழிந்தால் ஏற்றுக்கொள்ளப்படுவதில் சிக்கலும் தாமதமும்தான் இருக்கும். எனவே இவ்வகைச் சொற்களுக்கு மிகவும் ஆராய்ந்து பலர் ஏற்றுக்கொண்ட பின்னரே கலைச்சொல்லாக்கம் செய்வது உசிதமானது. சில சொற்களுக்கு ஏற்கனவே ஒரு கலைச்சொல்லும் இல்லை, ஆங்கில ஒலிபெயர்ப்புப்படி எழுதுகின்றோம் என்றால் தற்போதைக்கு ஒரு பெயர் கொண்டு அழைக்கலாம். ஏற்றுக்கொள்ளப்படும் போது அதுவே அதனது கலைச்சொல்லாக திகழ வாய்ப்புள்ளது. அதனை யாரேனும் மறுத்தால் மேலும் ஆராயலாம். /// இங்கு நான் கலைச்சொல் என்று "ஆர்.என்.ஏ"யைக் கூறினேன். இது தமிழல்ல என்பதால் கலைச்சொல் அல்ல என்று கூற முடியாது. இதற்கு தற்பொழுது உள்ள கலைச்சொல் "ஆர்.என்.ஏ".

விவாதத்துக்குரிய கலைச்சொல்லாக்கம்

[தொகு]

cistron என்பதை நேர்க்குறுவன் என மொழிபெயர்த்துள்ளீர்கள். Origin of cistron: cis- + tr(ans)- + -on cis- எனும் முன்னொட்டை "நேர்" எனக் கருதி இந்த கலைச்சொல்லாக்கம் நடந்துள்ளது. trans- என்பதைக் குறுவன் எனக் கருதி இருக்கின்றீர்கள். முதலில் cis- மற்றும் trans- என்பனவற்றுக்கு சரியான சொல் தேவை. பின்பு cistronற்கு கலைச்சொல்லை ஆக்குங்கள்.

புதிதாக உருவாக்கும் கலைச்சொல்

[தொகு]

வேறுமம் என்று variant எனும் சொல்லுக்கு நீங்கள் உபயோகித்த கலைச்சொல் மிக்க அருமை. ஆனால் இது versionஐக் குறிக்க சில இடத்தில் பயன்படுத்துகின்றனர். இங்கு தாங்கள் variantக்கு இதைப் பயன்படுத்தியது சிறப்பாக அமைகின்றது. இது போன்ற சொல் கிடைக்கும்போது விவாதங்களே தேவைப்படாது என்பது எனது கருத்து. புதிதாக உருவாக்கும் கலைச்சொல், ஆய்வுக்கு உட்பட்ட பின்னரே வெளியிடப்படவேண்டும் என்று நான் கூறவில்லை. நானும் பல புதிய சொற்களை உருவாக்கி உள்ளேன், அவற்றை தலைப்பாகக் கொண்டு கட்டுரைகளும் உருவாக்கி உள்ளேன். அது விவாதத்துக்கு வரும் போது அதற்குரிய தகுந்த விளக்கம் அளிக்கவேண்டியது எனது கடமை. அதேசமயத்தில் அதனை விட இன்னுமொரு தகுந்த கலைச்சொல் கிடைக்கும் போது ஏற்றுக்கொள்ளவேண்டியதற்கும் ஆயத்தமாக உள்ளேன்.

தங்களது (எடுத்துக்காட்டு) ஆறனை எனும் சொல்லை நான் வேண்டாம் என்று ஒதுக்கவில்லை. நான் எழுதியது அதனை ஏற்கனவே புழங்கும் சொல்லுடன் சேர்த்துக் கொள்ளலாம் என்பதே. இதற்கு இன்னுமோரு காரணம் யாதெனில், அது மக்களின் தேடல்தான். தேடுபொறியில் ஏற்கனவே பரிச்சயமான சொல்லைத்தான் ஒருவர் தேடுவார். அச்சொல்லே அவரை விக்கிபீடியாவுக்கு அழைத்து வருகின்றது. விக்கியின் இணையத்தளப் பக்கத்தில் "H1" தலைப்பு உள்ள சொல்லே தேடலுக்கு முக்கியத்துவம் பெற்றது. அந்த நிலையில் ஏற்கனவே தெரிந்த ஒரு சொல்லுக்கு கட்டுரையின் தலைப்பு அப்பெயர் கொண்டே அமைவது அவசியமானது. இதனைவிட சொல்லாக்கம் எளிதில் விளங்கக்கூடியதாக இருந்தால் கல்வி கற்றலுக்கு இலகுவாக அமையும்.

சேர்ந்து உழைப்போம்

[தொகு]

ஏற்கனவே பல ஆண்டுகள் முன்னர் உருவாக்கப்பட்ட பற்பல கலைச்சொற்கள் தவறானவையாக உள்ளன. இவற்றையும் திருத்தி அமைக்கலாம். வாருங்கள் சேர்ந்து உழைப்போம்! உதவி தேவைப்படின் அழையுங்கள் நேரமிருந்தால் வருகின்றேன். உங்களைப் போன்றவர்களின் உதவி தமிழுக்கும் தமிழ் விக்கிபீடியாவுக்கும் நிச்சயம் தேவை.--சி.செந்தி (உரையாடுக) 00:13, 15 ஏப்ரல் 2017 (UTC)

மறுமொழி - கலை

[தொகு]
  • நான் கலைச்சொல்லிற்கான தீர்வு பெறப்படாமல், தற்போதைக்கு அப்படியே எழுதலாம் என்று கூறியது டி.என்.ஏ என்ற சொல்லுக்குத்தான், ஆர்.என்.ஏ க்கு அல்ல. ஆர்.என்.ஏ கட்டுரை ஏற்கனவே உரையாடலின் பின்னர் ரைபோ கருவமிலம் கட்டுரைக்கு வழிமாற்றப்பட்டுவிட்டது. ஆறனை என்பதை ஏற்றுக் கொள்வதில் என்ன சிக்கல் என்று கேட்டிருந்தீர்கள். அதன் பொருளோ, அல்லது ஒலிப்பு ஒற்றுமையோ இரண்டுமே எளிமையாகக் கிடைக்கவில்லை என்பதுதான் சிக்கல். //தாயனையின் செய்திகளுக்கான பாதையாக இருப்பதால் (ஆறு – பாதை, ஒழுக்கு, வழி)// என்று கூறும்போது, ஆர்.என்.ஏ க்குரிய தனித்துவமான இயல்புகள் எதுவும் இந்த ஒப்புவமையால் பெற முடியவில்லை என்பதுடன், பாதை என்பது ஆர்.என்.ஏ யை விளக்கும் சரியான பொருளாகவும் தோன்றவில்லை.
  • //மூலக்கூற்று உயிரியற்றுறையில் உள்ள நூற்றுக்கணக்கான ஆறனை சார்ந்த கட்டுரைகள், ஆர்.என்.ஏ என்றே மொழிபெயர்க்கப்படவேண்டுமா?// நீங்கள் குறிப்பிடுவது த.விக்கியில் உள்ள கட்டுரைகளையா? அப்படியானால் உள்ளிணைப்புகள் கொடுக்கப்பட்டிருந்தால், அப்படியே இருக்கலாம். மாற்றுவதானால், சில இலகுவாக்கப்பட்ட முறைகள் மூலமும் மாற்றலாம். முன்னர் சில சொற்களுக்கு இப்படிச் செய்திருக்கிறேன். ஏற்கனவே நான் கூறியதுபோல், நான் எழுதிய சில கட்டுரைகளுக்கே, இவ்வாறு புதிய சொற்களை மாற்ற வேண்டி வந்தது.
  • ஆர்.என்.ஏ யை இரைபோ கருவமிலம் என்று ஏற்றுக் கொள்வதில் என்ன சிக்கல்? (Ribosome ஐ இரைபோசோம் என்பதுபோல). ஆங்கிலத்தில் அதனை முழுமையாக எழுதும்போது Ribonucleic acid என்கிறார்கள். சுருக்கமாகச் சொல்லும்போது RNA என்கிறார்கள். அதையே நாமும், இரைபோ கருவமிலம் என்றும் இ.க.அ. என்றும் குறிக்கலாமே? புதிய கலைச் சொற்களை கட்டுரையின் உள்ளே கொடுக்கலாம்.
  • சிலவேளைகளில் பெரிய சொல்லாக இருந்தாலும், பொருளை இலகுவில் சரியாகவும், நேரடியாகவும் விளக்குமாயின், அவை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. எ.கா. நோய் எதிர்ப்பாற்றல் முறைமை. பார்க்க:விக்கிப்பீடியா:கலைச்சொல் ஒத்தாசை/மருத்துவம்/தொகுப்பு 01#Immunity தொடர்பான சொற்கள்
  • காவாறனை, தூதாறனை என்பவை பொருளைத் தருவதுடன் பொருத்தமான சொல்லாகவும் இருப்பதாக ஒத்த கருத்து ஏற்படின், அதனை முதலில் முதன்மைத் தலைப்பாக எடுக்காமல், கட்டுரையின் உள்ளே குறிப்பிட்டு, அதன் பொதுப் பயன்பாட்டைப் பார்த்து அறியலாம்.
  • இன்னொரு வேண்டுகோள், ஏற்கனவே உரையாடப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்ட கலைச் சொற்கள் இருக்கையில், அவற்றை முதன்மைச் சொல்லாகக் கொடுத்து, நீங்கள் ஆக்கும் சொல்லை அடைப்புக் குறிக்குள் கொடுங்கள். அப்படி ஏற்கனவே இருக்கும் கலைச் சொல் பொருத்தமற்றதாகத் தங்களுக்குத் தோன்றின், அதனால்தான் புதிய கலைச்சொல்லை அங்கே அறிமுகப்படுத்துகிறீர்கள் எனில், அது தொடர்பில், குறிப்பிட்ட பக்கத்தில் உரையாடலை ஆரம்பிக்கலாம். அப்போது, ஏற்கனவே இருக்கும் சொல் பொருத்தமற்றதென முடிவுக்கு வரின், அதனை மாற்றலாம்.
  • அனைவரும் இணைந்து ஒத்துழைப்போம். நன்றி.--கலை (பேச்சு) 13:21, 15 ஏப்ரல் 2017 (UTC)

மறுமொழி- அஞ்சனன், மீண்டும்

[தொகு]

User:drsrisenthil நன்றி!

ஏற்கனவே இருக்கும் சொற்கள்

இவற்றில் முதல் மூன்றும் நான் உருவாக்கியதல்ல. "ஈன்" தமிழறிஞர் இராம.கி பரிந்துரைத்தது. கருவனும் முன்கருவனும் இலங்கைப் பாடத்திட்டத்தில் வழக்கிலுள்ள சொற்கள். "மொழிமாற்றம்" (அ) "மொழிபெயர்ப்பு" என்ற சொல்லுக்கு சமாந்தரமாக உருவாக்கிய சொல்லே "வரிமாற்றம்" (அ) "வரிபெயர்ப்பு" என்பது. புரதத்தொகுப்பில் அடுத்தடுத்து வரும் Translation, Transcription என்பவற்றை எளிதாக நினைவுகூர உதவும் என்பதற்காக.

விவாதத்துக்குரிய கலைச்சொல்லாக்கம்

ஆம். நீண்டநாட்களாகவே நானும் cis, trans என்பவற்றுக்கான தேடலில் உள்ளேன். ஆனால், நீண்ட வேர்ச்சொல் ஆய்வின் பின்பே இந்த நேர்க்குறுவன் சொல்லை உருவாக்கிய நினைவு. விளக்கமளிக்க அருள்கூர்ந்து கொஞ்சம் நேரம் தரவேண்டும்.

புதிதாக உருவாக்கும் கலைச்சொல்

ஆய்வுக்குட்படுத்தியே பயன்படுத்தவேண்டும் என்று சொல்லவில்லை என்கிறீர்கள். ஆனால், தங்கள் கருத்தில் வேறுவேறு விதங்களில் சொல்லப்பட்ட சொற்கள் மீண்டும் மீண்டும் அதையே உணர்த்தியதாலேயே அது சாத்தியம் அற்றது என்பதை அழுத்தமாகக் கூறினேன். என் புரிதல் தவறென்றால் மன்னியுங்கள்.

சேர்ந்து உழைப்போம்.

விக்கிப்பீடியாவில் மிகச்சிறப்பாக பங்களிப்பவர்களில் தாங்களும் ஒருவர் என்பதை பணிவோடு நினைவுகூர்கிறேன். இவ்விவாதங்கள் விக்கியன்பை விட ஆழமான புரிந்துணர்வையும் நல்லெண்ணத்தையும் நம்மத்தியில் விதைக்கும் என்பது என் நம்பிக்கை. நன்றி.

பயனர்:Kalaiarasy, கருத்துக்கு நன்றி!

தாயனையிலுள்ள மரபுச்செய்தி, தூது மூலம் - காவிச்செல்லப்பட்டு இறைபோசோமல் ஆறனைக்கு வழங்கப்படும் செயற்பாடு ஒரு ஒழுங்கில் - ஒரு பாதையில் (pathway) நிகழ்வது. அதேபோல், DNA இல்லாத உயிரிகளில் (உ-ம்: ஆறனைத்தீநுண்மம்) அது மரபுரிமைச் செய்திகாவியாக விளங்கும்போது, அங்கும் இனப்பெருக்கத்தின் போது அது முன்பே தீர்மானிக்கப்பட்ட குறித்த ஒழுங்கில் - பாதையில் (pathway) இடப்பெயர்ச்சி அடைகிறது. எல்லா உயிர்வேதியியல் - மூலக்கூற்றுவுயிரியல் செயற்பாடுகளும் 'பாத்வே'கள் வழியாகவே தான் நிகழ்கின்றன என்றாலும், மரபுச்செய்திகள் இடமாற்றப்படும் - பரிமாற்றப்படும் மையமான RNA, முக்கியமான - தலையாய - இன்றியமையாத பாதையாக அமைகின்றது. இதையே "ஆறு" (பாதை) எனக் குறித்தேன். RNAஇன் ஒட்டுமொத்த செயற்பாடுமே இச்சொல்லில் அடங்கிவிடுகின்றதே? இதைவிட வேறென்ன பொருத்தமான சொல் வேண்டும்?

மொழிபெயர்ப்பில் நான் சொல்வது, ஆங்கில விக்கியிலிருந்து தமிழ் விக்கிக்கு மொழிமாற்றப்படும் சந்தர்ப்பத்தை.

ஆர்.என்.ஏ யை இரைபோ கருவமிலம் என்று ஏற்றுக் கொள்வதில் என்ன சிக்கல்?

இதற்கான பதிலை நான் இங்கே வழங்கியிருக்கிறேன்.

Ribosome ஐ இரைபோசோம் என்பதுபோல

உண்மையில் இலங்கைக் கல்வித்திட்டத்தில் இறைபோசோம், இலைசோசோம் என்பவற்றிற்கு மாற்றுச்சொல்லாக முறையே இரண்டு தமிழ்க் கலைச்சொற்களையும் கற்றோம். குழியம் என்று முடிவுறும். இணையத்திலும் காணவில்லை. தேடிப்பார்த்து சொல்கிறேன்

இப்போதும் நான் என் கலைச்சொல்லையே ஏற்றுக்கொள்ளவேண்டும், அதில் தவறில்லை என்று வாதாடுவதாகப் புரிந்துகொள்ளவேண்டாம். அவற்றைவிடப் பொருத்தமான கலைச்சொற்களை யாரேனும் முன்வைத்தால் அவற்றை மீளெடுத்துக்கொள்கிறேன் என்றே கூறுகிறேன். --5anan27 (பேச்சு) 20:18, 15 ஏப்ரல் 2017 (UTC)

தலைப்பு மாற்றம் தேவை

[தொகு]

தலைப்பை செய்தி ஆர்.எம்.ஏ என்றோ, செய்தி இரைபோ கருக்காடி என்றோ மாற்றலாம். தூதாறனை என்பது மிகவும் உறுத்தலாக இருக்கின்றது என்று நினைக்கின்றேன். தூது ஆர்.என்.ஏ என்றெழுதினால் புரியக்கூடும். தூது என்பதவிட அது செய்தி தாங்கிச்செல்லும் ஒன்று என்பதால் செய்தி ஆர்.என்.ஏ என்பது பொருந்தும். ஒற்றை இழை இரைபோ கருக்காடி (கருக்காடி = Nucleic Acisd) என்பதும் புரிந்துகொள்ளக்கூடியது. --செல்வா (பேச்சு) 08:29, 3 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]

எண்ணம்-தகவலுழவன்

[தொகு]

கலைச்சொல் உருவாக்கலில் பிறமொழி கலப்பு தவிர்க்க இயலாதது. உரிய தமிழ்ச்சொல் இல்லையெனில், அதனை அப்படியே ஒலிபெயர்ப்பாக பயன்படுத்துவதே நலம். ஒலிபெயர்ப்புக்கு ஒரு அஃகுபெயரை உருவாக்குதல் நமக்கு ஏற்புடையதாக இருந்தாலும், காலம் அதனைப் புறந்தள்ளும். ஒரு பிறமொழி கலைச் சொல்லொன்றின் பொருளை, குறிப்பாக அதன் வேரைத் தமிழில் மொழியாக்கம் செய்த செல்வா, செந்தி, சுந்தர் அவர்களின் அடியொற்றவே நான் மிகவும் விரும்புகிறேன். இதுபோன்ற கலைச்சொல் உரையாடல்கள் ஒரு தொகுப்பாக இருப்பின் அது எக்காலத்திற்கும், யாவருக்கும் பயன்தரும். நான் கவனித்த வரை, உயிரியல் கலைச்சொற்கள் குறித்த உரையாடல் 2010 ஆம் ஆண்டு முதல் நடந்துள்ளது.( எ-கா) பேச்சு:ஆக்சிசன் Oxygen-->ஆக்சிஜன்-->ஆக்சிசன்--> உயிர்வாயு-->உயிர்வளி எனபடிப்படியாகவே நிலைக்கும். அதுவரை நாம் உரையாடல் ஆர்வத்தைச் சுருக்கி, தமிழுக்குத் தேவையான நுட்பத்தேவைகளை ஆராய்வோம். நான் பைத்தான்3 மொழியில் தற்போது ஈடுபடுகிறேன். வணக்கம்.--உழவன் (உரை) 07:24, 26 ஏப்ரல் 2017 (UTC)

எண்ணம்

[தொகு]

பணிகள் மிகுதியாக உள்ளதால், இங்கு ஆழ்ந்து எண்ணிப் பார்த்து பதிவிட முடியாமல் உள்ளது. மன்னிக்கவும்.--நந்தகுமார் (பேச்சு) 08:11, 26 ஏப்ரல் 2017 (UTC)

மணியன்

[தொகு]

நானும் விக்கிப்பீடியாவில் கூடுதல் நேரம் செலவிடவியலாது உள்ளேன். இதனைக் குறித்த ஆழ்ந்த துறையறிவும் இல்லாதவன். எனினும் தலைப்புகளில் ஏற்கெனவே புழங்கப்படும் கலைச்சொற்களை/ ஆங்கிலபெயர்ப்புகளை தற்காலிகமாக பயன்படுத்தவது சமகாலப் பயன்பாட்டிற்கு நல்லது. புதிய கலைச்சொற்களை முகப்பு பத்தியில் அறிமுகப்படுத்தலாம். விரிவான உரையாடலையும் (இங்கு நடப்பது போல) மேற்கொண்டு நிலைநிறுத்தலாம். பொதுப்பயன்பாட்டில் ஏற்றபின்னர் தலைப்புகளை நகர்த்தலாம்.--மணியன் (பேச்சு) 03:32, 29 ஏப்ரல் 2017 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தூதாறனை&oldid=3802583" இலிருந்து மீள்விக்கப்பட்டது