பேச்சு:கங்கைப் புனித நீராடும் விழா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வணக்கம், கங்கா புஷ்கரம் என்ற தலைப்பிலான கட்டுரையினை அடிப்படையாகக் கொண்டு இப்பதிவு ஆரம்பிக்கப்பட்டது. வேறு தலைப்பு எதுவாயினும் தெரிவிக்க வேண்டுகிறேன். அவ்வாறே செய்வோம். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 11:20, 2 செப்டம்பர் 2017 (UTC)

கங்கைப் புனித நீராடும் விழா --நந்தகுமார் (பேச்சு) 11:25, 2 செப்டம்பர் 2017 (UTC)
கங்கைப் புனித நீராடும் விழா என்றே அமைப்போம். இருப்பினும் ஒரு ஐயம். புஷ்கரம் தொடர்பான குறிப்பினையோ விவரங்களையோ தேடுகையில் பக்தர்களுக்கும், மக்களுக்கும் எளிதாக இருக்கும் வகையில் (கங்கை புஷ்கரம்) என்று அடைப்புக்குறிக்குள் போடலாமா? வேறு ஏதேனும் முறை உள்ளதா? மகாமகம் என்பதற்கு மகாமகம் என்றுதான் கூறுகிறார்கள். அந்த தலைப்பில் பதிவு உள்ளது. அதுவும் புனித நீராடலே. (மகாமகம் புனித நீராடல் விழா என்று பயன்படுத்துவதில்லை)அவ்வகையில் கங்கைப் புனித நீராடும் விழா என்பது போல ஒவ்வொரு நதியின் பெயருக்குப் பின்னும் புனித நீராடும் விழா என்று அமைக்கும்போது தேடுபவர்கள் எளிதில் உள்வாங்கிக் கொள்வார்களா என்ற ஐயம் ஏற்படுகிறது. நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 11:39, 2 செப்டம்பர் 2017 (UTC)