கங்கைப் புனித நீராடும் விழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கங்கைப் புனித நீராடும் விழா
Ganga Pushkaram
நிகழ்நிலைநடப்பில்
வகைஇந்து சமய விழா
காலப்பகுதி12 ஆண்டுகளுக்கு ஒருமுறை
நிகழ்விடம்
அமைவிடம்(கள்)கங்கை ஆறு
நாடுஇந்தியா
மிக அண்மைய2011
அடுத்த நிகழ்வு22 ஏப்ரல் – 5 மே 2023
பரப்புவட இந்தியா
செயல்பாடுபுனித நீராடல்

கங்கைப் புனித நீராடும் விழா (கங்கா புஷ்கரம்) கங்கை ஆற்றங்கரையில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்படுகின்ற விழாவாகும்.

12 நாள்கள்[தொகு]

இவ்விழா 12 நாள்கள் நடைபெறும். குரு, மேஷ ராசிக்குள் பிரவேசிக்கும்போது இவ்விழா கொண்டாடப்படுகிறது. [1]

இடங்கள்[தொகு]

இவ்விழா காசி, ஹரித்வார், ரிஷிகேஷ் ஆகிய இடங்களில் நடைபெறும். [2]

ஹரித்வார் கங்கா புஷ்கரம்[தொகு]

ஹரித்வார் கங்கா புஷ்கரம் 21 ஏப்ரல் 2023 முதல் நடைபெறவுள்ளது. சித்திரை 9ஆம் நாள் (22 ஏப்ரல் 2023) சனிக்கிழமை காலை 9.41 மணிக்கு மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்குகுரு பகவான் பிரவேசிக்கிறார். மேஷ ராசிக்குரிய கங்கை நதிக்கரையில், ஹரித்வாரில் புஷ்கர விழா நடைபெறவுள்ளது. [3]

பிற புஷ்கரங்கள்[தொகு]

இந்த புஷ்கரத்தினைப் போல இந்தியாவின் பிற இடங்களில் நர்மதா புஷ்கரம், சரஸ்வதி புஷ்கரம், யமுனா புஷ்கரம் , கோதாவரி புஷ்கரம் , கிருஷ்ணா புஷ்கரம், காவிரி புஷ்கரம் , பீமா மற்றும் தாமிரபரணி புஷ்கரம், பிரம்மபுத்ரா புஷ்கரம், துங்கபத்திரா புஷ்கரம், சிந்து புஷ்கரம், பிராணஹிதா புஷ்கரம் ஆகிய புஷ்கரங்கள் கொண்டாடப்படுகின்றன.

  1. Roshen Dalal (18 April 2014). Hinduism: An Alphabetical Guide. Penguin Books Limited. பக். 921–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-8475-277-9. https://books.google.com/books?id=zrk0AwAAQBAJ&pg=PT921. 
  2. கோடி தீர்த்தங்கள் கொண்ட காவிரியில் மஹா புஷ்கரம், தினமலர், 4 செப்டம்பர் 2017
  3. ஹரித்வார் கங்கா புஷ்கரம், தினமணி, 13 ஜனவரி 2023