பேச்சு:ஏறுதழுவல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Exquisite-kfind.png ஏறுதழுவல் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipediaசல்லிக்கட்டும் மஞ்சுவிரட்டும் ஒன்றா? கட்டுரையை சல்லிக்கட்டு என்ற தலைப்புக்கு நகர்த்தலாம்--ரவி 19:06, 8 மே 2008 (UTC)


ஏறு தழுவல் என்பது சரியான எழுத்துக்கூட்டல்.--சிவகுமார் \பேச்சு 02:09, 1 ஜூன் 2008 (UTC)

ஆம். ஏறு என்பது தான் சரியானது. அதோடு இந்த இணைப்பையும் பார்க்க: http://muelangovan.blogspot.com/2008/01/blog-post_14.html --இரா.செல்வராசு 02:15, 1 ஜூன் 2008 (UTC)

ஏறுதழுவல் என்பதன் கருத்து என்ன? ஏர் என்பதில் இருந்து ஏரு என்று வந்தது என நினைக்கிறேன்.--Kanags \பேச்சு 02:25, 1 ஜூன் 2008 (UTC)

ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கிறது (ஆண்). பிற விலங்குகளின் ஆண்பாலையும் ஏறு என்று குறிக்கும் வழக்கம் கூட இருக்கிறது என்று நினைக்கிறேன். பாரதியின் ஒளி படைத்த கண்ணினாய் பாட்டில் கூட,

எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா
ஏறு போல் நடையினாய் வா வா வா

என்று ஏறு வருகிறது. --இரா.செல்வராசு 02:48, 1 ஜூன் 2008 (UTC)

நன்றி செல்வராசு. தெளிவான விளக்கம். இப்போதே மாற்றி விடுகிறேன்.--Kanags \பேச்சு 02:52, 1 ஜூன் 2008 (UTC)
ஏறு என்பது ஆண்பால் விலங்குகள் சிலவற்றுக்கான சிறப்புப் பெயர். காளை மாட்டுக்கும், சுறாமீனில் ஆணுக்கும், ஆண் அரிமாவுக்கும் (சிங்கத்திற்கும்) வழக்கமாகக் கூறும் பெயர். ஏறு என்பது உயரம், மிகு வலிமை இவற்றைக் குறிக்கும் பொருள் கொண்டது. சிவபெருமானுக்கு ஏறன் என்னும் ஒரு பெயரும் உண்டு. ஏர் என்பது வேறு, ஏறு என்பது வேறு. ஏருழவன் என்றால் ஏர் கொண்டு நிலத்தை உழும் உழவன். ஆனால் ஏறுழவன் என்றால் படைவீரன். ஏறெடுத்து பார்த்தல் அல்லது ஏறிட்டுப் பார்த்தல் என்றால் உற்றுப் பார்த்தல் மேல் நோக்கி, நிமிர்ந்து பார்த்தல். ஏற்றணை என்றால் "சிங்காசனம்" (அரசுகட்டில்). ஏறுதழுவல் என்னும் சொல் தமிழில் சங்கக் காலத்தில் இருந்து வருவது. அண்மையில் ஐராவதம் மகாதேவன் இப்பழக்கம் சிந்துவெளி நாகரீகத்தில் இருந்தது பற்றியும் அது பற்றிய ஒரு சிந்திவெளிச் சின்னம் இருப்பது பற்றியும் உரையாடியும் கட்டுரைகள் எழுதியும் வந்துள்ளார். கீழ்க்காணும் சுட்டிகளைப் பார்க்கவும்:
காளையை பிடிப்பது, அடக்குவது என்பன வீரச்செயல்களாக அன்றும் இன்றும் கருதப்படுகின்றது.
பாவலரேறு என்னும் புகழ் மொழியில் பாவலர்களுள் ஏறு (ஆண் அரிமா, சிங்கம்) போன்றவர் என்பது கருத்து. பெருஞ்சித்திரனாருக்குப் பாவலரேறு என்பது சிறப்புப்பட்டம். மிகு வல்லமை படைத்த ஆணுக்கே ஏறு என்று பெயர். ஏறுநடை என்பது பற்றி திருக்குறளில் வாழ்க்கைத்துணை நலத்தில்
புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.
என்றும், இறைமாட்சியில்
படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு.
என்றும் கூறுகிறார்.
--செல்வா 03:14, 1 ஜூன் 2008 (UTC)


ஜல்லிக்கட்டு -> சல்லிக்கட்டு[தொகு]

கட்டுரையில் ஜல்லிக்கட்டு என்று இருந்த இடங்களில் சல்லிக் கட்டு என்று மாற்றி இருக்கிறேன். ஜல்லி என்ற சொல்லுக்கு என்ன பொருள் என்று தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் இந்த இடத்தில் எப்படிப் பொருந்தும் என்று தெரியவில்லை. ஜல்லி என்பது சல்லியின் பேச்சுத் தமிழ் கொச்சை வழக்காகவே உள்ளது. இல்லை, அண்மைக்கால ஊடகங்களில் உள்ள பெரும்பான்மை வழக்கைத் தான் எழுதவேண்டும் என்றால், 20 ஆண்டுகள் கழித்து தஞ்ஜாவூர் என்று எழுதிக் கொண்டிருந்தால் வியப்பதற்கில்லை :) --இரவி 22:50, 20 சனவரி 2012 (UTC)

வேறு பெயர்கள்[தொகு]

சல்லிக்கட்டு, ஏறு தழுவல், மஞ்சு விரட்டு என்பனவற்றுக்கிடையில் வேறுபாடு உள்ளதள்ளவா? இவற்றுக்கு முறையே தனிக்கட்டுரைகள் உருவாக்கினால் என்ன? --AntanO 01:49, 15 சனவரி 2017 (UTC)

"நடுவண்/மத்திய அரசு" -> "ஒன்றிய அரசு"[தொகு]

இக்கட்டுரையில் இந்திய நாட்டின் ஒன்றிய அசினை (Union Govt) நடுவண்/மத்திய அரசு (Central Govt) என குறிப்பிட்டிருந்தனர். இந்திய அரசமைப்புச்சட்டமானது இந்தியாவை "ஒன்றியம்" என்றே அழைக்கிறது, அதுபோல அரசையும் ஒன்றிய அரசு, மாநில அரசு என்றே குறிப்பிடுகிறது. மேலும், இந்திய அரசானது பண்புரீதியாகவும் ஒரு "ஒன்றிய அரசே". ஆதலால், "நடுவண்/மத்திய அரசு" என வரும் இடங்களை "ஒன்றிய அரசு" என மாற்றியுள்ளேன் - பத்மாக்சி (உரையாடுக) 11:42, 24 சூன் 2017 (IST)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஏறுதழுவல்&oldid=2510561" இருந்து மீள்விக்கப்பட்டது