பேச்சு:உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வணக்கம். இந்த கட்டுரையில் பங்களிக்கும் அனைத்து பயனர்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள். நாடுகளின் வரிசையில் என்ற முதல் சொல் வரிசையின் தொடராக பங்களிக்கவும். நன்றி. --சிவம் 22:04, 25 செப்டெம்பர் 2012 (UTC)

உலக நாடுகளின் பட்டியல் என்ற கட்டுரை உள்ளது. இதனைத் தொடராதிருத்தல் நல்லது சிவம்.--Kanags \உரையாடுக 08:59, 29 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

நன்றி கனக்ஸ் இதை தொடரவில்லை. தயவாக நீக்கிவிடுங்கள்--சிவம் 09:19, 29 செப்டெம்பர் 2012 (UTC)

மன்னிக்கவும் சிவம், முதலுள்ள கட்டுரை வெறுமனே பெயர்களைக் கொண்ட பட்டியலாகவே உள்ளது. நீங்கள் மேலதிக தகவல்களுடன் கட்டுரையைத் தொடர எண்ணினால் தொடருங்கள். இரண்டையும் பின்னர் நான் இணைத்து விடுகிறேன். நானும் உதவுகிறேன். தகவல்களை எங்கிருந்து எடுக்கிறீர்கள்? டொய்ச்சு விக்கியில் இருந்தா?--Kanags \உரையாடுக 09:43, 29 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

ஆமாம் கனக்ஸ் டொய்ச் விக்கியில் இருந்து மட்டும் இல்லை தமிழ் விகியிலும் இருந்து எடுத்து அனைத்தையும். ஒன்றாக இணைத்தால் பார்பதற்கு அழகாகவும் ஒழுங்கு முறையாக இருக்கும் பொது சிறுவர்களுக்கு சுலபமாக புரியும் என்ற நோக்கத்தில் தான் ஆரம்பித்தேன். காரணம் நீங்கள் குடுத்திருக்கும் பக்கத்தில் கண்டங்களின் அடிப்படையில் சரியாக அமையவில்லை அதற்காக பிழை என்று சொல்லவில்லை அந்த பக்கத்தில் இருக்கும் ஒரு நாடு எந்த கண்டத்துக்கு உரியது என்று தேடவே அரை மணி நேரம் பிடிக்கிறது.. அதேவேளை ஆசியா கண்டனத்தை பார்த்தேன் ஆனால் அதில் ஆசியாவுக்குரிய நாடு வாரியான அட்டவணை கிடைக்கவில்லை அதனால்த்தான் ஆரம்பித்தேன், அத்தோடு மலைகள் மற்றும் நதிகளை மேலதிகமாக இணைக்க விரும்பினேன். இருந்தாலும் தவறில்லை, இதை நீங்கள் நீக்கலாம், அதேவேளை மற்ற கட்டுரைகளில் அட்டவணைகளை சேர்க்கின்றேன். நன்றி.--சிவம் 09:59, 29 செப்டெம்பர் 2012 (UTC)

நல்ல முயற்சி சிவம், முடிந்தால் நானும் உதவுகிறேன்--சங்கீர்த்தன் (பேச்சு) 15:59, 29 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

வணக்கம் சங்கீர்த்தன். நன்றி. இந்த பக்கத்தை முழுமையாக முடித்தால் பாடசாலை போகும் சிறு குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளனவாக இருக்கும். உங்கள் உதவிக்கு மிக்க நன்றி.--சிவம் 16:42, 29 செப்டெம்பர் 2012 (UTC)