பேச்சு:இரட்டைப்புலவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Tripundra.PNG இரட்டைப்புலவர் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


வணக்கம், இரட்டைப்புலவர் என்னும் இப்பக்கத்தை இரட்டைப்புலவர்கள் பக்கத்திற்கு திருப்பிவிடலாம் என எண்ணுகிறேன். கருத்துகளை பதியவும். --பயனர்:Dineshkumar Ponnusamy 30, மார்ச்சு, 2012

இரட்டைப்புலவர்கள்[தொகு]

இரட்டைப்புலவர் என்பது, ஒருமையை குறிக்கிறது. இரட்டைப்புலவர்கள் என்பது இருவரைக் குறிப்பதால், பன்மையில் இடுவது சரியாக இருக்கும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 05:10, 28 மே 2012 (UTC)

புலவர் என்பதே பன்மை தான். புலவர்கள் என்பதில் உள்ள கள் அஃறிணை விகுதி. --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 08:49, 28 மே 2012 (UTC)

வணக்கம் கார்த்திகேயன், புலவர் என்பது பன்மையா? அப்படியானால் ஒருமையில் எவ்வாறு குறிப்பது? சற்று விளக்கமாக விவரிக்கமுடியுமா? தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறது. -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:58, 28 மே 2012 (UTC)


புலவன் - ஆண்பால் ஒருமை

புலத்தி - பெண்பால் ஒருமை

புலவர், புலத்தியர் - பன்மை--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 09:08, 28 மே 2012 (UTC)

விரைந்து விளக்கம் அளித்ததிற்கு நன்றி, அப்படியானால், படிக்காசுப்புலவர் என்பதிற்கு பதிலாக,படிக்காசுப்புலவன் என்று இருக்க வேண்டுமல்லவா? அல்லது மரியாதையுடன் அழைப்பதற்கும் பன்மையில் கூறுவதற்காகவும் புலவர் என்று உபயோகப்படுத்துகிறோமா ? -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 09:14, 28 மே 2012 (UTC)

அவர்கள், மாணவர்கள், சென்றார்கள், வந்தார்கள் என்ற சொல்லாட்சியெல்லாம் தவறு தான். குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பது போல் முற்றிலும் பிழைகள் இல்லாமல் எழுதுவது இக்காலத்தில் கடினமான ஒன்றே. --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 09:21, 28 மே 2012 (UTC) 👍 விருப்பம் -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 09:38, 28 மே 2012 (UTC)

தினேஷ்குமார், புலவர், புலவர்கள் பிரச்சினை வேறு. ஆனால் இக்கட்டுரையின் நாயகர்கள் இரட்டைப்புலவர் (ஒருவருமல்ல, இருவருமல்ல) என்றே அழைக்கப்பட்டனர். அவர்களைப் பிரிக்க முடியாது. மேலும் கார்த்திகேயன் தந்துள்ள விளக்கத்தையும் பொதுவாக ஏற்றுக் கொள்ளலாம்.--Kanags \உரையாடுக 09:27, 28 மே 2012 (UTC)

விளக்கத்திற்கு நன்றி! -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 09:38, 28 மே 2012 (UTC)