உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:ஆமணக்குக் குடும்பம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காப்புரிமை ஐயமுள்ள தரவுகள்[தொகு]

தோற்றம்[தொகு]

வளரியல்பு[தொகு]

இக்குடும்பம் அதிக அளவு ஓராண்டு சிறு செடிகளைக் கொண்டுள்ளது. (எ.கா. ஃபில்லாந்தஸ் அமாரசு) அல்லது புதர் செடிகள் (எ.கா. ரிசினஸ் கம்யூனிஸ்) அல்லது மரங்கள் (எ.கா. ஃபில்லாந்தஸ் எம்பிளிக்கா). 'யூஃபோர்பியா'வின் பலச் சிற்றினங்களின் தண்டு ஒளிச்சேர்க்கையை மேற்கொள்ள உருமாற்றம் அடைந்துள்ளது, இத்தகைய உருமாற்றம் கிளாடோடு எனப்படும், இது காக்டஸ் தாவரங்களை ஒத்திருக்கும், எ.கா. யூ, திருக்கள்ளி மற்றும் யூ, ஆண்டிகோரம் (சதுரகள்ளி). இக்குடும்பத் தாவரங்கள். உடலப்புற பண்புகளிலும். இனப்பெருக்கப் பண்புகளிலும் பலவாறு மாறுபட்டுக் காணப்படுகின்றன, எல்லாத் தாவரங்களிலும், பால் போன்ற நீர்மம் (நீர்ம ருலட்டக்ஸ் திரவம்) காணப்படும்.

வேர்[தொகு]

இதன் வேர்த்தொகுப்பானது, கிளைத்த ஆணிவேர்த் தொகுப்பு வகையாகும்.

தண்டு[தொகு]

நிலத்தின் மேல் காணப்படும் தண்டினை உடையது. நிமிர்ந்தது. அல்லது நிலம் படர்ந்த தண்டினை உடையது. (எ.கா. 'யூ.புரோசுட்ரேட்டா' உருளையானது, கிளைத்தது, கட்டைத் தன்மையுடையது அல்லது உட்குழியுடையது (எ.கா. 'யூ.திருக்கள்ளி') 'மர்ம லேட்டக்சு' காண்படுகிறது. (எ.கா. 'சட்ரோஃபா குர்கசு')

இலை[தொகு]

தனி இலை. இலையடிச் செதிலுடையது அல்லது செதிலற்றது. இலைக்காம்புடையது. மாற்றிலை அமைவு (எ.கா. ரிசினசு கம்யூனிசு). முழுமையானது. மடல்களையுடையது. மூன்று சிற்றிலைகளை, உடைய கூட்டிலை காணப்படுகிறது. (எ.கா 'இவியா பிரேசிலியன்சு') மற்றும் ஒரு நடுநரம்பு அல்லது பல நடுநரம்படைய வலைப்பின்னல் நரம்பமைவுடையது, இலையடிச் செதில்கள் இணையான முட்களாக மாறியுள்ளன. (எ,கா, யூ, ஸ்பிலன்டென்ஸ்) அல்லது முடிச் சுரப்பிகளாக மாறியுள்ளன. (எ.கா. ஜட்ரோஃபா குர்காஸ்) 'யூஃபோர்பியா' போன்ற வறண்ட நிலச் சிற்றினங்களில் இலைகள் குறுக்கமடைந்து அல்லது இல்லாமல் காணப்படும், (எ.கா. யூ. பல்சேரிமா - பால்பெருக்கி மரம்)

பூந்துணர்[தொகு]

'யூஃபோர்பியா'வின் சிறப்பு மஞ்சரி சையாத்தியம் ஆகும். கோப்பை வடிவ 'இன்வலுக்கர்' உள்ளது. குறுக்கம் அடைந்த பூந்துணர்(மஞ்சரி) அச்சு காணப்படுகிறது. 'சைமோஸ்' வகை அமைப்பில் ஒருபால் மலர்கள் காணப்படுகின்றன. ஒவ்வொரு சையாத்திய மஞ்சரியிலும். ஒரு பெண் மலரைச் சூழ்ந்து இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்மலர்கள் காணப்படும். ஒவ்வொரு மகரந்தத்தாளும், ஒரு ஆண்மலரைக் குறிக்கும். இந்த ஆண் மலர்கள், நடுவில் விலகிய அமைவு முறையில் அமைந்துள்ளன. பெண் மலரின் காம்பு நீண்டு அல்லது குறுகிக் காணப்படும். இது குறுகியிருந்தால். பெண் மலர் இன்வலுக்கரின் உட்புறத்திலும். நீண்டுயிருந்தால் பெண் மலர் இன்வலுக்கரின் வெளிப்புறத்திலும் காணப்படும். சையாத்தியம் பூந்துணரின் வெளிப்புறம் மது சுரப்பி ஒன்று உள்ளது. இக்குடும்பத் தாவரங்களில் பலதரப்பட்ட பூந்துணரிகள் காணப்படுகின்றன.

'யூஃபோர்பியேசி' தாவரங்களில் பலதரப்பட்ட மஞ்சரிகள் காணப்படுகின்றன. 'ரிசினசு கம்யுனிசு' தாவரத்தின் பூந்துணர் 'பானிக்கிள்' ஆகும். இதில் பல பெண் மலர்களும், பல ஆண்மலர்களும், 'ரெசிமோஸ்' மஞ்சரி அமைப்பு முறையில் அமைந்துள்ளன. பெண் மலர்கள் உச்சியிலும், ஆண் மலர்கள் அடிப்பகுதியிலும் காணப்படுகின்றன. 'குரோட்டன் ஸ்பார்சிஃபுளோரஸ்' (எலி ஆமணக்கு) தாவரத்தின் மஞ்சரி தனித்த 'ரெசிமோஸ்' ஆகும். 'அக்காலிஃபா இன்டிகா' (குப்பைமேனி) தாவரத்தில் இது 'கேட்கின்' என அழைக்கப்படும். 'ஃபில்லாந்தஸ் அமாரசு' தாவரத்தில் ஆண் மற்றும் பெண் மலர்கள் தனித்து இலைக் கோணத்தில் காணப்படும்.

மலர்கள்[தொகு]

பூவடிச் செதிலுடையவை. பூக்காம்புச் செதிலற்றவை. பூக்காம்புடையது. ஒசிபநுடி மலர்கள். ஓரில்லம் அல்லது ஈரில்லம் உடையவை. முழுமையற்றவை.சூலக மேல் மலர். 'யூஃபோர்பியாயிடி' மகரந்தத்தாள் ஆண் மலரையும், சூலகம் பெண்மலரையும் குறிக்கும்.

வட்டங்கள்[தொகு]

பூவிதழ் வட்டம்[தொகு]

பூவிதழ் வட்டம் என்பது முக்கியமாக அல்லி வட்டத்தையும். புல்லிவட்டத்தையும் குறிக்கிறது. 'குரோட்டன் ஸ்பார்சிஃபுளோரஸ்' தாவரத்தில், ஆண் மலர்கள் இரு பூவிதழ் வட்டங்களையும், பெண் மலர்கள் ஒரு பூவிதழ் வட்டத்தையும் உடையது. 'யூஃபோர்பியா' தாவரத்தில். ஆண் மற்றும் பெண் மலர்கள் இரண்டுமே பூவிதழ்கள் அற்றவையாக இருக்கின்றன. 'ஃபில்லாந்தசு அமாரசு' தாவர மலர்கள் தனித்த பூவிதழ்களையும், 'ரிசினசு கம்யூனிசு' தாவர மலர்கள் இணைந்த பூவிதழ்களையும் கொண்டுள்ளன.

மகரந்தத்தாள் வட்டம்[தொகு]

ஒன்று முதல் பல மகரந்தத்தாள்களைக் கொண்டவை. தனித்தவை அல்லது இணைந்தவை. ' ரிசினஸ் கம்யூனிஸ்' தாவரமலரின் மகரந்தத்தாள்கள் பல கற்றையாலானது. அதோடு, மகரந்தக் கம்பிகள் கிளைத்துள்ளன. கிளைகள் இணைந்து பல கற்றைகளாக உள்ளன. மகரந்தப்பைகள் இரு அறைகளைய உடையன ஆகும். ஆண் மலர்களில், முதிர்ச்சியடையாத மலட்டு சூலகங்கள் உள்ளன.

சூலக வட்டம்[தொகு]

  • சூலகம் : மேல் மட்ட சூற்பை. மூன்று சூலக இலைகளையுடையது. இணைந்த சூலக இலைகள். மூன்று சூலக அறைகளையுடையது, ஒவ்வொரு சூலக அறையிலும் ஒன்று அல்லது இரண்டு சூல்கள் அச்சு சூல் ஒட்டு முறையில் உள்ளன. சூலகம் குறிப்பாக மூன்று மடல்களையுடையது, மூன்று சூல் தண்டுகள் உள்ளன. ஒவ்வொன்றும், இரண்டாகக் கிளைத்துள்ளது.
  • கனி : பெரும்பாலும் பிளவுக்கனிஅல்லது 'ட்ரூப்' வகையாகும். 'ரிசினசு கம்யூனிசு' தாவரத்தில் 'ரெக்மா' வகைக் கனியானது பிளவுற்று, ஒற்றை விதையைக் கொண்டு, மூன்று 'காக்கசு'களாக அமைந்துள்ளது.
  • விதை : இதன் விதைகள் கருவூண் உடையனவாக உள்ளது.

ஊடகங்கள்[தொகு]

பொருளாதாரப் பயன்கள்[தொகு]

உணவுத் தாவரங்கள்[தொகு]

'மானிஃஆட் எசுகுலெண்டா' (மரவள்ளி) தாவரத்தின் கிழங்கு வேர் 'ஸ்டார்ச்சு' நிறைந்த உணவு வகையாகும். சதைப்பற்றுள்ள 'ஃபில்லாந்தஸ் எம்பிளிக்கா' (நெல்லி) தாவரக் கனிகள் உயிர்சத்து சி அதிகமுடையவை. உணவாகவும் ஊறுகாய் போடவும் பயன்படுகின்றன.

எண்ணெய்த் தாவரங்கள்[தொகு]

'ரிசினஸ் கம்யூனிசு' (ஆமணக்கு) தாவரத்தின் விதைகளிலிருந்து பிரித்தெடுக்கப்படும் ஆமணக்கு எண்ணெய் இயந்திரங்களுக்கு உயவு எண்ணெய் ஆகவும். சமையலுக்கும் மற்றும் வயிற்றுப் போக்கினை தூண்டும் மருந்தாகவும் பயன்படுகிறது, 'சட்ரோஃபா குர்காசு' (காட்டு ஆமணக்கு) தாவரத்தின் விதைகளிலிருந்து பிரித்தெடுக்கப்படும், காட்டாமணக்கு எண்ணெய் வயிற்றுப் போக்கினை தூண்டும் மருந்தாகவும். தோல் வியாதிகளை குணப்படுத்தவும் மற்றும் 'பயோடீசல்' என்ற ஊர்திகளுக்கான எரிபொருள் எண்ணெய் தயாரிக்கவும் பயன்படுகிறது.

மருத்துவத் தாவரங்கள்[தொகு]

'ஃபில்லாந்தஸ் அமாரசு'(கீழாநெல்லி) என்ற முழுத் தாவரமும் மஞ்சட்காமாலையை குணப்படுத்தப் பயன்படுகிறது. 'சட்ரோஃபா காசிஃபோனியா' தாவரத்தின் இலைகள் மற்றும் வேர்கள் பாம்புக் கடிக்கும் மற்றும் தொழு நோய்க்கும் மருந்தாகப் பயன்படுகின்றன.

இரப்பர் தாவரங்கள்[தொகு]

உலகில் உற்பத்தியாகும் மொத்த இயற்கை இரப்பரில் 98% மேற்பட்ட இரப்பர். 'இவியா பிரேசிலியன்சிசு' (பாரா இரப்பர்) மற்றும் 'மானிஃஆட் கிளாசியோவி' (மணிக்கோபா இரப்பர்) தாவரங்களின் கெட்டியாக்கப்பட்ட 'லேட்டக்சில் ' இருந்து பெறப்படுகிறது.

அலங்காரத் தாவரங்கள்[தொகு]

'யூஃபோர்பியா பல்சேரிமா', 'கோடியம் வேரிகேட்டம்' (தோட்டத்தின் குரோட்டன்) மற்றும் 'யூஃபோர்பியா திருக்கள்ளி' (பால் புதர்) போன்றத் தாவரங்கள் அலங்காரத்திற்காக தோட்டங்களில் வளர்க்கப்படுகின்றன.