பேச்சு:ஆந்தரே கெய்ம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இவருடைய பெயரை ஆந்தரே கெய்ம் என்று எழுதினால் உருசிய ஒலிக்கு நெருக்கமாக இருக்கும். சிறீதரன் கனகு சரிபார்த்துச் சொல்ல சேண்டுகிறேன். உருசிய மொழி Андрей Гейм. உருசிய மொழியில் ஆந்தரே என்று மெலிந்துதான் ஒலிக்கின்றார்கள் (நான் கேட்ட வரை). --செல்வா 20:18, 5 அக்டோபர் 2010 (UTC)

ஆந்தரே கெய்ம் ஏற்கக்கூடியதே. கெய்ம் தமிழில் கெயிம் என்றல்லவா எழுதப்பட வேண்டும். ஆந்திரே கெயிம் கூடுதல் பொருத்தம்.--Kanags \உரையாடுக 10:33, 6 அக்டோபர் 2010 (UTC)
சிறீதரன், வெகு அரிதாகத் தமிழில் 'ய்ம்' மெய்யொலிக்கூட்டம் வரும். -- சுந்தர் \பேச்சு 10:38, 6 அக்டோபர் 2010 (UTC)
முதலில் சிறீதரன் கனகுக்கு ஒலிப்பை சரிபார்த்துச் சொன்னதற்கு நன்றி. ஆம் சுந்தர் சொன்னவாறு தமிழில் -ய்ம்- வரும் (ஆனால் சற்று அரிதுதான்). மெய்ம்மயக்கம் என்னும் சொல்லிலேயே -ய்ம்- கூட்டு வருவதைப் பார்க்கலாம். தொல்காப்பிய எழுத்து அதிகாரத்தில் 48 ஆவது நூற்பா "ய ர ழ என்னும் மூன்றும் முன் ஒற்றக் க ச த ப ங ஞ ந ம ஊர் ஒற்று ஆகும்" என்று கூறுகின்றது. இங்கே "முன்" என்பது இடமிருந்து வலமாகப் படிக்கும் பொழுது "அடுத்து" வருவது ("முன்னே நிற்பது அல்லது வருவது"). ஆகவே, -ய்ம்- என வரும். வாழ்க்கை என்பதில் -ழ்க்- வருவது போல மகிழ்ச்சி என்பதில் -ழ்ச்- வருவது போல, மெய்ம்மயக்கம் போன்றவற்றில் -ய்ம்- வருவது கூடும்.--செல்வா 12:29, 6 அக்டோபர் 2010 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஆந்தரே_கெய்ம்&oldid=607121" இருந்து மீள்விக்கப்பட்டது