பேச்சு:அறிவியல் தமிழ் எழுத்தாளர்களின் பட்டியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எத் துறையில் ஒரு எழுத்தாளர் அதிக அல்லது முதன்மைப் பங்களிப்பை வழங்கி உள்ளாரோ, அவரை அத் துறையில் சேர்க்கலாம். பல துறைகளில் சம பங்களிப்பு வழங்கி இருந்தால் பல் துறை என்ற பகுப்பில் சேர்க்கலாம். இது எண்ணிக்கையை சரியாகக் கணிக்க உதவும். நன்றி. --Natkeeran (பேச்சு) 23:43, 28 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

வாழ்வியற்களஞ்சியம், அறிவியல் களஞ்சியம் கட்டுரையாளர்களையும் கணக்கில் கொண்டு பல்வேறு துறையறிஞர்கள் பட்டியலை விரிவு படுத்தல் நல்லது. இப்பட்டியல் அண்மை எழுத்தாளர்களைக் கருதக் காணோம். அறிவியல் தமிழுடன் தொடர்பில்லாத ஒருவர் கேள்விப்பட்டவர் பெயரைத் திரட்டியது போல உள்ளது.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 06:39, 1 மே 2015 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியாவில் பங்களிப்பவர்கள் கட்டாயம் அந்தந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும் என்ற அவசியம் எதுவுமில்லை. படிப்பறிவில்லாத ஒருவரும் பங்களிக்கலாம்.--Kanags \உரையாடுக 11:14, 28 சூலை 2016 (UTC)[பதிலளி]

அறிவியல் களஞ்சியத்திலும் வாழ்வியற் களஞ்சியத்திலும் துறைவல்லுனர் அல்லாதவரிடம் இருந்து கட்டுரை ஏதும் பெறப்படவில்லை. நான் அங்கு நான்காண்டுகள் பணிபுரிந்த பட்டறிவால் இதை உறுதிபடுத்துகிறேன். நான் பட்டியலில் சேர்த்த பெயர்களுக்கான கட்டுரைகளை எழுத தகவல்களைத் திரட்டி வருகிறேன். விரைவில் அவர்கள் பற்றிய கட்டுரைகளை எழுதி முடிப்பேன்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 07:30, 3 திசம்பர் 2017 (UTC)[பதிலளி]