உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:அந்திப்பன்னா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது ஈழத்தில் பாரை மீன் என்று அழைக்கப்படுகிறது என நினைக்கிறேன். ஒரு வேளை பாறை பாரையாக மருவியிருக்கலாம்.--Kanags 11:42, 30 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]

கனகு, நீங்கள் கூறுவது சரி. மலையாளத்தில் "பார" என்றுதான் உள்ளது. தமிழில் நான் கேட்டிருக்கிறேனேயொழிய இப்பெயரைப் படித்ததில்லை. -- Sundar \பேச்சு 11:54, 30 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]
இங்குள்ள தவறைச் சரி செய்யும்படி கோரி தேவையான மேற்கோள்களுடன் மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன். -- Sundar \பேச்சு 03:33, 1 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]

அறிவியல் வகை[தொகு]

பாரை என்பது தமிழில் பல மீனினங்களுக்குப் பொதுவாக அமைந்துள்ளது தெரியாமல் அலெக்டிகசு பற்றிய இக்கட்டுரைக்கு இந்தத் தலைப்பை இட்டுவிட்டேன். இதை அலெக்டிகசு இண்டிகசு அல்லது அதற்கு ஈடான தமிழ் தலைப்பிற்கு நகர்த்த வேண்டும். மேலும் பாரை பற்றிய தனிக்கட்டுரை உருவாக்க வேண்டும். தவிர, நான் இணைத்துள்ள நிழல்படம் வேறு இனத்துக்கானது என்று ஒருவர் தெரிவித்துள்ளார். பார்க்க: [1] [2] இப்போது என்ன செய்வது? -- சுந்தர் \பேச்சு 05:30, 11 மார்ச் 2009 (UTC)

இதன் தலைப்பை அலெக்டிகசு இண்டிக்கசு என்று மாற்றுவதில் இடர் ஏதும் இல்லை. மக்களிடையே வழங்கும் "பொதுப் பெயர்" ("common name"), அறிவியற் பெயரில் இருந்து மாறுபட்டு இருப்பதும் இயற்கையே. அறிவியற் பெயர்கள் எல்லா மொழிகளிலும் ஒன்றாக இருக்க வேண்டும் என்னும் வழக்கம் மாறி வருகின்றது போல் தெரிகின்றது. அறிவியற் பெயர் என்று கூறப்படும் இலத்தீன் - கிரேக்க மொழி அடிப்படையான சொற்கள் இருந்தாலும் அவற்றுடன் சீரான தொடர்பு உள்ளவாறு அவ்வவ் மொழிகள் தங்களுக்குப் புரியுமாறு அறிவியற் பெயர்களை செய்துகொள்கிறார்கள் (எ. கா. டாய்ட்சு), நாமும் இயன்றவிடங்களில் அவ்வாறு செய்வது நல்லது. Alectis indica (Rüppell, 1830) என்பதை தமிழில் ஃஅந்தே பன்னா என்பதாக இங்கு கொடுத்துள்ளார்கள். முதற்சொல் ஃஅந்தே என்பது தமிழ் போலவே இல்லை. தெலுங்கில் Gurrah-parah గుర్ర పరా என்பதால் இதனை குதிரைப் பாரை என்று தமிழில் வழங்குவாரோ என நினைத்துத் தேடினால் ஏதும் கிடைக்கவில்லை. மலையாளத்தில் பாரா. தமிழ் மீனவர்களின் துணையுடன் மீனையும் அதற்கான தமிழ்ப்பெயரையும் அறிய முடியும், ஆனால், அறிவியற் பெயரை மீனியலாளர்களைக் கொண்டுதான் அறிய முடியும். தமிழ் நாட்டில் உள்ள பல்கலைக்கழங்களில் இவை பற்றியெல்லாம் நிறைய செய்திகள் இருக்க வேண்டும். கார்த்திக்கிடம் கேட்டுப் பார்க்கலாம்.--செல்வா 16:15, 11 மார்ச் 2009 (UTC)
இதற்கிடையே இதற்கு பாரை என்ற தமிழ்ப்பெயர் இருப்பதாக இங்கு கண்டு, ஆர்வத்துடன் நோக்கியதில் அது நான் அளித்த தகவலின்படி சேர்க்கப்பட்டுள்ளது என்று அறிந்தேன். அதனால் இதை ஒரு சான்றாகக் கொள்ள முடியாது. மீன்வளக் கல்லூரியில் என் உறவினர் பணிபுரிகிறார், தற்போது விடுப்பில் உள்ளார். பணியில் சேர்ந்ததும் பேராசிரியர்கள் யாரிடமாவது கேட்டறிந்து சொல்லக் கேட்கிறேன். -- சுந்தர் \பேச்சு 16:40, 11 மார்ச் 2009 (UTC)
ஒருவழியாக இந்த மீனுக்கான சரியான சிறப்புப் பெயரை ஒரு ஆய்விதழில் கண்டு தலைப்பை மாற்றியுள்ளேன். அந்தக் கட்டுரையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மீன்களுக்கும் பெயர்கள் உள்ளன! -- சுந்தர் \பேச்சு 15:24, 23 பெப்ரவரி 2012 (UTC)
மிகப் பயனுடைய தொடுப்பு சுந்தர், மிக்க நன்றி. 3 ஆண்டுகளுக்குப் பின் இப்பக்கத்தை இப்பொழுதுதான் மீண்டும் பார்க்கின்றேன். பாரை (இடையின ர) என்பது சரியான சொல் (பாறை என்பது முற்றிலும் வேறான சொல்). சுந்தர், அவை தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பெயரும் அல்ல என்று நினைக்கின்றேன்! நான் சரிபார்த்து பின்னர் எழுதுகின்றேன். --செல்வா 16:23, 23 பெப்ரவரி 2012 (UTC)
நன்றி செல்வா. பல மீன்களுக்கான பெயர் தரப்படவில்லை என்பதை இப்போதுதான் பார்த்தேன். ஒரு கட்டுரையிலேயே இவ்வளவு கிடைத்துள்ளது என்றால் நூல்களில் இன்னும் பல கிடைக்கும். அவற்றைப் பட்டியலிட வேண்டும். -- சுந்தர் \பேச்சு 16:33, 23 பெப்ரவரி 2012 (UTC)

Threadfin என்றால் இழை போன்ற துடுப்புடைய மீன்கள் என்று பொருள். எனவே Indian Threadfin என்பதை இந்திய இழைத்துடுப்பு மீன் என்று கொள்ளலாம். எனவே இக்கட்டுரையின் தலைப்பை மாற்றியுள்ளேன். இதில் ஏதேனும் மாற்றுக்கருத்து உள்ளதா?Varunkumar19 (பேச்சு) 02:15, 4 பெப்ரவரி 2019 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அந்திப்பன்னா&oldid=3745776" இலிருந்து மீள்விக்கப்பட்டது