பேச்சு:அண்டவெளி புழுத்துளை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கட்டுரை வெவ்வேறு தலைப்புகளில் பகர்த்து எழுதக்கூடிய பல கட்டுரைப் பொருள்களை கொண்டுள்ளது. ஆயினும் அண்டவெளி புழுத்துளை தலைப்புடன் பெரிதும் தொடர்புறவில்லை. இது பற்றி உரையாடவும்.--சஞ்சீவி சிவகுமார் 15:42, 29 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

ஆம்.இதைத் துப்பரவு செய்வதைக் காட்டிலும் புதியதாக உருவாக்கலாம்.:) காப்புரிமைக் கொள்கையையும் மீறியிருக்குமோ என்று சந்தேகப்படக்கூடியவாறு உள்ளது. --செந்தி--ஃ உரையாடுக ஃ-- 15:59, 29 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]
செந்தி, காப்புரிமை மீறியுள்ளதாகவே தெரிகிறது. நாளைக்குள் யாரும் மறுக்காவிட்டால் நீக்கிவிடலாம். -- சுந்தர் \பேச்சு 16:20, 29 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]
இந்தக் கட்டுரை [1] என்ற தளத்தில் உள்ளது. காப்புரிமை மீறப்பட்டுள்ளது. வ. ந. கிரிதரன் இக்கட்டுரையை எழுதியுள்ளார். கட்டுரைத் தலைப்பு நன்றாக உள்ளது. இதனைக் குறுங்கட்டுரையாக ஆக்கமுடியுமானால் நல்லது.--Kanags \உரையாடுக 20:18, 29 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]
உள்ளடக்கம் நீக்கப்படுகிறது.புதிய குறுங்கட்டுரையாக்க முயலுகிறேன்.--சஞ்சீவி சிவகுமார் 09:36, 30 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]
நன்றி சிறீதரன், சஞ்சீவி. wormhole என்பதைத் தமிழில் அப்படியே மொழிபெயர்க்க வேண்டுமா தெரியவில்லை. அந்தப் பெயர் ஏற்படக் காரணம் என்ன என்று அறிந்து மொழிபெயர்க்கலாம். சிறு துளையைக் குறிக்கிறது என்றால் சிறுதுளை என்றே கூடச் சொல்லலாம். இந்தப் பெயரே இருக்கட்டும் என்றாலும் எனக்கு உகப்பே. -- சுந்தர் \பேச்சு 07:29, 1 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]