உள்ளடக்கத்துக்குச் செல்

பெர்குசன், மிசௌரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெர்குசன், மிசௌரி
குறிக்கோளுரை: பெருமிதப் பழமை. வாய்ப்புமிக்க வருங்காலம்.
மிசூரியின் (வலது) செயின்ட். லூயி கவுன்ட்டியில் (இடது) அமைவிடம்
மிசூரியின் (வலது) செயின்ட். லூயி கவுன்ட்டியில் (இடது) அமைவிடம்
நாடுஅமெரிக்க ஐக்கிய நாடு
மாநிலம்மிசூரி
கவுன்ட்டிசெயின்ட். லூயி
நகராட்சியானது1894
அரசு
 • மேயர்ஜேம்சு நோல்சு III
 • நகர மேலாளர்ஜான் ஷா
பரப்பளவு
 • மொத்தம்6.20 sq mi (16.06 km2)
 • நிலம்6.19 sq mi (16.03 km2)
 • நீர்0.01 sq mi (0.03 km2)
ஏற்றம்502 ft (153 m)
மக்கள்தொகை
 (2010)[3]
 • மொத்தம்21,203
 • மதிப்பீடு 
(2013)[4]
21,111
 • அடர்த்தி3,400/sq mi (1,300/km2)
நேர வலயம்ஒசநே-6 (நடுவண் நேர வலயம்)
 • கோடை (பசேநே)ஒசநே-5 (CDT)
சிப் குறியீடு
63135
அழைப்புப் பகுதி குறியீடு314
பிப்சு குறியீடு29-23986 [2]
கினிசு சிறப்புக்கூறு அடையாளம்0756046 [2]
இணையதளம்fergusoncity.com

பெர்குசன் (Ferguson) ஐக்கிய அமெரிக்க மாநிலம் மிசூரியின் செயின்ட். லூயி கவுன்ட்டியில் அமைந்துள்ள ஓர் நகரமாகும்.[2] 2010ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இதன் மக்கள்தொகை 21,203 ஆகும்.[5]

அமெரிக்காவின் மிகப்பெரும் மின்னாற்றல் கருவிகளை தயாரிக்கும், பார்ச்சூன் 500, நிறுவனங்களில் ஒன்றான எமெர்சன் எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தலைமையகம் இங்கு அமைந்துள்ளது.

புவியியல்

[தொகு]

பெர்குசன் ஆட்கூறு 38°44′39″N 90°18′19″W / 38.74417°N 90.30528°W / 38.74417; -90.30528 (38.744217, -90.305391)அமைந்துள்ளது.[2] ஐக்கிய அமெரிக்காவின் கணக்கெடுப்புத் துறையின்படி நகரத்தின் பரப்பளவு 6.20 சதுர மைல்கள் (16.06 km2) ஆகும். இதில் 6.19 சதுர மைல்கள் (16.03 km2) நிலப்பரப்பும் 0.01 சதுர மைல்கள் (0.03 km2) நீர்ப்பரப்பும் ஆகும்.[1]

வரலாறு

[தொகு]

1855இல் வில்லியம் பி. பெர்குசன் என்பவர் வாபாஷ் இருப்புத்தொடர் நிறுவனத்திற்கு தமது பெயரில் தொடர்வண்டி நிலையம் அமைக்கவும் தொடர்வண்டி பணியகத்தை நிறுவவும் 10 ஏக்கர்கள் (4.0 ha) நிலத்தை அளித்தார்.[6][7] எனவே இந்தப் பணியகத்தை அடுத்து உருவான குடியேற்றம் பெர்குசன் தொடர்வண்டி நிலையம் என அழைக்கப்பட்டது.[8] 1894இல் இது நகரமாக அங்கீகரிக்கப்பட்டது.[9]

2014 துப்பாக்கிச் சூடு நிகழ்வு

[தொகு]

ஆகத்து 9, 2014 அன்று மைக்கேல் பிரவுன் என்ற ஆயுதமற்ற 18 அகவை இளைஞர், டேரன் வில்சன் என்ற காவல்துறை அதிகாரி என்பவரால் துப்பாக்கியால் சுடப்பட்ட உயிரிழந்தார்.[10][11] இந்நிகழ்வு செயின்ட் லூயிஸ் (மிசோரி) பகுதிகளில் மிகுந்த எதிர்ப்பையும் கலவரங்களையும் உண்டாக்கியது; தேசிய அளவிலும் இந்த நிகழ்வை குறித்த புலனாய்விற்கு அழைப்புகள் விடுக்கப்பட்டன.[12] ஆகத்து 11இல் புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகம் (FBI) இணையாக குடியுரிமை புலனாய்வை மேற்கொண்டது;[13] தலைமை வழக்கறிஞரான எரிக் ஹோல்டரும் நீதித்துறை இந்த நிகழ்வுகளை கண்காணித்து வருமாறு பணித்தார்.[14]

ஆகத்து 10 அன்று உள்ளூர் கால் நிலையம் 150 அதிகாரிகளை கலவரங்களை எதிர்கொள்ளும் தயார்நிலையில் கூட்டியது.[15] எதிர்ப்புக் கூட்டம் வணிக நிலையங்களை சூறையாடியும் வண்டிகளை சேதப்படுத்தியும் கலவரத்தை தொடர்ந்தது. இதனால் நகரத்தின் பல பகுதிகளுக்குச் செல்ல காவல்துறை தடை விதித்தது.[16] அடுத்த நாள் கண்ணீர் புகை குண்டுகளையும் இரப்பர் குண்டுகளையும் பயன்படுத்தி கூட்டத்தை கலைத்தது.[17] சில அறிக்கைகளின்படி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டனர்.[18][19] ஆகத்து 14 அன்று மிசூரி ஆளுநர் ஜே நிக்சன் நிலைக் கட்டுக்கடங்காது போவதாகவும் நிலைமையைச் சமாளிக்க[20] மிசூரி நெருஞ்சாலை கண்காணிப்புப் படையினரும் பாதுகாவல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவதாக அறிவித்தார்.[21]

மேற்சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 "US Gazetteer files 2010". United States Census Bureau. பார்க்கப்பட்ட நாள் 2012-07-08.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 Geographic Names Information System (GNIS) details for Ferguson, Missouri; United States Geological Survey (USGS); October 24, 1980.
  3. "American FactFinder". United States Census Bureau. பார்க்கப்பட்ட நாள் 2012-07-08.
  4. "Population Estimates". United States Census Bureau. பார்க்கப்பட்ட நாள் 2014-08-16.
  5. "Race, Hispanic or Latino, Age, and Housing Occupancy: 2010 Census Redistricting Data (Public Law 94-171) Summary File (QT-PL), Ferguson city, Missouri". U.S. Census Bureau, American FactFinder 2. பார்க்கப்பட்ட நாள் October 21, 2011.
  6. Fox, Tim (1995). Where We Live: A Guide to St. Louis Communities. Missouri History Museum. p. 186. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-883982-12-6.
  7. Bryan, William Smith; Rose, Robert; Elwang, William Wilson (1876). A History of the Pioneer Families of Missouri: With Numerous Sketches, Anecdotes, Adventures, Etc., Relating to Early Days in Missouri. Also the Lives of Daniel Boone and the Celebrated Indian Chief Black Hawk, with Numerous Biographies and Histories of Primitive Institutions. Lucas brothers. p. 167.
  8. "City History". City of Ferguson, MO. பார்க்கப்பட்ட நாள் 13 August 2014.
  9. "Ferguson Missouri". Aboutstlouis.com. பார்க்கப்பட்ட நாள் 13 August 2014.
  10. "Ferguson Chief Names Darren Wilson as Cop Who Shot Michael Brown". NBCNews.com. 15 August 2014. பார்க்கப்பட்ட நாள் 15 August 2014.
  11. Berman, Mark; Lowery, Wesley (15 August 2014). "Ferguson police call Michael Brown a robbery suspect, identify Darren Wilson as officer who shot him". பார்க்கப்பட்ட நாள் 15 August 2014.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
  12. Lind, Dara (12 August 2014). "Outrage in Ferguson after police shooting of unarmed teenager Michael Brown". Vox Media. பார்க்கப்பட்ட நாள் 12 August 2014.
  13. Berman, Mark (August 11, 2014). "FBI opens investigation into shooting of Michael Brown". The Washington Post. http://www.washingtonpost.com/news/post-nation/wp/2014/08/11/fbi-opens-investigation-into-shooting-of-michael-brown/. பார்த்த நாள்: August 11, 2014. 
  14. "Killing of black Missouri man, Michael Brown, draws criticism". Newsday. அசோசியேட்டட் பிரெசு. August 10, 2014 இம் மூலத்தில் இருந்து ஆகஸ்ட் 12, 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140812225959/http://www.newsday.com/news/nation/michael-brown-s-fatal-shooting-by-police-sparks-outcry-1.9018258. பார்த்த நாள்: August 11, 2014. 
  15. "Protests near St. Louis continue for slain teen after riot, arrests". Chicago Tribune (சிகாகோ). August 11, 2014 இம் மூலத்தில் இருந்து ஆகஸ்ட் 25, 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140825195539/http://www.chicagotribune.com/news/nationworld/chi-missouri-police-shooting-20140811-story.html. பார்த்த நாள்: August 11, 2014. 
  16. Yang, John (August 10, 2014). "Looting Erupts After Vigil for Slain Missouri Teen Michael Brown". NBC News. http://www.nbcnews.com/news/us-news/looting-erupts-after-vigil-slain-missouri-teen-michael-brown-n177426. பார்த்த நாள்: August 11, 2014. 
  17. Monday, August 11, 2014 8:13 am. "West Florissant explodes in protest of police shooting, more than 30 arrests - St. Louis American: Local News". Stlamerican.com. பார்க்கப்பட்ட நாள் 2014-08-12.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link) CS1 maint: numeric names: authors list (link)
  18. Fantz, Ashley; Howell, George (August 11, 2014). "Protesters fill streets after Michael Brown shooting". CNN. http://www.cnn.com/2014/08/11/us/missouri-teen-shooting/. பார்த்த நாள்: August 11, 2014. 
  19. Scher Zagier, Alan. "Police, protesters again clash outside St. Louis". Star-telegram.com (Ft. Worth). அசோசியேட்டட் பிரெசு. பார்க்கப்பட்ட நாள் 2014-08-12. {{cite web}}: Cite has empty unknown parameter: |1= (help)
  20. "Michael Brown killing: Jay Nixon promises 'operational shifts'", BBC, August 14, 2014.
  21. Pearson, Michael, and Ana Cabrera, "Missouri governor: Highway patrol will direct security in Ferguson", CNN, August 14, 2014

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெர்குசன்,_மிசௌரி&oldid=3844595" இலிருந்து மீள்விக்கப்பட்டது