பெருந் தடுப்புப் பவளத்திட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பெரும் தடுப்புப் பவளத்திட்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆள்கூற்று: 18°17′10″S 147°42′00″E / 18.28611°S 147.70000°E / -18.28611; 147.70000

யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
பெரும் தடுப்புப் பவளத்திட்டு
The Great Barrier Reef
Name as inscribed on the World Heritage List
The Great Barrier Reef lies off the coast of Queensland in northeast Australia
வகை இயற்கை
ஒப்பளவு vii, viii, ix, x
உசாத்துணை 154
UNESCO region ஆசியா-பசிபிக்
பொறிப்பு வரலாறு
பொறிப்பு 1981 (5வது தொடர்)

பெரும் தடுப்புப் பவளத்திட்டு (The Great Barrier Reef) உலகின் மிகப் பெரிய பவளப்பாறைத் திட்டுத் தொகுதியாகும். இது 2,900 தனித் திட்டுக்களையும், 2,600 கிமீ தூரம் நீண்டிருக்கும் 900 தீவுகளையும் கொண்டு ஏறத்தாள 344,400 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்துள்ளது. இது வடகிழக்கு ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து கரைக்கு அப்பால் பவளக் கடலில் (Coral Sea) அமைந்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் வடகீழ் கரையோரத்திற்கு அப்பால் பசுபிக் சமுத்திரத்தில் அமைந்துள்ள பெருந்தடுப்புபவளப் பாறையானது, புவியில் வாழும் அங்கிப்பிரிவொன்றால் உருவாக்கப்பட்டிருக்கின்றது. மிக எளிமையான கட்டமைப்பை உடைய பவளப்பாறைகள் விலங்குகளால் பல்லாயிரக்கணக்கான வருடங்களாக உருவாக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் இது 33,000 பவளப்பாறைகளையும் 300 பவளப் பாறை தீவுகளையும் கொண்டுள்ளது. இந்தப் பவளப்பாறை ஒரு சிக்கலான அமைப்பு முறையிலேயே உருவாகியுள்ளது.

பெரும் தடுப்புப் பவளத்திட்டு, உயிரினங்களால் உருவாக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய ஒற்றை அமைப்பாகும். இதனை விண்வெளியில் இருந்தும் பார்க்க முடியும். இந்தப் பவளத்திட்டு அமைப்பு பல கோடிக்கணக்கான நுண்ணிய உயிரினங்களால் அமைக்கப்பட்டவை. உயிரியற் பல்வகைமைப்பட்ட உயிரினங்களின் வாழ்விடமாக உள்ள பெரும் தடுப்புப் பவளத்திட்டு 1981 ஆம் ஆண்டில் உலக பாரம்பரியக் களமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. சி.என்.என் (CNN) எனப்படும் ஆங்கில மொழித் தொலைக்காட்சிச் சேவை இதனை உலகின் ஏழு இயற்கை அதிசயங்களில் ஒன்றாகத் தெரிவு செய்துள்ளது. குயீன்ஸ்லாந்தின் தேசிய நம்பிக்கை நிறுவனம் (Queensland National Trust) இதனை மாநிலத்தின் அடையாளச் சின்னமாக அறிவித்துள்ளது.

இப் பவளத்திட்டின் பெரும் பகுதி, பெரும் தடுப்புப் பவளத்திட்டுக் கடல்சார் பூங்கா திட்டத்தினால் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அளவுக்கதிகமான மீன்பிடித்தல், சுற்றுலா போன்ற மனித நடவடிக்கைகளால் இப் பவளத்திட்டு பாதிக்கப்படுவது குறைக்கப்படுகிறது. இப் பவளத்திட்டுக்களுக்கும், அதன் சூழ்நிலை மண்டலத்துக்கும் இருக்கக்கூடிய இன்னொரு தாக்கம், இப்பகுதியில் வந்து விழும் நீரின் தரம் ஆகும். அத்துடன், காலநிலை மாற்றங்களினால் ஏற்படும் பாரிய பவள வெளிறல், "முள்முடி நட்சத்திர மீன்களால்" ஏற்படும் தாக்கம் என்பனவும் குறிப்பிடத்தக்கவை.

அழிவு நிலை[தொகு]

கடலில் ஏற்படும் பல மாற்றங்களில் ஒன்றான வெப்பம் சூடாவதால் இந்த பவளப்பாறைத் திட்டானது அழிந்துவருவதாக பிபிசி தெரிவித்துள்ளது. [1]

புத்தக விவரணம்[தொகு]

  • Hopley, David; Smithers, Scott G.; Parnell, Kevin E. (2007). The geomorphology of the Great Barrier Reef: development, diversity, and change. Cambridge University Press. ISBN 0-521-85302-8.

மேலும் வாசிக்க[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

பொதுவகத்தில் Great Barrier Reef பற்றிய ஊடகங்கள்

மேற்கோள்கள்[தொகு]