உள்ளடக்கத்துக்குச் செல்

பெருகு சிவா ரெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெருகு சிவா ரெட்டி (Perugu Siva Reddy) இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற ஒரு கண் அறுவைச் சிகிச்சை நிபுணர் ஆவார்.

கல்வி

[தொகு]

சிவா ரெட்டி 1946ஆம் ஆண்டு தனது இளநிலை மருத்துவப் படிப்பை சென்னைப் பல்கலைக்கழகத்தில் படித்து முடித்தார். ஆந்திரப் பல்கலைக்கழகத்தில் 1952ஆம் ஆண்டு கண் மருத்துவத்தில் தன்னுடைய முதுநிலை மருத்துவப் பட்டத்தைப் பெற்றார். ஐதராபாத்தின் உசுமானியா மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து ரெட்டி பயிற்சி செய்யத் தொடங்கினார். மாரடைப்பு காரணமாக இறக்கும் வரை இவர் ஐதராபாத்தில் உள்ள சரோசினி தேவி கண் மருத்துவமனையின் இயக்குநராக பணியில் இருந்தார்.

1964 ஆம் ஆண்டில் சிவா ரெட்டி இந்தியாவின் முதல் கண் வங்கியான டி.எல். கபாடியா கண் வங்கியை நிறுவினார். பன்னாட்டு மாநாடுகளில் சுமார் 200 ஆய்வுக் கட்டுரைகளை இவர் வழங்கியுள்ளார். கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு குறிப்பாக ஏழைகளுக்கு மருத்துவ உதவி வழங்க 500 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட கண் முகாம்களை நடத்தினார். கண்புரை நீக்க சிகிச்சையில் இவரது வேகம் மற்றும் திறமை ஆகியவற்றால் நன்கு அறியப்பட்டார்.

விருதுகள்

[தொகு]

1971ஆம் ஆண்டு இந்திய அரசின் நான்காவது உயர் குடிமகன் விருதான பத்மசிறீ விருதும் 1977ஆம் ஆண்டு பத்மபூசண் விருதும் இவருக்கு வழங்கப்பட்டன[1]. இந்தியாவில் மருத்துவ துறையினருக்காக வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான பிதான் சந்திரா ராய் விருதை இந்திய மருத்துவக் கழகம் பெருகு சிவா ரெட்டிக்கு 1982ஆம் ஆண்டு வழங்கி சிறப்பித்தது[2]. 1990ஆம் ஆண்டில் கர்னூலில் நிறுவப்பட்ட அரசு கண் மருத்துவமனைக்கு இவரது பெயர் சூட்டப்பட்டது. பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி சிரஞ்சீவி கண் வங்கியின் தொடக்கம் மற்றும் செயல்பாடுகளில் ரெட்டியின் ஆலோசனையையும் உதவியையும் நாடினார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Padma Shri" (PDF). Padma Shri. 2015. Archived from the original (PDF) on 15 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 11 November 2014.
  2. "Dr. B. C. Roy Award Recipients". Genie GK. 2015. பார்க்கப்பட்ட நாள் 12 June 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெருகு_சிவா_ரெட்டி&oldid=3565048" இலிருந்து மீள்விக்கப்பட்டது