பெரிய கோட்டான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பெரிய கோட்டான்
Eurasian Curlew.jpg
உயிரியல் வகைப்பாடு e
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வரிசை: சரத்ரீபார்மசு
குடும்பம்: Scolopacidae
பேரினம்: Numenius
இனம்: N. arquata
இருசொற் பெயரீடு
Numenius arquata
(Linnaeus, 1758)
Eurasian Curlew Range.png
Range of N. arquata      Year-Round Range     Summer Range     Winter Range
Curlew calls
வேறு பெயர்கள்
  • Scolopax Arquata Linnaeus, 1758

பெரிய கோட்டான் ஒரு கரையோரப்பறவையாகும் இது ஸ்கோலோபாசிடே குடும்பத்தை சார்ந்த கோட்டான்.

பெயர்கள்[தொகு]

தமிழில்  :பெரிய கோட்டான்

ஆங்கிலப்பெயர்  :Eurasian Curlew

அறிவியல் பெயர் : Numenius arquata [2]

உடலமைப்பு[தொகு]

58 செ.மீ. - மணல் பழுப்பு நிறம் கொண்ட உடலில் ஒரே சீரான செம்மஞ்சள் கோடுகளைக் கொண்டது. இதன் மார்பும் வயிறும் வெண்மையாகக் கருப்புக் கோடுகளைக் கொண்டது. ஒட்டு மொத்த தோற்றத்தில் முன்னதை ஒத்த இது உருவில் பெரியது. இதன் தலையில் உள்ள வெண்பட்டைகளைக் கொண்டும் கரும் பழுப்பாக இல்லாமல் மணல் பழுப்பான உடலில் நிறம் கொண்டும் இதனை எளிதில் வேறு படுத்தி அறியலாம்.

காணப்படும் பகுதிகள் ,உணவு[தொகு]

குளிர்காலத்தில் வலசை வரும் இதனை. கடற்கரை நெடுகிலும் உள்நாட்டில் நீர் நிலைகளிலும் ஆங்காங்கே காணலாம். வேடந்தாங்கலில் காணப்பட்ட குறிப்பு உள்ளது. பழக்க வழக்கங்கள் கோட்டானை ஒத்தன. எனினும் அதனைப் போலப் பெருங்குழுவாகத் திரிவதில்லை. தனித்தும் ஆறு வரையான சிறு குழுவாகவும் காணலாம். நெருங்கிப் பார்க்க இயலாதபடி அச்சங்கொண்டு பறந்து செல்லும் இயல்பினது. பறக்கும் போது கர்லூ கர்லூ எனக் குரல் கொடுக்கும் [3]

படங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Numenius arquata
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
Wikispecies-logo.svg
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:

மேற்கோள்கள்[தொகு]

  1. "Numenius arquata". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 26 November 2013.
  2. "பெரிய கோட்டான்". பார்த்த நாள் 31 அக்டோபர் 2017.
  3. தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம் பக்கம் எண்:46
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரிய_கோட்டான்&oldid=2900661" இருந்து மீள்விக்கப்பட்டது