பெரிய கருந்தலைக் கடற்காக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Ichthyaetus|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
பெரிய கருந்தலைக் கடற்காக்கை
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Ichthyaetus
இனம்:
இருசொற் பெயரீடு
Ichthyaetus ichthyaetus
(Pallas, 1773)
Range of I. ichthyaetus     Breeding      Non-breeding
வேறு பெயர்கள்

Larus ichthyaetus

பெரிய கருந்தலை கடற்காக்கை (Pallas's gull also known as the great black-headed gull, அறிவியல் பெயர் Ichthyaetus ichthyaetus) என்பது ஒரு பெரிய பறவை இனமாகும். பல கடற்காக்கை போலவே, இது பாரம்பரியமாக லாரஸ் பேரினத்தில் வைக்கப்பட்டடுள்ளது. இதன் அறிவியல் பெயர் பண்டைய கிரேக்க மொழியிலிருந்து வந்தது. இதன் அறிவியல் பெயரில் உள்ள Ichthyaetus இல் உள்ள ikhthus, என்பதற்கு "மீன்" மற்றும் aetos, என்பதற்கு "கழுகு" என்றும் பொருளாகும். [2]

பரவல்[தொகு]

கட்ச்சில்

இந்த இனம் தெற்கு உருசியாவிலிருந்து மங்கோலியா வரையிலான சதுப்பு நிலங்கள் மற்றும் தீவுகளில இனப்பெருக்கம் செய்கிறது. இது குளிர்காலத்தில் கிழக்கு நடுநிலக் கடல், அரேபியா, இந்தியா போன்ற பகுதிகளுக்கு வலசை போகிறது. இந்த கடற்காக்கை தரையில் கூடு கட்டி, இரண்டு முதல் நான்கு முட்டைகள் வரை இடும்.

இது மேற்கு ஐரோப்பாவில் தற்செயலாக சென்று அலைந்து திரியக்கூடியதாக மட்டுமே உள்ளது. இந்தியப் பெருங்கடலின் வெவ்வேறு பகுதிகளிலும், இதன் இயல்பான எல்லைக்கு தெற்கிலும், ஆப்பிரிக்காவின் வடக்கு மற்றும் கிழக்குக் கடற்கரைகளிலும் இந்த இனம் அலைந்து திரிகிறது. அங்கு ஆண்டுதோறும் ஒழுங்கற்ற அடிப்படையில் வருகிறது.

விளக்கம்[தொகு]

இது மிகப் பெரிய கடற்காகம் ஆகும். இது உலகின் மிகப்பெரிய கருந்தலைக் கடற்காக்கை ஆகும். இது பெரிய கருப்பு முதுகு கடற்காக்கை மற்றும் பளபளப்பான கடற்காக்கைக்கு அடுத்து உலகின் மூன்றாவது பெரிய கடற்காக்கை இனமாகும். இது 55–72 cm (22–28 அங்) நீளமும், 142 முதல் 170 cm (56 முதல் 67 அங்) இறக்கை அகலமும் கொண்டது. இதன் எடை 0.96–2.1 kg (2.1–4.6 lb) வரை மாறுபடும். ஆண் பறவைகளின் சராசரி எடை 1.6 kg (3.5 lb) என்றும், பெண் பறவைகளின் சராசரி எடை 1.22 kg (2.7 lb) என்றும் உள்ளது. அலகு 4.7 முதல் 7.3 cm (1.9 முதல் 2.9 அங்) நீளமும், கணுக்கால் 6.5 முதல் 8.4 cm (2.6 முதல் 3.3 அங்) நீளமும் உள்ளது. முதிர்ந்த பறவைகள் கோடைக்காலத்தில் ஐயுறத்தக்கத் தோற்றத்துடன் இருக்கும். ஏனெனில் இந்த அளவுள்ள வேறு எந்த பறவைக்கும் கருப்பு நிறத் தலை இல்லை. முதிர்ந்த பறவைகளுக்கு இறக்கைகளும் பின்புறமும் சாம்பல் நிறத்தில் இருக்கும். கால்கள் மஞ்சள் நிறமாகவும், அலகு ஆரஞ்சு மஞ்சள் நிறமாகவும் சிவப்பு முனையோடும் இருக்கும்.

கண்ணுக்கு மேலும் கீழுமாக இரண்டு வெள்ளை வளையங்கள் அழகு செய்யும். இதன் அழைப்பு உரத்த முரட்டுக் குரலாக இருக்கும். இளம் பறவைகளின் உடலின் மேற்பகுதி விரைவாக சாம்பல் நிறத்தை அடைகின்றன, ஆனால் அவை முதிர்ச்சி அடைய நான்கு ஆண்டுகள் ஆகும்.

சூழலியல்[தொகு]

இந்த பறவை பறக்கும்போது ஒலி எழுப்புவதாக உள்ளது. இது கருமுதுகுக் கடற்காக்கையின் அழைப்பை ஒத்திருக்கிறது. இவை தங்கள் கூட்டத்தில் சத்தமிடுபவையாக இருந்தாலும், இனப்பெருக்கம் செய்யும் போது பெரும்பாலும் அமைதியாக இருக்கின்றன.

இந்தப் பறவைகள் மீன்கள், ஓட்டுடைய கணுக்காலிகள், பூச்சிகள், சிறிய பாலூட்டிகள் போன்றவற்றை திருடித் தின்னும் பழக்கமுள்ளது.

ஆப்பிரிக்க-ஐரேவசிய வலசை போகும் நீர்ப்பறவைகளுக்கான பாதுகாப்பு ஒப்பந்தம் ( AEWA ) பொருந்தும் இனங்களில் இந்த கடற்காகமும் ஒன்றாகும்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ichthyaetus ichthyaetus
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன: