உள்ளடக்கத்துக்குச் செல்

பெரியாறு அயிரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரியாறு அயிரை
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
சிப்ரினிபார்மிசு
குடும்பம்:
பேரினம்:
திருவாங்கோரியா
இனம்:
தி. எலோங்கேட்டா
இருசொற் பெயரீடு
திருவாங்கோரியா எலோங்கேட்டா
பெதியகோடா & கோடெலட், 1994

பெரியாறு அயிரை எனும் திருவாங்கோரியா எலோங்கேட்டா (Travancoria elongata) அயிரை மீன் சிற்றினமாகும். மலையாளத்தில் இது நெடும் கல்நக்கி (മലയാളം: നെടും കൽനക്കി) என அழைக்கப்படுகிறது. பெரியாறு அயிரை அழிந்து வரும் ஒரு மீன் சிற்றினமாகும்.[2] நன்னீர் மீன்கள் சாலக்குடி ஆறு மற்றும் பெரியாற்றில் மட்டுமே காணப்படுகின்றன.[3] பாலிடோரிடே (ஆற்று அயிரை) குடும்பத்தினைச் சார்ந்தவை இந்த மீன்கள்.[4] இந்த மீன்கள் 11 சென்டிமீட்டர்கள் (4.3 அங்) நீளம் வரை வளரக்கூடியன. இந்த வகை மீன்களைப் பன்னாட்டுச் சந்தை தேவைக்கு ஏற்றுமதி செய்வதற்காக ஆறுகளிலிருந்து பெரிய அளவில் பிடிப்பதால், இதன் வாழ்வு அச்சுறுத்தலுக்குள்ளாகிறது. செம்பட்டியல் தரவு புத்தகத்தில் இவை அழிவின் விளிம்பில் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Ali, A.; Raghavan, R. (2011). "Travancoria elongata". IUCN Red List of Threatened Species 2011: e.T172320A6867198. doi:10.2305/IUCN.UK.2011-1.RLTS.T172320A6867198.en. https://www.iucnredlist.org/species/172320/6867198. பார்த்த நாள்: 20 November 2021. 
  2. Froese, Rainer and Pauly, Daniel, eds. (2021). "Travancoria elongata" in FishBase. August 2021 version.
  3. "(PDF) New records of the Endangered balitorid loach, Travancoria elongata Pethiyagoda & Kottelat 1994, from the Kerala part of the Western Ghats, India". ResearchGate (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-19.
  4. "ADW: Travancoria elongata: CLASSIFICATION". animaldiversity.org. பார்க்கப்பட்ட நாள் 2021-08-19.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரியாறு_அயிரை&oldid=4053461" இலிருந்து மீள்விக்கப்பட்டது