பெரியபிள்ளை
பெரிய பிள்ளை பண்டாரம், செகராசசேகரன் என அரியணைப் பெயர் கொண்டவர்களில் எட்டாவது ஆரியச் சக்கரவர்த்தியுமாகிய, யாழ்ப்பாண அரசன் ஆவான். இவனைக் குறித்து மிகக் குறைவான தகவல்களே ஆய்வாளர்களுக்குக் கிடைத்துள்ளன. காசி நயினாரைக் சூழ்ச்சியால் கொன்றபின், மன்னாரில் இருந்த போர்த்துக்கீசத் தளபதியால் இவன் மன்னன் ஆக்கப்பட்டவன். ஜார்ஜ் தெமேலோ என்னும் அத் தளபதி 1570 ஆம் ஆண்டு வரையிலேயே பதவியில் இருந்தவன் என்பதால், பெரிய பிள்ளையின் ஆட்சி 1570 ஆம் ஆண்டுக்கு முன்னரே தொடங்கிவிட்டது என்பது உறுதி. 1582 ஆம் ஆண்டில் அரசுக்கு உரிமையற்றவனான புவிராஜ பண்டாரம் என்பான் யாழ்ப்பாணத்தை ஆண்டது பற்றிய குறிப்புக்கள் வேறு மூலங்களில் காணப்படுவதால், பெரிய பிள்ளையின் ஆட்சி 1572 ஆம் ஆண்டுக்கு முன்னரே முடிந்து விட்டது என்பதும் தெரிகிறது.
இவை தவிர தற்காலத்தில் கிடைக்கும் போத்துக்கீசர் காலத் தகவல்களின்படி புவிராஜ பண்டாரத்தைத் தொடர்ந்து ஆட்சியில் இருந்த எதிர்மன்ன சிங்கன் பெரிய பிள்ளையின் மகன் ஆவான் என்பதும் தெரியவந்துள்ளது.
உசாத்துணைகள்
[தொகு]- ஞானப்பிரகாசர், சுவாமி., யாழ்ப்பாண வைபவ விமர்சனம்: தமிழரசர் உகம், ஏசியன் எஜுகேஷனல் சர்வீசஸ், புது டில்லி, 2003 (முதற் பதிப்பு 1928, அச்சுவேலி)
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]வெளியிணைப்பு
[தொகு]- யாழ்ப்பாண வைபவ விமர்சனம் பரணிடப்பட்டது 2007-09-27 at the வந்தவழி இயந்திரம் - நூலகம் திட்டம்