உள்ளடக்கத்துக்குச் செல்

பெட்சைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெட்சைட்டு
Petzite
குவார்ட்சுடன் பெட்சைட்டு - உருமேனியாவில் கிடைத்தது
பொதுவானாவை
வகைதெலூரைட்டு கனிமம்
வேதி வாய்பாடுAg3AuTe2
இனங்காணல்
நிறம்எஃகுச் சாம்பல் முதல் இரும்பு-கருப்பு, பொதுவாக வெண்கல-மஞ்சள் நிறத்தில் இருந்து கறுப்பு நிறமாகவும், மெருகூட்டப்பட்ட பிரிவில் வெளிறிய நீல நிறத்துடன் சாம்பல் வெள்ளை நிறத்திலும் இருக்கும்.
படிக இயல்புமணிமணியாக முதல் பெருந்திரள் பொருண்மைகள்
படிக அமைப்புகனசதுரம்
முறிவுஒழுங்கற்ற துணை சங்குருவம்
விகுவுத் தன்மைபகுதியாக நொறுங்கும்.
மோவின் அளவுகோல் வலிமை2.5 - 3
மிளிர்வுஉலோகத்தன்மை
கீற்றுவண்ணம்சாம்பற் கருப்பு
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகாது
ஒப்படர்த்தி8.7 - 9.14
மேற்கோள்கள்[1][2][3][4]

பெட்சைட்டு (Petzite) என்பது Ag3AuTe2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். நீர்வெப்பப் படிவுகளில் எஃகுச் சாம்பல் நிறத்தில் காணப்படும் இக்கனிமம் ஒரு மென்மையான தெல்லூரைடு கனிமம் என்று வகைப்படுத்தப்படுகிறது. சமநீள படிகங்களாகத் தோன்றும் பெட்சைட்டு பொதுவாக தெலூரியம் மற்றும் தங்கக் கனிமங்களுடன் சேர்ந்த நிலையிலும் பெரும்பாலும் வெள்ளி, பாதரசம் மற்றும் தாமிரத் தனிமங்களுடன் சேர்ந்தும் கிடைக்கிறது.

1845 ஆம் ஆண்டு உருமேனியா நாட்டைச் சேர்ந்த வேதியியலாளர் டபிள்யூ.பெட்சு என்பவர் முதன்முதலில் இக்கனிமத்தை அந்நாட்டின் திரான்சில்வேனியா பகுதியில் கண்டறிந்தார். இதனால் கனிமத்திற்கு பெட்சைட்டு எனப் பெயர் சூட்டப்பட்டது. வில்லியம் காரல் இரிட்டர் வோன் ஆய்திங்கர் கனிமத்தின் பண்புகளை விவரித்ததோடு இதை முதலில் ஆய்வு செய்த பெட்சுக்கு அர்ப்பணித்தார். [2][3]

தங்கச் சுரங்கங்களின் நரம்பிழைகளில் தெலூரைடுகளுடன் சேர்ந்து தோன்றும் பெட்சைட்டு எசைட்டு, சில்வேனைட்டு, கிரென்னரைட்டு, கேலாவரைட்டு, அல்டையிட்டு, மாண்ட்பிராயைட்டு, மெலோனைட்டு, புரோபர்கைட்டு, டெட்ராதைமைட்டு, இரிக்கார்டைட்டு, வல்கேனைட்டு, பைரைட்டு போன்ற கனிமங்களுடன் சேர்ந்த நிலையில் காணப்படுகிறது. [2]

உயுட்டன்போகார்டைட்டு (Ag3AuS2), பிசுசெசரைட்டு (Ag3AuSe2) கனிமங்களுடன் சேர்ந்து உருவாகி உயுட்டன்போகார்டைட்டு கனிமக் குழுவில் பெட்சைட்டு இடம்பெற்றுள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெட்சைட்டு&oldid=2978575" இலிருந்து மீள்விக்கப்பட்டது