இரிக்கார்டைட்டு
இரிக்கார்டைட்டு Rickardite | |
---|---|
தெலூரியத்தின் மீது இரிக்கார்டைட்டு | |
பொதுவானாவை | |
வகை | தெலூரைடு கனிமம் |
வேதி வாய்பாடு | Cu7Te5 |
இனங்காணல் | |
நிறம் | செவ்வூதா (புதியது), |
படிக அமைப்பு | செஞ்சாய்சதுரம் |
மோவின் அளவுகோல் வலிமை | 3 1⁄2 |
மிளிர்வு | உலோகத்தன்மை |
கீற்றுவண்ணம் | சிவப்பு |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகாது |
இரிக்கார்டைட்டு (Rickardite) என்பது Cu7Te5[1] என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். Cu3-x (x = 0 to 0.36)Te2 [2] என்ற பொது வாய்ப்பாட்டையும் இக்கனிமத்தைக் குறிக்கப் பயன்படுத்துகிறார்கள். அமெரிக்காவின் குன்னிசன் கொலராடோ மாகாணத்திலுள்ள வல்கேன் மாவட்டத்தில் அமைந்துள்ள குட் ஓப் சுரங்கத்தில் இக்கனிமம் முதன்முதலாக கண்டறியப்பட்டது[3]. சுரங்கத்தின் பொறியாளர் தாமசு ஆர்தர் இரிக்கார்டு (1864–1953) நினைவாக கனிமத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்டது. தாமசு இரிக்கார்டு இவருடைய சகோதரர் ஆவார்[1]. தாழ் வெப்பநிலையில் நீர்வெப்பக் கனிமமாகக் காணப்படும் இக்கனிமம் வல்கேனைட்டு, வெண்கந்தகம், கேமரோனைட்டு, பெட்சைட்டு, சில்வேனைட்டு, பெர்த்தியிரைட்டு, பைரைட்டு, ஆர்சனோபைரைட்டு, போர்னைட்டு போன்ற கனிமங்களுடன் சேர்ந்து இயற்கையில் தோன்றுகிறது[2].