வல்கேனைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வல்கேனைட்டு
Vulcanite
பொதுவானாவை
வகைதெலூரைடு கனிமம்
வேதி வாய்பாடுCuTe
இனங்காணல்
நிறம்வெளிரியது முதல் வெண்கல மஞ்சள் வரை
படிக இயல்புபொதி, மணிகள், தொகுதிகள்
படிக அமைப்புசெஞ்சாய்சதுரம்
இரட்டைப் படிகமுறல்பொது
பிளப்பு[hk0] நன்று, [h0l] தெளிவில்லை
முறிவுநேர்த்தியாக வெட்டலாம்
மோவின் அளவுகோல் வலிமை1 - 2
மிளிர்வுஉலோகத்தன்மை
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகாது
ஒப்படர்த்தி7.1
பலதிசை வண்ணப்படிகமைவலிமையானது, பிரகாசமான மஞ்சள் முதல் சாம்பல் நீலம் வரை
உருகுதன்மை1.5
மேற்கோள்கள்[1][2][3][4]

வல்கேனைட்டு (Vulcanite) என்பது CuTe என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஓர் அரிய கனிமச் சேர்மமாகும். தாமிர தெலூரைடு கனிமமாக இக்கனிமம் வகைப்படுத்தப்படுகிறது. உலோகத்தன்மை பளபளப்பும் பச்சை அல்லது வெண்கல மஞ்சள் நிறமும் கொண்டதாக உள்ளது. மோவின் அளவுகோலில் வல்கேனைட்டின் கடினத்தன்மை அளவு 1 மற்றும் 2 எனக் கணக்கிடப்படுகிறது. மென்மையும் வழவழப்பும் மிக்க டால்க் மற்றும் பாரிசு சாந்து எனப்படும் கிப்சம் ஆகியவற்றுக்கு இடைப்பட்ட நிலையை இக்கடினத்தன்மை அடையாளப்படுத்துகிறது. செஞ்சாய்சதுரக் கட்டமைப்பில் இக்கனிமம் படிகமாகிறது.

1961 ஆம் ஆண்டு அமெரிக்காவின் குன்னிசன் கொலராடோ மாகாணத்திலுள்ள வல்கேன் மாவட்டத்தில் அமைந்துள்ள குட் ஓப் சுரங்கத்தில் இக்கனிமம் முதன்முதலாக கண்டறியப்பட்டது. கண்டறியப்பட்ட இடத்தின் பெயரே இக்கனிமத்திற்குப் பெயராகச் சூட்டப்பட்டது. சப்பான், உருசியா, சவுதி அரேபியா, நார்வே ஆகிய நாடுகளிலும் சிறிய படிவுகளாக வல்கேனைட்டு கண்டறியப்பட்டது. வெண்கந்தகம், இரிக்கார்டைட்டு, பெட்சைட்டு, சில்வேனைட்டு போன்ற கனிமங்களுடன் இயற்கையில் இது தோன்றுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வல்கேனைட்டு&oldid=2593667" இலிருந்து மீள்விக்கப்பட்டது