மெலோனைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மெலோனைட்டு
Melonite
Melonite-Calaverite-219105.jpg
மெலோனைட்டு கனிமம், குவார்ட்சு கிரிப்பிள் கிரீக் சுரங்கம், கொலராடோ, அமெரிக்கா.
அளவு: 1.3 × 0.9 × 0.4 செ.மீ.
பொதுவானாவை
வகைசல்பைடு கனிமங்கள்
வேதி வாய்பாடுNiTe2
இனங்காணல்
மோலார் நிறை313.89 கி/மோல்
நிறம்வெண்மை சிவப்பு கலந்த வெண்மை
படிக இயல்புபடிகம். பரந்து காணப்படும் மணிகள்
படிக அமைப்புமுக்கோண வடிவமைப்பு
பிளப்பு{0001} தெளிவு
முறிவுநொறுங்கும்
மோவின் அளவுகோல் வலிமை1–1.5
மிளிர்வுஉலோகம்
கீற்றுவண்ணம்அடர் சாம்பல்
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகாது
ஒப்படர்த்தி7.72
அடர்த்தி7.3
புறவூதா ஒளிர்தல்இல்லை
மேற்கோள்கள்[1][2][3][4]

மெலோனைட்டு (Melonite) என்பது NiTe2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஓர் உலோகக் கனிமம் ஆகும். நிக்கல் உலோகத்தின் தெலூரைடு உப்பு மெலோனைட்டு என்று வகைப்படுத்தப்படுகிறது. ஒளிபுகாத் தன்மையுடன் வெண்மை மற்றும் சிவப்பு கலந்த வெண்மை நிறத்தில் காணப்படுகிறது. காற்றில் ஆக்சிசனேற்றம் அடைந்து பழுப்பு நிரமாக மங்கலாகிறது.

பிரடெரிக் அகசுடசு கெந்து 1866 ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் உள்ள காலவெராசு மாகாணத்தின் மெலோன்சு மற்றும் சிடானிசுலாசு சுரங்கங்களில் இக்கனிமத்தைக் கண்டறிந்தார்.

முக்கோண வடிவமைப்பில் 0001 திசைப் பிளவு கொண்ட படிகங்களாக மெலோனைட்டு உருவாகிறது. 7.72 என்ற ஒப்படர்த்தி மதிப்பும் மோவின் கடினத்தன்மை 1-1.5 என்ற மதிப்பும் கொண்ட மெலோனைட்டு ஒரு மென்மையான கனிமமாகக் கருதப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Mineralienatlas
  2. "Melonite Mineral Data". Webmineral.com. பார்த்த நாள் 2011-10-28.
  3. "Melonite mineral information and data". Mindat.org. பார்த்த நாள் 2011-10-28.
  4. "Mieralienatlas Lexikon - Melonit". Mieralienatlas. பார்த்த நாள் 2011-10-28.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மெலோனைட்டு&oldid=2584988" இருந்து மீள்விக்கப்பட்டது