பூர்ணிமா மகதோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூர்ணிமா மகதோ
இசுதான்புல்லில் நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பூர்ணிமா மகதோவுடன் (இடது) தீபிகா குமாரி .
தனிநபர் தகவல்
தேசியம் இந்தியா
பிறப்புஜம்சேத்பூர்
வசிப்பிடம்ஜம்சேத்பூர், சார்க்கண்டு, இந்தியா
விளையாட்டு
நாடுஇந்தியா
விளையாட்டுவில்வித்தை
கழகம்டாடா வில்வித்தை கழகம்
அணிஇந்திய வில்வித்தை அணியின் பயிற்சியாளர்
தொழில்முறையானது1993
சாதனைகளும் விருதுகளும்
மிகவுயர் உலக தரவரிசைதேசியப் போட்டி வெற்றியாளர்
பதக்கத் தகவல்கள்
மகளிருக்கான வில்வித்தை
நாடு  இந்தியா

பூர்ணிமா மகதோ (Purnima Mahato) இந்தியாவின் ஜம்சேத்பூரைச் சேர்ந்த இந்திய வில்லாளரும் வில்வித்தை பயிற்சியாளரும் ஆவார். [1] இவர் 1998 பொதுநலவாய விளையாடுப் போட்டிகளில் இந்திய தேசிய வில்வித்தைப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றுள்ளார். 2008 கோடைகால ஒலிம்பிக்கில் இந்திய தேசிய அணியின் பயிற்சியாளராக இருந்த இவர், 2012 கோடைகால ஒலிம்பிக் அணியின் பயிற்சியாளராகவும் தேர்வு செய்யப்பட்டார். 2013 ஆகத்து 29, அன்று இந்தியக் குடியரசுத் தலைவரிடமிருந்து இவருக்கு துரோணாச்சார்யா விருது வழங்கப்பட்டது. [2] [3] [4] [5]

தொழில்[தொகு]

தனது சிறு வயதில், ஜம்சேத்பூரின் பிர்சாநகரில் ஒரு வில்வித்தை போட்டியை இவர் பார்த்த[6] பின்னர், வில்வித்தையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் பயிற்சி பெற்றார்.[6] 1992ஆம் ஆண்டில் இந்திய தேசிய அணியில் இடம் பிடித்த இவர், அணியுடன் பயிற்சிபெற புது தில்லிக்குச் சென்றார். [6]

ஒரு வில்லாளராக, இவர் தேசிய மற்றும் சர்வதேச வில்வித்தை போட்டிகளில் பல பதக்கங்களைப் பெற்றுள்ளார். [7] இவர் ஒரு இந்திய தேசிய வெற்றியாளரும் ஆவார். [6] 1993 சர்வதேச வில்வித்தை போட்டிகளில், அணி நிகழ்வில் தங்கப்பதக்கம் பெற்றார். [1] 1994 புனே தேசிய விளையாட்டுப் போட்டிகளில், வில்வித்தை ஒன்றில் ஆறு தங்கப் பதக்கங்களை வென்றார். [8] இவர் 1994 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றார்.[6][9] ஆனால் பதக்கம் பெறவில்லை.[6] 1997ஆம் ஆண்டில் தேசியப் போட்டிகளில், இவர் இரண்டு தங்கப் பதக்கங்களைப் பெற்று இரண்டு தேசிய சாதனைகளை படைத்தார். [10] இவர் 1998 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.[6] இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் 30 மீட்டர் வில்வித்தை நிகழ்வில் இவர் நிகழ்த்தியிருந்த தேசிய சாதனையை 1999 இந்திய தேசிய விளையாட்டுப் போட்டிகளில், தோலா பானர்ஜி முறியடித்தார்.

பயிற்சி[தொகு]

இவர் ஒரு வில்வித்தை பயிற்சியாளராகவும் இருக்கிறார். 1994ஆம் ஆண்டு தொடங்கி, டாடா வில்வித்தை கழகத்தில் 2012 ஆம் ஆண்டு வரை பயிற்சியளித்தார். [1][7][11] இவர் தனிப்பட்ட முறையில் பயிற்சியளித்த வில்லாளர்களில் 2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களில் வெற்றி பெற்ற தீபிகா குமாரி ஆவார். [12][13][14][15][16][17] இவர், எசுப்பானியாவில் நடந்த 2005 மூத்தோர் உலக வெளிப்புற வில்வித்தை போட்டி[1] உட்பட இவர், இந்திய தேசிய அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்து வருகிறார். அங்கு இவரது அணி வெள்ளிப் பதக்கம் பெற்றது.[1] 2007ஆம் ஆண்டு சீனாவில் நடந்த மூத்தோர் ஆசிய வில்வித்தைப் போட்டியிலும் இவர் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தார்.[1] அங்கு இவர் பயிற்சியளித்த ஆண்கள் அணி முதலிடத்தையும், இவர் பயிற்சியளித்த பெண்கள் அணி மூன்றாவது இடத்தையும் பிடித்தது. 2008 கோடைகால ஒலிம்பிக்கில் இந்தியாவின் உதவி பயிற்சியாளராக இருந்தார். [18][19] 2008ஆம் ஆண்டு குரோவாசியாவில் நடந்த உலகக் கோப்பையிலும் இவர் இந்திய அணியைப் பயிற்றுவித்தார்.[1] அங்கு இவரது வில்லாளர்கள் இந்த நிகழ்வில் வெள்ளிப் பதக்கத்தையும் வெண்கலப் பதக்கத்தையும் பெற்றனர்.[1] இவர் 2009 உலக இளைஞர் வில்வித்தைப் போட்டிகளில் இந்திய அணிக்குப் பயிற்றுவித்தார். [20] 2010 வில்வித்தை உலகக் கோப்பைப் போட்டிகளில் மூன்று இந்திய வில்லாளர்களுக்குப் பயிற்றுவித்தார். [21] இவர் 2010 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய தேசிய அணியைப் பயிற்றுவித்தார். அங்கு இவரது வில்லாளர்கள் தனிப்பட்ட நிகழ்வுகளில் இரண்டு வெண்கலப் பதக்கங்களைப் பெற்றனர். [22] இவர் 2010 காமன்வெல்த் போட்டிகளில் இந்திய தேசிய அணியின் பயிற்சியாளராக இருந்தார். இவரது வில்லாளர்கள் மூன்று தங்கம் மற்றும் இரண்டு வெண்கல பதக்கங்களைப் பெற்றனர். [7] TURF 2011 உலகளாவிய விளையாட்டு உச்சி மாநாட்டில், இவர் ஆண்டின் பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டார். [11][1] பரணிடப்பட்டது 2012-06-27 at the வந்தவழி இயந்திரம் ராஞ்சியில் 23 சூன் 2012 ஒலிம்பிக் தின ஓட்டக் கொண்டாட்டங்களில் சார்கண்டு அரசிடமிருந்து அந்த ஆண்டின் சிறந்த பயிற்சியாளருக்கான ராம் தயால் முண்டா விருதைப் பெற்றார். .[23][2]

2012 கோடைகால ஒலிம்பிக்கில் தேசிய அணியின் பயிற்சியாளராக இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்த மகதோ தேர்வு செய்யப்பட்டார். [1][24][25]

விருதுகள்[தொகு]

பூர்ணிமா மகாதோ இந்தியக் குடியரசுத் தலைவரிடமிருந்து துரோணாச்சார்யா விருதைப் பெறுகிறார்

2013 ஆகத்து 29 அன்று பூர்ணிமா மகதோவுக்கு இந்தியக் குடியரசுத் தலைவரிடமிருந்து துரோணாச்சார்யா விருது வழங்கப்பட்டது. [2][3][4][5][26] இவர், இந்த விருதுப் பெற்ற சார்கண்டின் முதல் மதிப்பு மிக்க பெண்ணாவார். [5][27]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 Social Post (30 July 2008). "Purnima Mahato selected as Indian Archery team coach". One India. Archived from the original on 16 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 22 July 2012.
  2. 2.0 2.1 "hindu – Five nominated for Dronacharya Awards". Hindu. 8 August 2013. பார்க்கப்பட்ட நாள் 8 August 2013.
  3. 5.0 5.1 5.2 "TATA STEEL – Ms. Purnima Mahato, Tata Steel Employee and Senior Coach at Tata Archery Academy has been bestowed with the prestigious Dronacharya Award". TATA STEEL. 31 August 2013. பார்க்கப்பட்ட நாள் 31 August 2013.[தொடர்பிழந்த இணைப்பு]
  4. 6.0 6.1 6.2 6.3 6.4 6.5 6.6 "Calcutta : Jharkhand". The Telegraph (India). 28 December 2004. Archived from the original on 4 பிப்ரவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 22 July 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. 7.0 7.1 7.2 "What's New". Tata Steel. Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 22 July 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. "Pune Khel". Pune Khel. Archived from the original on 21 April 2013. பார்க்கப்பட்ட நாள் 22 July 2012.
  7. "Pune Khel". Pune Khel. Archived from the original on 21 April 2013. பார்க்கப்பட்ட நாள் 22 July 2012.
  8. "Sport Events in 1997". Hindu.com. Archived from the original on 4 ஆகஸ்ட் 2003. பார்க்கப்பட்ட நாள் 22 July 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  9. 11.0 11.1 "Tata Steel Newsroom – Press Releases". Tata Steel Newsroom. 21 October 2011. பார்க்கப்பட்ட நாள் 22 July 2012.[தொடர்பிழந்த இணைப்பு]
  10. Aprameya. "London Olympics 2012: Who is Deepika Kumari?". One India. பார்க்கப்பட்ட நாள் 22 July 2012.
  11. "The powerpuff girls". Hindustan Times. 4 July 2012. Archived from the original on 21 ஜூலை 2012. பார்க்கப்பட்ட நாள் 22 July 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  12. "Deepika Kumari leads Indian archers' Olympic dream in London". The Times of India. 5 July 2012. பார்க்கப்பட்ட நாள் 22 July 2012.
  13. "Ace archer Deepika Kumari will shoot for Olympic glory". The Times of India. 17 July 2012. பார்க்கப்பட்ட நாள் 22 July 2012.
  14. "Baby Deepika set to take the big step". Indian Express. 3 October 2010. பார்க்கப்பட்ட நாள் 22 July 2012.[தொடர்பிழந்த இணைப்பு]
  15. "Winning an Olympic medal is my only goal: Deepika Kumari". India News. 5 July 2012. பார்க்கப்பட்ட நாள் 22 July 2012.[தொடர்பிழந்த இணைப்பு]
  16. Jayesh Thaker (1 August 2008). "Purnima raring to go". The Telegraph (India). Archived from the original on 13 செப்டம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 22 July 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  17. "Dola & Co. bow out in quarter finals". The Telegraph (India). 11 August 2008. Archived from the original on 21 ஜூன் 2013. பார்க்கப்பட்ட நாள் 22 July 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  18. "Sport / Archery : Indian squad leaves". The Hindu. 12 July 2009. Archived from the original on 16 ஜூலை 2009. பார்க்கப்பட்ட நாள் 22 July 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  19. PTI (13 September 2010). "Indian archers confident before Archery World Cup Grand Final". ATimes Of India. Archived from the original on 3 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 22 July 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  20. "Sport : Indian archers take bronze". தி இந்து. 23 November 2010. Archived from the original on 27 நவம்பர் 2010. பார்க்கப்பட்ட நாள் 22 July 2012.
  21. "Sports Personnel Received Awards". The Prabhat Khabar. 24 June 2012. பார்க்கப்பட்ட நாள் 25 July 2012.
  22. Special Correspondent (15 July 2012). "Sport / Other Sports : Warm send-off for Indian archery squad". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 22 July 2012.
  23. "Pune Mirror – Pune Mirror". Punemirror.in. 16 July 2012. Archived from the original on 17 February 2013. பார்க்கப்பட்ட நாள் 22 July 2012.
  24. "Telegraph – Purnima bags Dronacharya with ace pupils in quiver". Telegraph. 24 August 2013. Archived from the original on 24 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 24 August 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  25. "Times Of India – A great honour for me: Purnima Mahato". Times of India. 1 September 2013. Archived from the original on 16 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 1 September 2013.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூர்ணிமா_மகதோ&oldid=3791436" இலிருந்து மீள்விக்கப்பட்டது