தோலா பானர்ஜி
தனிநபர் தகவல் | |||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
தேசியம் | இந்தியா | ||||||||||||||||||||||||||||
பிறப்பு | 2 சூன் 1980 பராநகர், வடக்கு 24 பர்கனா மாவட்டம், மேற்கு வங்காளம் | ||||||||||||||||||||||||||||
தொழில் | விளையாட்டு வீரர் (வில்வித்தையாளர்) | ||||||||||||||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
|
தோலா பானர்ஜி (Dola Banerjee) (பிறப்பு 2 சூன் 1980) வில்வித்தை போட்டியில் பங்கேற்கும் ஒரு இந்திய விளையாட்டுப் பெண்ணாவார். [1]
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]அசோக் பானர்ஜி மற்றும் கல்பனா பானர்ஜி ஆகியோரின் மகளாக கொல்கத்தா அருகே பராநகரில் பிறந்தார். இவர் பராநகர் ராஜ்குமாரி நினைவு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் படித்தார். தனது எட்டு வயதில், பராநகர் வில்வித்தை சப்க்கத்தில் சேர்ந்தார். [2] இவரது முதல் சர்வதேச தோற்றம் 1996இல் சான்டியாகோவில் நடந்த இளைஞர் உலகப் போட்டிகளில் இருந்தது [3]
தொழில்
[தொகு]தோலா பானர்ஜி தனது 9 வயதில் 1990ஆம் ஆண்டில் பராநகர் வில்வித்தை சங்கத்தில் தனது பயிற்சியினைத் தொடங்கினார். இவர் 1996 இல் சாண்டியாகோவின் இளைஞர் உலகப் போட்டிகளில் 16 வயதில் பிரதிநிதித்துவப்படுத்தினார். அப்போதிருந்து இவர் இந்திய மகளிர் வில்வித்தை அணியின் வழக்கமான உறுப்பினராக இருந்து வருகிறார். இவர், 2004 கோடைகால ஒலிம்பிக்கில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். பெண்கள் தனிநபர் தரவரிசை சுற்றில் 13வது இடத்தைப் பிடித்தார். தகுதிச் சுற்றில் 52 வது தரவரிசையில் இருந்த தென்னாப்ரிக்காவின் கிர்ஸ்டின் ஜீன் லூயிஸை எதிர்கொண்டார்.இதில் 141-131 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியடைந்து, பெண்களின் தனிப்பட்ட வில்வித்தை மொத்தத்தில் 52 வது இடத்தைப் பிடித்தார். இந்திய பெண்கள் வில்வித்தை அணியில் 8 வது இடத்தில் உறுப்பினராகவும் இருந்தார்.
இவர், 2005ஆம் ஆண்டில் இந்திய அரசால் அருச்சுனா விருது வழங்கப்பட்ட இரண்டாவது பெண் வில்லாளராவார். [4]
சொந்த வாழ்க்கை
[தொகு]இவருக்கு தொழிலதிபரான மேததீப் பானர்ஜி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு தியான் என்ற ஒரு மகன் இருக்கிறார். இவரது தம்பி இராகுல் பானர்ஜியும் ஒரு வில்லாளன். மேலும், பாடகர்களான ஷான் மற்றும் சகாரிகா ஆகியோரின் உறவினரும் ஆவார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "DOLA BANERJEE". Archived from the original on 2012-09-16.
- ↑ My Fundays by Dola Banerjee in The Telegraph, 14 September 2007
- ↑ "Dola Banerjee, biography". archeryworldcup.org. Archived from the original on 22 July 2011.
- ↑ Idol Dola becomes an icon- Hindustan Times[தொடர்பிழந்த இணைப்பு]