பூக்கள் விடும் தூது
பூக்கள் விடும் தூது | |
---|---|
![]() திரைப்படச் சுவரொட்டி | |
இயக்கம் | ஸ்ரீதர் ராஜன் |
தயாரிப்பு | ஸ்ரீதர் ராஜன் |
திரைக்கதை | டி. ராஜேந்தர் |
இசை | டி. ராஜேந்தர் |
நடிப்பு | மோனிசா உன்னி ஸ்ரீவித்யா ஹரிஹரன் |
ஒளிப்பதிவு | சௌமெந்து ராய் |
படத்தொகுப்பு | டி. ஆர். சேகர் |
கலையகம் | சிறீ சிவகரி பிலிம்சு |
விநியோகம் | சிம்பு சினி ஆர்ட்சு |
வெளியீடு | 21 அக்டோபர் 1987 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பூக்கள் விடும் தூது (Pookkal Vidum Thudhu) என்பது 1987 இல் வெளிவந்த இந்தியத் தமிழ் இளம் பருவ காதல் திரைப்படமாகும்.[1] ஸ்ரீதர் ராஜன் தயாரித்து இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தின் திரைக்கதை, இசையமைப்புப் பணிகளை டி. ராஜேந்தர் மேற்கொண்டார். மலையாளத்தில் வெளிவந்த நகக்ஷதங்கள் திரைப்படத்தின் மறுஆக்கமாகும். இதில் மோனிசா உன்னி, ஸ்ரீவித்யா, ஹரிஹரன் ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 1987 அக்டோபர் 21 அன்று வெளியானது.
கதைச்சுருக்கம்
[தொகு]ஹரி தனது ஆதிக்க மாமாவின் பிடியில் இருந்து தப்பித்து கலைவாணியின் வீட்டில் தஞ்சம் அடைகிறார். அவர் கலைவாணியின் பணிப்பெண் கௌரியைக் காதலிக்கிறார். ஆனால் கலைவாணியின் காது கேளாத ஊமை மகளும் அவரைக் காதலிக்கிறார்.
நடிகர்கள்
[தொகு]- மோனிசா உன்னி - கௌரி
- ஸ்ரீவித்யா - கலைவாணி
- ஹரிஹரன் - ஹரி
- கவுண்டமணி - தர்மதுரை
- ஜனகராஜ் - முருகேசன்
- செந்தில் - மன்மதா
- வெண்ணிற ஆடை மூர்த்தி - திரைப்படத் தயாரிப்பாளர்
தயாரிப்பு
[தொகு]பூக்கள் விடும் தூது, நகக்ஷதங்கள் என்ற மலையாளத் திரைப்படத்தின் மறுஆக்கமாகும். ஸ்ரீதர் ராஜன் இயக்கிய மூன்றாவதான இறுதித் திரைப்படமாகும். மலையாளத் திரைப்படத்தின் முன்னணி நடிகையான மோனிஷா தனது பாத்திரத்தை மீண்டும் நடித்தார். முன்னணி நடிகர் ஹரிஹரனின் குரலுக்கு இரவிசங்கர் தேவநாராயணன் பின்னணி பேசியிருந்தார்.
பாடல்கள்
[தொகு]பாடல் வரிகளை டி. ராஜேந்தர் எழுதி இசையமைத்திருந்தார்.[2][3] "கதிரவனைப் பார்த்து" பாடல் கர்நாடக இராகமான பௌலியில் அமைக்கப்பட்டது.[4]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "கதிரவனைப் பார்த்து" | கே. ஜே. யேசுதாஸ் | 4:51 | |||||||
2. | "இதமான இராகம்" | பி. சுசீலா | 4:53 | |||||||
3. | "மூங்கில் காட்டோரம்" (ஆண்குரல்) | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4:38 | |||||||
4. | "பூவும் பூவும்" | மனோ | 4:31 | |||||||
5. | "இளஞ்சிட்டு" | மலேசியா வாசுதேவன் | 4:51 | |||||||
6. | "மூங்கில் காட்டோரம்" (சோகம்) | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 1:35 | |||||||
7. | "பாடு பாட்டு" | கே. எஸ். சித்ரா | 1:17 | |||||||
8. | "மூங்கில் காட்டோரம்" (சோடிப் பாடல்) | கே. எஸ். சித்ரா, எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 3:20 | |||||||
9. | "கால்கள் ஏறுது" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4:43 | |||||||
மொத்த நீளம்: |
34:39 |
வெளியீடு
[தொகு]பூக்கள் விடும் தூது 1987 அக்டோபர் 21 அன்று தீபாவளியின் போது வெளியிடப்பட்டது. இப்படத்தை சிம்பு சினி ஆர்ட்சு விநியோகித்தது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "City Entertainments". 2 November 1987. https://news.google.com/newspapers?id=tYRlAAAAIBAJ&sjid=tZ4NAAAAIBAJ&pg=1443%2C1468857.
- ↑ "Pookkal Vidum Thoodhu (1987)Tamil Super Hit Film LP Vinyl Record by T.Rajendhar".
- ↑ "Pookkal Vidum Thudhu (Original Motion Picture Soundtrack)". 11 September 1987.
- ↑ Sundararaman. Raga Chintamani: A Guide to Carnatic Ragas Through Tamil Film Music. Pichhamal Chintamani.