பு. தி. நரசிம்மாச்சார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பு. தி. நரசிம்மாச்சார் (பு தி ந)
பிறப்புமார்ச்சு 17, 1905(1905-03-17)
மேல்கோட்டை, பாண்டவபுரா வட்டம் , மண்டியா மாவட்டம், கர்நாடகா
இறப்பு13 அக்டோபர் 1998(1998-10-13) (அகவை 93)
பெங்களூர், கர்நாடகா
தேசியம்இந்தியா
பணிஎழுத்தாளர், கவிஞர்
அரசியல் இயக்கம்கன்னடம்: நவோதயா

புரோகித திருநாராயண நரசிம்மாச்சார் (Purohita Thirunarayana Narasimhachar) (1905 மார்ச் 17 - 1998 அக்டோபர் 23 ) பொதுவாக புதிந என்று அழைக்கப்படும் இவர் ஓர் நாடக ஆசிரியரும் மற்றும் கன்னட மொழி கவிஞரும் ஆவார். குவெம்பு மற்றும் த. ரா. பேந்திரே ஆகியோருடன் கன்னட நவோதயா கவிஞர்களில் நன்கு அறியப்பட்ட மூவராக இருந்தார். [1] இவர் ஒரு சாகித்ய அகாதமி சகாவாகவும் மற்றும் 1991இல் கர்நாடக அரசு வழங்கிய பம்பா விருதை வென்றவரும்ஆவார். [2]

வாழ்க்கை மற்றும் தொழில்[தொகு]

புதிந 1905 மார்ச் 17 அன்று கர்நாடகாவின் மண்டியா மாவட்டத்தில் உள்ள மேல்கோட்டை என்ற ஊரில் ஒரு கட்டுப்பாடான ஐயங்கார் குடும்பத்தில் பிறந்தார். [3]

ஒரு எழுத்தாளர் என்பதைத் தவிர, புதிந மைசூர் மாநில இராணுவத்திலும் பின்னர் மைசூர் மாநில சட்டமன்றத்திலும் பணியாற்றினார். [4] இவர் 1998 அக்டோபர் 23, அன்று காலமானார்.   [ மேற்கோள் தேவை ]

இலக்கிய பங்களிப்புகள்[தொகு]

புதிந கன்னட இலக்கியத்தின் நவோதயா பாணியின் வினையூக்கிகளில் ஒருவராக இருந்தார். இலட்சுமிநாராயண பட் என்பவரின் கருத்துப்படி, "ஒரு பரந்த அளவில், நவோதயா பாணியிலான இலக்கியத்தின் வளர்ச்சி புதிநவின் எழுத்துக்களின் வளர்ச்சியை ஒத்திருக்கிறது". [5] அனாதே என்ற இவர் தனது முதல் கவிதைத் தொகுப்பில், ஒரு எளிய மொழியையும் பாணியையும் பயன்படுத்தி வாழ்க்கையின் குறிப்பிடத்தக்க தருணங்களைப் பற்றிய ஆழமான நுண்ணறிவுகளை வெளிப்படுத்துகிறார். புதிநவின் பல எழுத்துக்கள் இயற்கையின் அழகையும் கம்பீரத்தையும் விவரிக்கின்றன. ஆன்மீகத்தின் எல்லையில் உள்ளன. [6] இவரது நன்கு அறியப்பட்ட இரண்டு எழுத்துக்கள் காமம் மற்றும் தர்மத்திற்கு இடையிலான மோதலை நுட்பமாக விவரிக்கும் 'அகாலி', மற்றும் கோகுலத்திலிருந்து கிருட்டிணர் வெளியேறியதை விவரிக்கும் 'கோகுலா நிர்கமனா' ஆகிய இரண்டுமாகும். [7] புதிநவின் கட்டுரைகள் இவரது மேலாதிக்க கவிதை ஆளுமையை பிரதிபலிக்கின்றன. [8]

விருதுகள்[தொகு]

  • 1991இல் இந்திய அரசிடமிருந்து பத்மசிறீ1 விருது வழங்கப்பட்டது . [9]

குறிப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. K. M. George (1992), p642
  2. P. T. Narasimhachar (2001), Back cover
  3. "Birth centenary of PuTiNa". ThatsKannada.com. 2011-09-29 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2020-05-13 அன்று பார்க்கப்பட்டது.
  4. "House of PuTiNa at Melkote is a cultural icon". ThatsKannada.com. 20 ஜூலை 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 21 March 2009 அன்று பார்க்கப்பட்டது.
  5. "An analysis of Pu. Ti. Narasimhachar's work". OurKarnataka.com. 5 டிசம்பர் 2008 அன்று மூலம் பரணிடப்பட்டது. 21 March 2009 அன்று பார்க்கப்பட்டது.
  6. K. M. George (1992), p174
  7. Sisir Kumar Das (1995), p766
  8. Amaresh Datta (1988), p1220
  9. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. நவம்பர் 15, 2014 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. July 21, 2015 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]