உள்ளடக்கத்துக்குச் செல்

புவனேசுவரி குமாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புவனேசுவரி குமாரி (Bhuvneshwari Kumari) இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் பெண்கள் சுவர்ப்பந்து வெற்றியாளராவார். [1]

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

மிட்டாய் இளவரசி என்றும் அழைக்கப்படும் புவனேசுவரி குமாரி இராசத்தானின் அல்வார் அரச குடும்பத்தில் பிறந்தார். மகாராசா தேச் சிங் பிரபாகர் பகதூரின் பெயர்த்தியாகவும் இவர் அறியப்படுகிறார். [2] குமாரி தில்லி பல்கலைக்கழகத்தில் படித்தார் .

தொழில்

[தொகு]

1977 ஆம் ஆண்டு முதல் 1992 ஆம் ஆண்டு வரை புவனேசுவரி குமாரி தொடர்ச்சியாக 16 ஆண்டுகள் பெண்கள் தேசிய சுவர்ப்பந்து விளையாட்டு வெற்றியாளராக இருந்தார். [3]

41 மாநில பட்டங்கள் மற்றும் இரண்டு பன்னாட்டு பட்டங்களை புவனேசுவரி வென்றுள்ளார். குறிப்பாக கென்ய நாட்டின் திறந்தநிலை போட்டிகள் 1988 மற்றும் 1989 ஆகியனவாகும்.

இவரது சாதனைகளுக்காக 1982 ஆம் ஆண்டு அருச்சுனா விருதும் 2001 ஆம் ஆண்டில் பத்ம சிறீ விருதும் வழங்கப்பட்டன.

சைரசு போஞ்சாவுடன் சேர்ந்து இந்திய மகளிர் சுவர்ப்பந்து அணியின் பயிற்சியாளராகவும் புவனேசுவரி உள்ளார். இந்தோனேசியாவின் யகார்த்தாவில் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்தியக் குழுவுக்கு இவர்கள் பயிற்சி அளித்தனர். [4]

அங்கீகாரம்

[தொகு]
  • 1982 இல் அருச்சுனா பவிருது
  • 2001 இல் பத்மஸசிறீ விருது [5]
  • தில்லி விளையாட்டு பத்திரிக்கையாளர் சங்க விருது (1983 ஆம் ஆண்டுக்கான சிறந்த விளையாட்டு பெண்)
  • இராசத்தான் விளையாட்டு விருதுக் குழு 1984
  • மகாராணா மேவார் அறக்கட்டளை "ஆரவளி விருது" (1990 ஆம் ஆண்டின் மிகச்சிறந்த விளையாட்டு வீரருக்கு)
  • கே.கே. பிர்லா அறக்கட்டளை விளையாட்டுக்கான விருது (1991 இல் சிறந்த செயல்திறனுக்காக)
  • பாம்பே விளையாட்டுப் பத்திரிகையாளர்கள் சங்க விருது (1992 ஆம் ஆண்டிற்கான சிறந்த விளையாட்டு வீரருக்காக)
  • லிம்கா சாதனைப் புத்தகத்தில் புவனேசுவரியின் பெயர் பட்டியலிடப்பட்டுள்ளது (1992 ஆம் ஆண்டின் விளையாட்டு நபருக்காகவும் மற்றும் இந்திய விளையாட்டுகளில் அதிக பட்டங்களை வென்றதர்க்காகவும்)
  • இராசத்தான் ஒலிம்பிக் சங்க விருது - மிகச்சிறந்த பெண் விளயாட்டு வீரர் 1993 – 94
  • விளங்குபவர்களுக்கான மகாராசா சவாய் மாதோ சிங் விருது

மேற்கோள்கள்

[தொகு]
  1. "ALWAR". 2002-07-24. Archived from the original on 2002-07-24. பார்க்கப்பட்ட நாள் 2019-01-01.
  2. "Alwar". Archived from the original on 2018-09-30. பார்க்கப்பட்ட நாள் 2021-08-16.
  3. "Squash Rackets Federation of India". Archived from the original on 2019-01-02. பார்க்கப்பட்ட நாள் 2019-01-01.
  4. "Indian squash players question role of coaches Cyrus Poncha and Bhuvneshwari Kumari in Asian Games contingent". The Indian Express (in Indian English). 2018-08-14. பார்க்கப்பட்ட நாள் 2019-11-23.
  5. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=புவனேசுவரி_குமாரி&oldid=3564334" இலிருந்து மீள்விக்கப்பட்டது