உள்ளடக்கத்துக்குச் செல்

புளோரோவசிட்டோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புளோரோவசிட்டோன்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
1-புளோரோபுரோபேன்-2-ஒன்
வேறு பெயர்கள்
புளோரோ அசிட்டோன்; 1-புளோரோ-2-புரோப்பனோன்
இனங்காட்டிகள்
430-51-3
ChemSpider 21171516
EC number 207-064-0
InChI
  • InChI=1S/C3H5FO/c1-3(5)2-4/h2H2,1H3
    Key: MSWVMWGCNZQPIA-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 9889
  • CC(=O)CF
பண்புகள்
C3H5FO
வாய்ப்பாட்டு எடை 76.07 g·mol−1
தோற்றம் colorless liquid
அடர்த்தி 1.054 கி/மி.லி
கொதிநிலை 75 °C (167 °F; 348 K)
தீங்குகள்
GHS pictograms The flame pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS) The skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H225, H300, H310, H330
P210, P233, P240, P241, P242, P243, P260, P262, P264, P270, P271, P280, P284, P301+310
தீப்பற்றும் வெப்பநிலை 7 °C (45 °F; 280 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

புளோரோவசிட்டோன் (Fluoroacetone) C3H5FO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம புளோரின் சேர்மமாகும்.[1][2] முப்புளோரோவசிட்டோனில் மூன்று புளோரின் அணுக்கள் இருக்கின்றன ஆனால் இச்சேர்மத்தில் ஒரே புளோரின் அணு மட்டுமே உள்ளது. சாதாரண நிலைகளில் புளோரோவசிட்டோன் நிறமற்ற நீர்மமாகும். எளிதில் தீப்பற்றுவதும் உயர் நச்சுத்தன்மை கொண்டிருப்பதும் இதன் இயல்புகளாகும்.[3] இச்சேர்மத்தின் புகை காற்றுடன் கலக்கும் போது வெடிக்க நேரிடும்.

தயாரிப்பு

[தொகு]

மூவெத்திலமீன் மூவைதரோபுளோரைடுடன் புரோமோவசிட்டோனைச் சேர்த்து வினைபுரியச் செய்து புளோரோவசிட்டோனைத் தயாரிக்கிறார்கள்.

பயன்பாடுகள்

[தொகு]

உயர் புளோரோகீட்டோன்களைத் தயாரிக்க புளோரோவசிட்டோன் ஒரு முன்னோடிச் சேர்மமாகப் பயன்படுகிறது. பெராக்சிமோனோகந்தக அமிலத்தின் கீட்டோன்-வினையூக்கிய சிதைவு வினையின் இயக்கவியலை ஆய்வதற்கு புளோரோவசிட்டோன் ஒரு வினையூக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது.[4] புரோமோவசிட்டோன் அல்லது குளோரோவசிட்டோன் போன்ற பிற ஆலசனேற்றம் செய்யப்பட்ட அசிட்டோன் வழிப்பெறுதிகளுக்கு மாறாக புளோரோவசிட்டோன் ஒரு கண்ணீர் வரவழைக்கும் பொருளாகப் பயன்படுத்தப்படுவதில்லை.

இவற்ரையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Fluoroacetone Basic information". chemicalbook.com. பார்க்கப்பட்ட நாள் 1 June 2017.
  2. Newallis, Peter E.; Lombardo, Pasquale (1965). "Fluoro Ketones. III. Preparation and Thermal Decomposition of Fluoroacetone Hemiketal Esters" (in English). J. Org. Chem. 30 (11): 3834–3837. doi:10.1021/jo01022a055. 
  3. "Substance information". echa.europa.eu. பார்க்கப்பட்ட நாள் 1 June 2017.
  4. "Fluoroacetone". Sigma Aldrich. sigmaaldrich.com. பார்க்கப்பட்ட நாள் 1 June 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புளோரோவசிட்டோன்&oldid=3154537" இலிருந்து மீள்விக்கப்பட்டது